Delhi Shraddha Murder : 'ஆம்பள புத்திதான் காரணம்' – மத்திய அமைச்சரை தாக்கும் பெண் எழுத்தாளர்!

டெல்லியில் 26 வயது ஷ்ரத்தா என்ற பெண்ணை, அவரின் காதலன் அப்தாப் அமீன் என்பவர் கொடூரமாக கொன்ற சம்பவம் சமீபத்தில் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, அந்த கொலை குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அப்தாப் அமீன், ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி, அவற்றை ஒவ்வொன்றாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் புதைத்துள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, 18 நாள்கள் இரவு 2 மணிக்கு பின் வீட்டில் இருந்து புறப்பட்டு அவற்றை புதைத்துள்ளார்.  அந்த … Read more

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீது மும்பை போலீஸ் வழக்குப்பதிவு

மும்பை: சாவர்க்கரை பற்றி அவதூறு கருத்து பரப்பியதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீது மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. காந்தி, நேரு போன்ற சுதந்திர போராட்ட வீரர்களுக்கு துரோகம் செய்து ஆங்கிலேயர்களுக்கு உதவியவர்தான் சாவர்க்கர் என ராகுல் காந்தி பேசியதையடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொட்டும் மழையிலும் பக்தர்கள் தரிசனம்!!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை 41 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக புதன் கிழமை மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இருமுடி கட்டி வந்த பக்தர்கள் 18ஆம் படி ஏற அனுமதிக்கப்பட்டனர். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில் கார்த்திகை முதல் நாளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்தனர். முதல் … Read more

அருணாச்சல பிரதேசத்தில் பசுமை விமான நிலையம்: நாளை திறந்து வைக்கிறார் பிரதமர்

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் பசுமை விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். இது அம்மாநிலத்தில் அமையும் முதல் பசுமை விமான நிலையம் ஆகும். அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்கெனவே இரண்டு விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், அம்மாநிலத் தலைநகர் இடாநகரில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மறுசூழற்சிப் பயன்பாடு என முற்றிலும் பசுமை முறையில் புதிய விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் … Read more

நளினி உட்பட 6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்த உச்சநீதிமன்றத்தின் நவம்பர் 11ம் தேதி உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நளினி, பேரறிவாளன், முருகன் , சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் , ரவிச்சந்திரன் ஆகியோர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அதில் பேரறிவாளன் கடந்த மே மாதம் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். இதே … Read more

கர்நாடகாவில் தனியார் நிறுவனம் மூலமாக வாக்காளர்கள் தகவல் திருட்டு பொம்மை பதவிக்கு ஆபத்து: பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

பெங்களூரு: கர்நாடகாவில் வாக்காளர்களின் தகவல்களை தனியார் தொண்டு நிறுவனம் திருடியதற்கு பொறுப்பேற்று முதல்வர் பசவராஜ் ெபாம்ைம பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், பெங்களூரு மாநகரில் உள்ள 28 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை சிலுமே என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 19  தேதிநடத்தியது. இதற்கு மாநகராட்சி தேர்தல் அதிகாரியும் அனுமதி வழங்கினார். பிறகு, அந்த நிறுவனம் சார்பில் … Read more

”இனி ஃபோன் பயன்படுத்தினால் ஸ்பாட் ஃபைன்” கறார் காட்டும் கிராம பஞ்சாயத்து.. எங்கு தெரியுமா?

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் எவருமே செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது என்றும், கையும் களவுமான பிடிபட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் உத்தரவு போட்டுள்ளது. கடந்த நவம்பர் 11ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது என்றும், குழந்தைகள் செல்ஃபோனுக்கு அடிமையாவதில் இருந்து தடுக்கவே இந்த உத்தரவு போடப்பட்டிருக்கிறது என பன்சி கிராம நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவின் யவதமால் மாவட்டத்தில் உள்ள பன்சி என்ற … Read more

ராஜீவ் கொலையாளிகளை போல் விடுதலை செய்ய கோரி நீதிமன்றத்தில் சாமியார் மனு

புதுடெல்லி: ராஜீவ் கொலையாளிகளை விடுவித்தது போல் தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சாமியார் ஷ்ரத்தானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த சாமியார் ஷ்ரத்தானந்தா என்ற முரளி மனோகர் மிஸ்ரா. இவரது மனைவி ஷகீரா நமாசி. முன்னாள் மைசூர் திவானின் பேத்தியான ஷகீரா தனது கணவர் அக்பர் கலீலை விவகாரத்து செய்த பின் ஷ்ரத்தானந்தாவை கடந்த 1986-ல் திருமணம் செய்தார். கடந்த 1991-ம் ஆண்டு ஷகீராவின் சொத்துகளை அபகரிப்பதற்காக ஷகீராவுக்கு மயக்க மருந்து … Read more

`லிவ்-இன்’ வாழ்க்கையால் குற்றங்கள் பெருகுகின்றன: ஒன்றிய அமைச்சர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: “லிவ் – இன் ரிலேஷன்ஷிப்’ உறவுகளினால் நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன,’ என்று ஒன்றிய அமைச்சர் கவுஷால் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் வாடகைக்கு வீடு எடுத்து `லிவ்-இன்` உறவில் வசித்து வந்த மும்பையை சேர்ந்த அப்தாப் பூனேவாலா தனது காதலி ஷ்ரத்தாவை கொன்று,  உடலை 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிய சம்பவம் நாட்டில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஒன்றிய வீடு மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை இணையமைச்சர் கவுஷால் … Read more

தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் கடிதம்!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், இலங்கை வசம் உள்ள விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 16.11.2022 அன்று இரவு தமிழக மீனவர்கள் 4 பேர் உட்பட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 198 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் … Read more