ஆங் சான் சூகி விடுதலையாவாரா?..என்று தீர்ப்பு?….

ஆங் சான் சூகிக்கு எதிராக மீதமுள்ள ஐந்து குற்றச்சாட்டுகள் மீதான தீர்ப்பை மியான்மர் ராணுவ நீதிமன்றம் வரும் 30-ந் தேதி வழங்கவுள்ளது. மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (77 வயது). இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி ஆங் சாங் … Read more

’இந்திய வரலாறு என்ற பெயரில் பொய் கதைகள்’ – வீர பாலகர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வேதனை

புதுடெல்லி: இந்தியாவின் வீர வரலாறு தன்னம்பிக் கையை வளர்க்கும். ஆனால் இந்திய வரலாறு என்ற பெயரில் பொய் கதைகள் கற்பிக்கப்படுகின்றன என்று பிரதமர்நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார். பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த 1666-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி சீக்கியர்களின் 10-வது குரு கோவிந்த் சிங் பிறந்தார். அவரது தலைமையிலான சீக்கிய படைகளுக்கும் முகலாய மன்னர் அவுரங்கசீப் படைகளுக்கும், இடையே பல்வேறு போர்கள் நடைபெற்றன. கடந்த 1705-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி பஞ்சாபின் சம்கவுர் … Read more

குஜராத் துவாரகா பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகில் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல்

குஜராத்: குஜராத் மாநிலம் துவாரகா பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ரூ.1300 கோடி மதிப்பிலான 40 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. படகில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பேரை கைது செய்து கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025-க்குள் காச நோய்க்கு முற்றுப்புள்ளி…மத்திய அரசு சூளுரை!…

‘2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழித்து கட்டுவதே இலக்கு என்று மத்திய இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் உறுதிபட தெரிவித்தார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிதாக மருத்துவ ஆவண காப்பகம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவ ஆவண காப்பகத்தை, மத்திய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து ஆவண காப்பகத்தை பார்வையிட்ட அவர், அதன் செயல்பாடுகள் குறித்து மருத்துவக்குழுவினரிடம் கேட்டறிந்தார். பின்னர் … Read more

பாராகிளைடிங் விபத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 30 வயது சுற்றுலாப் பயணி பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூரஜ் ஷா(30). இவர் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது இவர் குலு மாவட்டத்தில் உள்ள தோபி பகுதியில் பாராகிளைடிங் சாகசத்தில் பங்கேற்றார். பாராகிளைடர் காற்றில் இருந்தபோது, அவரது பாதுகாப்பு பெல்ட் கழன்றதில் சூரஜ் தரையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனே சூரஜ் உள்பட இருவரை அங்கிருந்தவர்கள் மீட்டு குலு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சூரஜ் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பாராகிளைடிங் விமானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல் … Read more

உத்தரபிரதேச மாநிலத்தில் ஃபரூகாபாத்தை அடுத்து 2-வதாக புலந்த்ஷெகர் சிறை உணவுக்கு 5 நட்சத்திர அந்தஸ்து

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் புலந்த்ஷெகர் சிறைக் கைதிகளுக்கு அளிக்கும் உணவுக்கு 5 நட்சத்திர அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் இந்த அந்தஸ்தை பெறும் 2-வது சிறை இதுவாகும். நாடு முழுவதிலும் உள்ள சிறைச் சாலைகளில் கைதிகளுக்கு விநியோகிக்கப்படும் உணவின் தரம் உரிய அமைப்புகளால் இதுவரை சோதிக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில் சமீப காலமாக இப்பணியில் மத்திய அரசின் இந்தியஉணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) ஈடுபட்டு வருகிறது. இதில் குறிப்பிட்ட சிறையில் உணவின் தரம், அது தயாரிக்கப்படும் விதம் மற்றும் … Read more

களைகட்டும் சபரிமலை சீசன்: அய்யப்பன் வருமானம் எவ்வளவு தெரியுமா?

சபரிமலை அய்யப்பன் கோயிலில் 39 நாள்களில் மட்டும் ரூ.222 கோடியே 98 லட்சத்து 70 ஆயிரத்து 250 வருமானம் கிடைத்துள்ளது கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலை அய்யப்பன் கோயிலை நோக்கி பக்தர்கள் அதிகளவில் படையெடுக்க தொடங்கி விடுவார்கள். இந்த ஆண்டு சீசனிலும் நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடப்பு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த … Read more

2037-க்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாறும்..!

2037-ம் ஆண்டுக்குள் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் உலகின் 3-வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாறும் என இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் சராசரியாக 6.4 சதவீதமாக இருக்குமென்றும், அதற்கடுத்த 9 ஆண்டுகளில் இந்த விகிதம் சராசரியாக 6.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பொருளாதார வளர்ச்சி பின்தங்கிய நிலையில், அதற்கு பிந்தைய 2021-22-ம் … Read more

புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்கிறது. கொள்முதல் செய்யப்படும் பால் விலையையும் லிட்டருக்கு ரூ. 3 அதிகரிக்க அரசு திட்டம் செய்துள்ளது. கடந்த ஓராண்டாக பாண்லே தொடர்  நஷ்டத்தில் இயங்குவதால் நஷ்டத்தை ஈடுகட்ட  பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஏழுமலையானுக்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள வீடு: நன்கொடை வழங்கிய தமிழக பெண் பக்தர்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் அசையா சொத்துகள் உள்ளன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏழுமலையானுக்கு சொந்தமாக வீடுகள், வீட்டு மனைகள், நிலங்கள் உள்ளன. நாடு முழுவதும் ஏழுமலையானுக்கு 930 இடங்களில் அசையா சொத்துகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. நேபாளத்திலும் சுவாமிக்கு சொத்துகள் உள்ளன. இந்த அசையா சொத்துகளின் இன்றைய மதிப்பு ரூ.85,705 கோடியாகும். இது தவிர, தங்கம், வைரம், வைடூரியம், முத்து, பவளம் என நவரத்தினங்களால் ஆன நகைகள், கிரீடங்கள் என பல … Read more