''ராகுல் காந்தி ஒரு சூப்பர் ஹியூமன்'' – காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. தலைவர் ராகுல் காந்தி நேற்று (டிச.26) காலை மகாத்மா காந்தி நினைவிடம், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி ஆகியோரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் அவர் இந்த நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எழுந்த விமர்சனங்கள், … Read more

வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் ‘அட்மிட்’

புதுடெல்லி:  ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனால், நேற்று மதியம் 12 மணிக்கு டெல்லியில் உள்ள எய்மஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பிஎப்.7 வகை கொரோனா வைரசால் அவர் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே, நிர்மலா சீதாராமன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மீண்டு வந்தவர்.

ஜிஎஸ்டியில் உரிய இழப்பீடு கோரியும் செஸ் வரியைக் காரணம் காட்டி மறுக்கப்படும் மாநில பங்களிப்பு: சிஏஜி அறிக்கையால் அம்பலமான பகீர் தகவல், மாநில சுயாட்சி உரிமை பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

ஜிஎஸ்டியுடன் சேர்த்து செஸ் வரி வசூலிக்கப்பட்டாலும், மாநிலங்களுக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி பங்களிப்பை ஒன்றிய அரசு குறைத்து வழங்கியுள்ளது, சிஏஜி அறிக்கையின் மூலம் அம்பலம் ஆகியுள்ளது.  தங்களுக்கு உரிமை உடைய வரி பகிர்வை வழங்குமாறு மாநிலங்கள் கோரும் நிலையில், ஜிஎஸ்டியுடன் சேர்த்து வசூலிக்கப்பட்டும் செஸ் வரியில் பங்களிப்பு தர ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. நிகர வரி வசூல் உயர்ந்தபோதும், மாநில வரி பங்களிப்பு குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கடந்த 2017 ஜூலையில், … Read more

கத்தியால் குத்தி இளைஞர் கொலை: மங்களூருவில் 144 தடை உத்தரவு

மங்களூரு: கர்நாடகா மாநிலம் மங்களூரு பகுதியில் சனிக்கிழமை இரவு ஜலீல் என்ற இளைஞர், மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜலீல் இறந்தார். அதனால் மங்களூரு மாநகரத்திற்கு உட்பட சில இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மங்களூரு நகர காவல் ஆணையர் என்.சஷி குமார் கூறுகையில், ‘மர்ம நபர்களால் ஜலீல் என்பவர் கொலை செய்யப்பட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜ்பே, சூரத்கல், … Read more

துபாய் டூ கேரளா: 1884 கிராம் தங்கத்தை ஆடையில் மறைத்து கடத்திவந்த இளம்பெண் கைது

கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையம் வழியாக துபாயிலிருந்து கடத்திவிடப்பட்ட 1884 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 19 வயது இளம் பெண் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்த இளம் பெண் கலா (19) துபாயில் இருந்து கரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர், தனது ஆடையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய 1884 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளின் பரிசோதனைகளில் சிக்காமல் … Read more

சீனாவில் இருந்து ஆக்ரா திரும்பிய 40 வயதான நபருக்கு பிஎஃப் 7 புதிய வகை கொரோனா தொற்று உறுதி

ஆக்ரா: சீனாவில் இருந்து ஆக்ரா திரும்பிய 40 வயதான நபருக்கு பிஎஃப் 7 புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் பி.எஃப்.7 வகை கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இதேபோல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் … Read more

முதல்வர் கேசிஆருக்கு பின்னடைவு: எம்எல்ஏக்கள் பேரம் வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

தெலங்கானா மாநிலத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் எம்.எல்.ஏ.,க்களை பணத்தாசை காட்டி கட்சி மாற பாஜக பேரம் பேசியது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தெலங்கானா மாநிலத்தில், முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. சட்டசபையின் மொத்தமுள்ள 119 இடங்களில், ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு 82 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். பாஜகவுக்கு 24 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில், ‘ஆப்பரேஷன் லோட்டஸ்’ என்ற … Read more

ஜன 3-ம் தேதி மீண்டும் தொடங்கும் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்குமாறு அகிலேஷ் யாதவ், மாயவாதிக்கு அழைப்பு

டெல்லி: ஜன 3-ம் தேதி மீண்டும் தொடங்கும் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்குமாறு அகிலேஷ் யாதவ், மாயவாதிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். உ.பி.சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். ஜன.3 தொடங்கும் 448 கி.மீ துறை யாத்திரை உ.பி .பஞ்சாப் வழியாக காஷ்மீரில் ஜன.26-ல் குடியரசு தினத்தன்று நிறைவடையும் என்று தெரிவித்துள்ளனர், 

வெளிநாட்டில் இருந்து வந்த 4 பேருக்கு கொரோனா… பிகார் விமான நிலையத்தில் பரபர

பிகாரின் கயா விமான நிலையத்திற்கு வந்த 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வந்தவர்களில் மியான்மரில் இருந்து ஒருவர், தாய்லாந்தில் இருந்து ஒருவர் மற்றும் இங்கிலாந்தில் இருந்து இரண்டு பேர் என 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளி நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு RTPCR சோதனை கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் அனைத்து மாநில விமான நிலையங்களிலும் RTPCR சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேற்கண்ட நபர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனையில் … Read more

ஒன்றிய பாஜக அரசு, மோடி, அமித் ஷாவுக்கு எதிரான மம்தா பானர்ஜியின் ஆக்ரோஷ அரசியல் மென்மையானது ஏன்?.. சமீபத்திய அரசியல் நிகழ்வுகளால் தேசிய அரசியலில் பரபரப்பு

கொல்கத்தா: ஒன்றிய பாஜக அரசு, மோடி, அமித் ஷாவுக்கு எதிராக பேசிவந்த மம்தா பானர்ஜியின் ஆக்ரோஷ அரசியல் தற்போது மென்மையானதாக கூறப்படுகிறது. இதற்கு சமீபத்திய அரசியல் நிகழ்வுகள்தான் காரணம் என்று தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த 2021ல் மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. தனது கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும், கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, பாஜக … Read more