வங்கிகள் இயங்காது… இன்றே உஷார் ஆகுங்கள் மக்களே…

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA)நாளை (நவம்பர் 19) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் நாடு முழுவதும் வங்கிகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கத்தில் செயலாற்றியதற்காக வங்கி பணியாளர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதாகவும், அதனை கண்டித்து உறுப்பினர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  AIBEA பொதுச் செயலாளர் சி.ஹெச். வெங்கடாசலம், ஊழியர்களிடம்,”சமீப காலமாக பணியாளர்கள் மீதான வஞ்சகம் அதிகரித்து வருவது மட்டுமின்றி, இவை அனைத்திலும் பொதுவான தொடர்பு ஒன்று உள்ளது. பணியாளர்கள் மீதான இந்த பாரபட்சத்தை திட்டமிட்டு செய்கின்றனர். … Read more

ஸ்கேன் கருவியில் தீப்பிடித்ததால் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து..!

கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள சி,டி. ஸ்கேன் கருவியில் திடீரென தீப்பிடித்து பரவியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ வேகமாகப் பரவியதையடுத்து பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன. நோயாளிகள் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படாதாறு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பலமணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மருத்துவமனையின் அவசர சிகிச்சை சேவைப்பிரிவு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக மாநில அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார். … Read more

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டதை போல, என்னையும் விடுவியுங்கள்: உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி; ராஜீவ் கொலை வழக்கில், சிறையில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டதை போல, தன்னையும் விடுவிக்க வேண்டும் என, மனைவியை கொலை செய்த வழக்கில் தண்டனை அனுபவித்துவரும், ஸ்வாமி ஷ்ரதானந்த் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தனது 29 ஆண்டுகால சிறை வாசத்தில், ஒரு நாள் கூட பரோல் பெற்றதில்லை என உச்சநீதிமன்றத்தில் ஷ்ரதானந்த் வாதம் செய்தார்.

கோவாக்சின் அனுமதி தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது – மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கரோனா தொற்றுக்கு கோவாக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்தது. அரசியல் அழுத்தம் காரணமாக சில நடைமுறைகளை தவிர்த்துவிட்டு இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: கோவாக்சின் அனுமதி தொடர்பாக ஊடகங்கள் சிலவற்றில் வெளியான செய்தி தவறான தகவல். கோவாக்சின் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் எதிர்ப்பு திறன் குறித்த தரவுகளை நிபுணர் குழு ஆய்வு செய்தது. அதன் பிறகு … Read more

Mission Prarambh: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் Vikram-S… புது வரலாறு படைக்கும் ஸ்கைரூட்!

விண்வெளி தொடர்பான ஆய்வுகளை செயற்கைக்கோள்கள் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. இது தனியார் நிறுவனங்களின் செயற்கைக்கோள்களையும் அவ்வப்போது விண்ணில் செலுத்தி கொண்டிருக்கிறது. இந்த சூழலில் விண்வெளி துறையில் தனியார் துறையின் பங்களிப்பிற்கு கடந்த 2020ஆம் ஆண்டு அச்சாரம் போடப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்களும் விண்வெளி ஆய்வுகளில் ஆர்வம் காட்டத் தொடங்கின. அதில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனமும் ஒன்று. இஸ்ரோவில் முன்னாள் விஞ்ஞானிகள் பவன் குமார் சந்தனா, … Read more

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை வாரணாசியில் நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை வாரணாசியில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். அருணாச்சல் பிரதேச மாநிலம் இடாநகரில் புதிய விமான நிலையத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட குறிப்பில், இடா நகரில் புதிய விமான நிலையம் மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்திக்கான நீர் மின் நிலையம் ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாரணாசி செல்ல உள்ள பிரதமர் அங்கு காசி தமிழ் சங்கமம் … Read more

நவ.20,21,22ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

டெல்லி: நவ.20,21,22ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 21ம் தேதி வட தமிழக கடலோர மாவட்டங்களிலும், 22ம் தேதி வட தமிழக மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இதையடுத்து கடந்த 10ம் தேதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இரண்டாவது மழைப்பொழிவு தொடங்கியது. இதில் டெல்டா மாவட்டங்கள் உட்பட … Read more

நேபாளத்தில் தேர்தலை பார்வையிட இந்திய தேர்தல் ஆணையருக்கு அழைப்பு

புதுடெல்லி: நேபாளத்தில் 275 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம், 550 உறுப்பினர்களைக் கொண்ட ஏழு மாகாண பேரவைக்கான தேர்தல் நேபாளத்தில் வருகிற 20-ம் தேதிநடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு சர்வதேச பார்வையாளராக ராஜீவ் குமார் அழைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அங்கு நடைபெறும் தேர்தல் நடவடிக்கைகளில் ராஜீவ் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு கலந்து கொள்ள உள்ளது. இந்த குழு நவம்பர் 18 முதல் 22-ம் தேதி வரையில் நேபாளத்தில் முகாமிட்டு தேர்தல் பணிகளை பார்வையிட உள்ளது. காத்மண்டு மற்றும் அதை … Read more

Ration Card: மத்திய அரசு எடுத்த முடிவால் பயனாளிகளுக்கு பெரிய நன்மை

ரேஷன் கார்டு புதுப்பிப்பு: இந்திய நாட்டின் அனைத்து ரேஷன் கார்ட் பயனாளிகளுக்கும் ஒரு நல்ல செய்தி உள்ளது. இனி, ரேஷன் கடைக்காரர்கள் பொருட்களின் எடையில் எந்த வித ஏமாற்று வேலையையும் செய்ய முடியாது. ரேஷன் கடைக்காரர்களுக்காக அரசாங்கம் ஒரு புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. ஒருபுறம், அரசு இலவச ரேஷன் காலத்தை டிசம்பர் வரை நீட்டித்துள்ளது. மறுபுறம், மோடி அரசாங்கத்தின் லட்சியமான ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்’ நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு அனைத்து … Read more

திருமண விழாவில் பஞ்சாபி பாடலுக்கு 2 சீக்கியர்கள் தங்களை மெய்மறந்து நடனம் ஆடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரல்

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பாடப்பட்ட பஞ்சாபி பாடலால் கவரப்பட்ட இரண்டு வயதான சீக்கியர்கள் தங்களை மெய்மறந்து நடனம் ஆடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  பொதுவாக பஞ்சாபி பாடல்கள் மனதை மயக்குவது மட்டுமின்றி தங்களை மறந்து நடனம் ஆட தூண்டும் வகையில் அமைந்திருக்கும். அந்த வகையில் இந்த திருமண விழாவில் பாடப்பட்ட பஞ்சாபி பாbடலுக்கு 2பேரும் உற்சாக பெருக்குடன் நடனம் ஆடினர். Source link