“கடிகார நிறுவனத்திடம் பாலம் சீரமைப்பு ஒப்பந்தம் அளித்த பாஜகவை தூக்கி எறியுங்கள்” – குஜராத்தில் கேஜ்ரிவால் பிரச்சாரம்
வல்சாட்: “சுவர் கடிகாரம் விற்பவர்களுக்கு பாலம் மறுசீரமைப்பு பணி ஒப்பந்தத்தைக் கொடுத்த பாஜக அரசை தூக்கி எறிந்துவிட்டு எனக்கு ஐந்து ஆண்டுகள் மட்டும் கொடுங்கள்” என்று வாக்கு சேகரித்தார் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால். குஜராத்தின் வல்சாட் நகரில் ஆம் ஆத்மி பேரணி நடந்தது. அதில் பேசிய கேஜ்ரிவால், “மோர்பி நகர் பாலத்தை சீரமைக்கும் பணியை ஒரு சுவர் கடிகார நிறுவனத்திடம் கொடுத்தது பாஜக. அவர்கள் அதுவரை பாலம் கட்டிய அனுபவமே இல்லாதவர்கள். … Read more