உணவகத்தில் கூடுதலாக சால்னா தராததால் மேலாளரை தாக்கி, உணவகத்தை சேதப்படுத்திய 2 இளைஞர்கள் கைது!

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள உணவகத்தில் கூடுதலாக சால்னா தராததால், மேலாளரை தாக்கி, உணவகத்தை சேதப்படுத்திய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். நேற்றிரவு உணவகத்திற்கு வந்த கிருஷ்ணகுமார், ஜெய் கணேஷ் ஆகிய இருவர், பிரைட் ரைஸ் வாங்கி, கூடுதலாக சால்னா மற்றும் சாஸ் கேட்டுளனர். தேவையான அளவு தான் தர முடியும் என உணவக மேலாளர் கூறியதால் ஆத்திரமடைந்த இருவரும், கரண்டி மற்றும் செங்கல்லைக் கொண்டு மேலாளரை தாக்கியதோடு, உணவகத்தில் இருந்த பாத்திரங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். … Read more

காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன நாள் விழா: காங். கொடிக்கு மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மரியாதை

டெல்லி : காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி கொடிக்கு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். டெல்லி மட்டுமில்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் விழா நடைபெற்றது. டெல்லியில் … Read more

மகாராஷ்டிராவுக்கு ஒரு அங்குலம் நிலம்கூட விட்டுத்தர மாட்டோம்: கர்நாடக காங்கிரஸ் தலைவர்

பெங்களூரு: கர்நாடகாவின் ஒரு அங்குலம் நிலம்கூட மகாராஷ்டிராவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடகாவில் ‘எல்லை’ப் பிரச்சினை என்று எதுவும் இல்லை. மகாராஷ்டிராவிலும், கர்நாடகாவிலும் இருக்கும் பாஜக அரசுகள்தான் இதை பிரச்சினையாக்குகின்றன. கர்நாடகாவிலும், மகாராஷ்டிராவிலும், மத்தியிலும் பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது. மூன்று இன்ஜின் ஆட்சி இது. கர்நாடகாவின் ஒரு அங்குலம் நிலத்தையும் நாங்கள் மகாராஷ்டிராவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம். மகாராஷ்டிராவும் இதற்காக முயலக் … Read more

3 நாளில் 39 பேருக்கு கொரோனா; சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு.!

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா இந்திய, தமிழக சுகாதார கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க எச்சரித்துள்ளது. அதிக மக்கள் நெருக்கம் உள்ள நாடான இந்தியாவில் புதிய வகை கொரோனா மிக வேகமாக பரவ வாய்ப்புள்ளதால் அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. டிசம்பர் 24ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்படி டிசம்பர் 24, … Read more

கணவரை தாக்கிய கொள்ளையர்கள்… தடுக்க வந்த நடிகை சுட்டுக்கொலை

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் வழிப்பறி கொள்ளையை தடுக்க முயன்ற ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை இன்று (டிச. 28) சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். நடிகை ரியா குமாரி என்பவர் தனது கணவரும், திரைப்பட தயாரிப்பாளருமான பிரகாஷ் குமாரும் அவர்களது இரண்டு வயது மகளும் காரில் தேசிய நெடுஞ்சாலை 16 வழியாக கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாக்னன் காவல் நிலையப் பகுதியில் உள்ள மகிஸ்ரேகா அருகே இன்று காலை 6 மணியளவில் … Read more

ஜம்மு – காஷ்மீர், லே – லடாக் பாதுகாப்பு, மேம்பாடு குறித்து அமித்ஷா ஆலோசனை

டெல்லி: ஜம்மு – காஷ்மீர் மற்றும் லே – லடாக் பாதுகாப்பு, மேம்பாடு குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியில் முதல்நிலை ஆளுநர்கள் உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

தேவாலயத்தில் தாக்குதல்; குழந்தை இயேசு சிலை உடைப்பு: உண்டியல் அபேஸ்..!

கர்நாடகாவில், கிறிஸ்துமஸ் பண்டிகை நடந்த 2 நாட்களுக்குள் தேவாலயம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் மைசூர் மாவட்டம் பெரியபட்டினத்தில் புனித மேரி தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வழிபாட்டு தலத்தில் இருந்த குழந்தை இயேசுவின் சிலையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த 4 உண்டியல்களை எடுக்க முயற்சித்துள்ளனர். அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது. ஆனால், அதில் ஒரு உண்டியலை அந்த கும்பல் எடுத்துச்சென்றுள்ளது. திருட்டு நோக்கத்தோடு இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாக … Read more

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மருத்துவமனையில் அனுமதி

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தயார் ஹீராபென், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தயார் ஹீராபென் கடந்த ஜூன் மாதம் 100-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சமீபத்தில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச் சாவடிக்கே வந்து அவர் வாக்களித்தார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அகமதாபாத் வந்த பிரதமர் நரேந்திர மோடி, தாயார் ஹீராபென்னை சந்தித்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் … Read more

மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து

டெல்லி: தாய்க்கும் மகனுக்கும் இடையிலான அன்பு முடிவில்லாதது மற்றும் விலைமதிப்பற்றது. அகமதாபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் விரைவில் குணமடைய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் உலகக் கோப்பை ஹாக்கி: முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு..!

வரும் 2023-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. 16 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா தொடரை நடத்தும் அணியாக பங்கேற்கிறது. ஏற்கனவே, கடந்த 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய … Read more