பயணிகள் விமானங்களை இந்தியாவில் தயாரிக்க ஆலை தொடங்கப்படுமா?: பாரிவேந்தர் கேள்வி

டெல்லி : பயணிகள் விமானங்களை இந்தியாவில் தயாரிக்க ஆலை தொடங்கப்படுமா என மக்களவையில் எம்.பி.பாரிவேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். ஹிந்துஸ்தான் ஏரோனாடிக் நிறுவனம் போக்குவரத்து விமான தயாரிப்பு, கருவிகள் தயாரிப்பில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும், வதோதரா விமான நிலையம் அருகே 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வி.கே.சிங் பதில் அளித்தார்.   

Income Tax: வருமான வரி செலுத்துவோருக்கு நல்ல செய்தி, இனி இதற்கு வரி விலக்கு கிடைக்கும்

வருமான வரி: வருமான வரி என்பது வரி வரம்புக்குள் வரும் அனைத்து இந்திய குடிமக்களும் செலுத்தவேண்டிய ஒரு முக்கியமான வரியாகும். நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவருக்கும் இந்த வரி முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது இது தொடர்பான ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது. வருமான வரி செலுத்துபவர்களுக்கு அரசாங்கம் பெரிய நிவாரணம் கொடுக்கப் போகிறது. வரி செலுத்துவோருக்கு விலக்கு அளிக்கும் வகையில் பெரிய அளவில் நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் புதிய உத்தரவை … Read more

5-வது முறையாக 142 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம்

கேரளா: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 5-வது முறையாக 142 அடியை எட்டியுள்ளது. உச்சநீதிமன்ற ஆணைப்படி நீர்மட்டம் 5-வது முறையாக 142 அடியாக உயர்த்தப்பட்டதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 2014-ம் ஆண்டு முதல்முறை 142 அடியாக உயர்ந்த நிலையில் 2015, 2018, 2021-ம் ஆண்டுகளிலும் எட்டியது.

கங்கையில் கழிவு நீர் அகற்றும் திட்டம்: ரூ.2,700 கோடி ஒதுக்கீடு..!

கங்கை ஆற்றுப்படுகையில் கழிவு நீரை அகற்றும் திட்டத்திற்கு ரூ.2,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள கங்கை ஆற்றுப் படுகையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக, ‘கங்கை தூய்மை தேசிய இயக்கம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 46-வது செயற்குழு கூட்டம் தலைமை இயக்குநர் ஜி அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் … Read more

கர்நாடகாவில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் – புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடு

பெங்களூரு: கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர், பெலகாவியில் நேற்று கூறியதாவது: மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி கர்நாடகாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை. அதேவேளையில் முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை கடைபிடிப் பது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது உள்ளிட்டவற்றை மக்கள் தாமாக முன்வந்து பின்பற்ற வேண்டும். பள்ளி, கல்லூரி, திரையரங்கு, உணவகம், மதுபான விடுதி, கேளிக்கை விடுதி, உள் அரங்குகள் உட்பட அனைத்து பொது இடங்களிலும் அனைவரும் … Read more

கொரோனாவை எதிர்கொள்ள தமிழகம் உள்பட நாடு முழுவதும் அவசரகால ஒத்திகை தொடக்கம்; ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடக்கி வைத்தார்

சென்னை: கொரோனாவை கையாள்வதற்கான அவசரகால தடுப்பு ஒத்திகை தமிழகம் உள்பட நாடு முழுவதும் தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா அவசரகால ஒத்திகை நடைபெற்று வருகிறது. கொரோனா அறிகுறிகளோடு வரும் நபரை பரிசோதித்து அனுமதி அளிப்பது குறித்து ஒத்திகை பார்க்கப்படுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார். சீனா, தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பிஎஃப்-7 வகை தொற்று … Read more

15 வயது மகளின் ஆபாச வீடியோ… எதிர்த்து போராடிய அப்பாவை அடித்தே கொன்ற கொடுமை!

குஜராத்தின் நடியாட் பகுதியை சேர்ந்த எல்லை பாதுகாப்பு வீரரொருவர், தன் மகள் தொடர்பாக பரவிய ஆபாச வீடியோவை எதிர்த்து, அதை வெளியிட்டவரின் குடும்பத்துக்கு எதிராக போராடிய நிலையில், அவர்களால் அடித்தே கொல்லப்பட்டிருக்கிரார். இதுதொடர்பாக தற்போது காவல்துறையினர் வழக்குப்பதிந்துள்ளனர். குறிப்பிட்ட அந்த எல்லை பாதுகாப்பு வீரருக்கு, 15 வயதில் பெண் குழந்தை இருக்கிறார். அந்த சிறுமியை ஆபாச வீடியோ எடுத்த பள்ளி மாணவனொருவன் (அவருக்கும் 15 வயது), அதை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். இவ்விவகாரம் தொடர்பாக அம்மாணவனின் வீட்டுக்கு சென்ற … Read more

நாடு முழுவதும் இன்று நோய் தடுப்பு ஒத்திகை!

புதிய வகை கொரோனாவை எதிர்கொள்வது குறித்து நாடு முழுவதும் இன்று நோய் தடுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகளை பீதியிலேயே வைத்திருக்கிறது. உலகம் முழுவதும் பல கோடி மக்களை பாதித்த இந்த வைரஸ், லட்சக்கணக்கான மக்களின் உயிரையும் பறித்து விட்டது. இந்த எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கொரோனா வைரஸ் அடிக்கடி மாறுபாடு … Read more

ஆங் சான் சூகி விடுதலையாவாரா?..என்று தீர்ப்பு?….

ஆங் சான் சூகிக்கு எதிராக மீதமுள்ள ஐந்து குற்றச்சாட்டுகள் மீதான தீர்ப்பை மியான்மர் ராணுவ நீதிமன்றம் வரும் 30-ந் தேதி வழங்கவுள்ளது. மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (77 வயது). இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி ஆங் சாங் … Read more

’இந்திய வரலாறு என்ற பெயரில் பொய் கதைகள்’ – வீர பாலகர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வேதனை

புதுடெல்லி: இந்தியாவின் வீர வரலாறு தன்னம்பிக் கையை வளர்க்கும். ஆனால் இந்திய வரலாறு என்ற பெயரில் பொய் கதைகள் கற்பிக்கப்படுகின்றன என்று பிரதமர்நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார். பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த 1666-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி சீக்கியர்களின் 10-வது குரு கோவிந்த் சிங் பிறந்தார். அவரது தலைமையிலான சீக்கிய படைகளுக்கும் முகலாய மன்னர் அவுரங்கசீப் படைகளுக்கும், இடையே பல்வேறு போர்கள் நடைபெற்றன. கடந்த 1705-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி பஞ்சாபின் சம்கவுர் … Read more