மண்டல, மகர விளக்கு பூஜை: இன்று சபரிமலை நடை திறப்பு – பலத்த போலீஸ் பாதுகாப்பு

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக இன்று (16.11.22) சபரிமலை நடைதிறக்கப்பட உள்ள நிலையில், ‘வெர்ச்சுவல் கியூ’ மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட உள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா க்ஷேத்ர நடை இன்று (நவம்பர் 16 ஆம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரின் தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் கருவறையை திறந்து தீபம் … Read more

உதய்பூர் ரயில் பாதையில் குண்டுவெடிப்பு – தீவிரவாத சதியே காரணம் என விசாரணையில் அம்பலம்

உதய்பூர்: ராஜஸ்தானின் உதய்பூர், குஜராத்தின் அகமதாபாத் இடையிலான ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 31-ம் தேதி திறந்து வைத்தார். கடந்த 12-ம் தேதி இரவு இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள அசர்வா ரயில் நிலையம் அருகேகுண்டு வெடித்த சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 13-ம் தேதிகாலையில் சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, அவ்வழியாக செல்ல இருந்த ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் … Read more

ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாத ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணி அளவில் ஆன்லைனில் வெளியீடு..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் பக்தர்கள் ஆர்ஜித சேவையில் பங்கேற்று வழிபட இன்று காலை 10 மணியளவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் தங்களுக்கு தேவையான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்யலாம். டிக்கெட்டுகள் தேவைப்படும் பக்தர்கள் தேவஸ்தானத்தின் w.w.w tirupatibalaji.ap.gov.in வெப்சைட் மூலம் அவற்றை முன் பதிவு … Read more

நடிப்பிலிருந்து ஆமிர்கான் தற்காலிக ஓய்வு

மும்பை: நடிப்பிலிருந்து பாலிவுட் நடிகர் ஆமிர்கான் தற்காலிக ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். ஆமிர்கான் கடைசியாக நடித்த படம் லால் சிங் சட்டா. இந்த படம் கடந்த ஆகஸ்டில் வெளியானது. ஆனால் படு தோல்வி அடைந்தது. இதனால் ஆமிர்கான் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் சாம்பியன்ஸ் என்ற ஸ்பானிஷ் படத்தை இந்தியில் ரீமேக் செய்து நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது தனது முடிவிலிருந்து திடீரென அவர் மாறியிருக்கிறார். ஆமிர்கான் நடித்த படங்கள் அனைத்தும் தொடர் வெற்றிகளை பெற்று வந்தன. … Read more

திருப்பதி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று வெளியீடு!!

திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று சொல்வார்கள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலம் இது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோயில் கொண்டிருக்கிறார். சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு ஏழுமலையான் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறார். உலகிலேயே அதிகமான பக்தர்கள் … Read more

பிரபல நடிகர் கிருஷ்ணா காலமானார் – அரசு மரியாதையுடன் ஹைதராபாத்தில் இன்று இறுதிச் சடங்கு

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் மூத்த நடிகர் கிருஷ்ணா (79), உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் நேற்று காலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையாவார். என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், சோபன் பாபு, கிருஷ்ணம்ம ராஜு ஆகிய மூத்த தலைமுறை நடிகர்களுடன் சம காலத்தில் நடிகராக அறிமுகமாகி 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் கிருஷ்ணா. நடிகர் கிருஷ்ணாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை … Read more

தென்னிந்திய படங்களை கேலி செய்தார்கள்: யஷ் உருக்கம்

பெங்களூர்: தென்னிந்திய படங்களை கேலி செய்து வந்தார்கள். இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்றார் நடிகர் யஷ். கேஜிஎஃப் 2 படம்ரூ. 1200 கோடி வசூலித்து பெரும் சாதனை படைத்தது. இதையடுத்து யஷ் பான் இந்தியா ஸ்டார் ஆகிவிட்டார். அவரை நடிக்க வைக்க பாலிவுட்டில் முயற்சி நடக்கிறது. ஆனால் அவர் எதற்கும் மசியவில்லை. கன்னட படத்தில் நடிக்கவே ஆர்வமாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் யஷ் பேசியது: 10 வருடங்களுக்கு முன் தென்னிந்திய … Read more

அரசின் செயல்பாட்டில் தலையிடவில்லை: கேரள ஆளுநர் ஆரிப் முகமது தகவல்

புதுடெல்லி: கேரளத்தில் உயர் கல்வித் துறையில் ஆளுநரின் தலையீடு அதிகரித்து வருவதை கண்டித்து திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி இடதுசாரி அமைப்புகள் நேற்று மிகப்பெரிய பேரணி நடத்தின. இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியதாவது: பல்கலைக்கழகங்களை நடத்தும் பணி, வேந்தரான ஆளுநரிடம் உள்ளது. அதேபோன்று அரசாங்கத்தை நடத்தும் பணி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் உள்ளது. அரசின் அன்றாட பணிகளில் நான் தலையிடவில்லை. அவ்வாறு தலையிட முயன்றதற்கு ஒரு … Read more

நிலுவை தொகை வழங்காவிட்டால் ஜிஎஸ்டி தருவதை நிறுத்தி விடுவோம்: ஒன்றிய அரசுக்கு மம்தா எச்சரிக்கை

ஜர்கிராம்: மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை வழங்காவிட்டால், ஒன்றிய அரசுக்கு ஜிஎஸ்டி செலுத்துவதை நிறுத்த நேரிடும்,’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். ஜிஎஸ்டி வசூலில் இருந்து கிடைக்கும் தொகையை மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பிரித்து அளிக்கிறது. ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த தொகையை மாநிலங்களுக்கு அது வழங்குவது இல்லை. இதனால், மாநில அரசுகள் தங்களுடைய நலத் திட்டங்கள், மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்த முடியாமல் தவிக்கின்றன. இந்த தொகையை பெறுவதற்காக மாநில அரசுகள் … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..!

மத்திய அரசு விரைவில் ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் வரை உயர்த்தக்கூடும். இந்த உயர்வு ஜனவரி மாதத்தில் நிகழ வாய்ப்புள்ளது. சமீபத்தில், ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்களில் மிகப்பெரிய வளர்ச்சி காணப்படுகிறது. அகவிலைப்படி அதிகரிப்பு AICPI குறியீட்டின் புள்ளிவிவரங்களைப் பொறுத்தது. இதில் சாதகமான அதிகரிப்பு இருந்தால், அகவிலைப்படி அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இதன்படி, ஜனவரி மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது மத்திய ஊழியர்களுக்கு … Read more