G20 Summit: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

இந்தோனேசிய தலைநகர் பாலியில் இன்று (நவம்பர் 15, 2022) வருடாந்திர ஜி 20 உச்சி மாநாடு தொடங்கியது, உலகத் தலைவர்கள் அடுத்த இரண்டு நாட்களில் ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் கோவிட் -19 தொற்றுநோயால் உண்டாகியுள்ள சவால்கள் குறித்து விவாதிக்க உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி ஜி-20 மாநாட்டின் முதல் அமர்வில் “உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் உக்ரைனில் போர்நிறுத்தம் மற்றும் இராஜதந்திர பாதைக்கு திரும்புவதற்கான வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று … Read more

காரைக்கால்: பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை – செக்யூரிட்டி போக்சோவில் கைது

காரைக்காலில் 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பள்ளி செக்யூரிட்டியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். காரைக்கால் மாவட்டம் அடுத்த ராயன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான நவோதயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 12வயது சிறுவன் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி அதிகாலை பள்ளி வளாகத்தில் தூங்கி கொண்டிருந்த மாணவனுக்கு அதே பள்ளியில் செக்யூரிட்டியாக பணியாற்றும் முகமது அலி … Read more

கியான்வாபி சிவலிங்கம் தொடர்பான வழக்கு: தீர்ப்பை தள்ளி வைத்தது வாரணாசி சிறப்பு நீதிமன்றம்

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு அங்கு கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாக புகார் உள்ளது. இந்த வழக்கில் கியான்வாபி மசூதிக்குள் கள ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது உள்ளே சிவலிங்கம் இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து விஷ்வ வேதிக் சனாதன் சங்கம் சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சிவலிங்கத்தை வழிபட அனுமதிக்க வேண்டும், மசூதிக்குள் நுழைய … Read more

பெரும் அதிர்ச்சி..!! அறுவை சிகிச்சை முடிந்து குழந்தைக்கு கொடுத்த பருப்பு குழம்பில் கரப்பான் பூச்சி..!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளி ஒருவர் குழம்பில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதை உடனடியாக படம் பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு வைரலானது. மேலும் அதில் அவர் கூறும்போது, ”சாப்பாடுடன் சேர்த்து கொடுக்கப்பட்ட இந்த குழம்பு 4 வயது குழந்தைக்கு கொடுக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார். சம்பந்தப்பட்ட குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் 2 நாட்களுக்கு உணவு எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்த 8 நாட்களாக குழந்தை … Read more

மத்திய துணை ராணுவப் படையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க

மத்திய துணை ராணுவப் படைகளில் காலியாக உள்ள 24,369 கான்ஸ்டபிள் பணி இடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: கான்ஸ்டபிள் (CAPFS) காலி பணியிடங்கள்: 24,369 சம்பளம்: மாதம் ரூ.21,700 – ரூ.69,100 தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்சிசி பயிற்சி பெற்றிருப்பது கூடுதல் தகுதியாகும். குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர் தூரத்தை 24 நிமிடங்களில் … Read more

சிறுவனின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய தெலங்கானா அமைச்சர்: குழந்தைகள் தின விழாவில் ருசிகரம்

ஹைதராபாத்: சிறுவனின் கோரிக்கையை தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி.ராமாராவ் உடனடியாக தீர்த்து வைத்தார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் கோல்டன் சிட்டி காலனி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் பிரச்சினை உள்ளதாகவும். அதனால், தமது பெற்றோர், சகோதரர்கள் தினமும் சுமார் 4 கி.மீ தூரம் வரை சென்று குடிநீர் வாங்கி வருவதாகவும், ஆதலால், குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக போக்க குழாய் அமைத்தால் இந்த அரசுக்கு நன்றியுடன் இருப்பேன் எனவும் உமர் எனும் 12 வயது சிறுவன் … Read more

திருமண வரன் பார்க்கும் நிகழ்வில், 230 பெண்களை வரன் பார்க்க, குவிந்த 14,000 மணமகன்கள்..!

கர்நாடகாவில் நடைபெற்ற திருமண வரன் பார்க்கும் நிகழ்வில், 230 பெண்களை வரன் பார்க்க, 14,000 மணமகன்கள் குவிந்தனர். மண்டியா மாவட்டத்தில் உள்ள ஆதிசுஞ்னகிரி மடத்தின் சார்பில் கல்யாண வரன் பார்க்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அதில் சுமார் 230 பெண்கள், மணமகன் தேவை என பதிவு செய்திருந்த நிலையில், நிகழ்ச்சி தொடங்கியதும் ஏராளமானோர் அங்கு கூடினர். அதிலும், 230 பெண்களை மணக்க 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் விருப்பம் தெரிவித்து, ஜாதகங்களுடன் விண்ணப்பித்தனர். இந்நிகழ்வு இணையத்தில் வைரலாகி … Read more

கடல் சார் ஆய்வு பல்கலை. துணைவேந்தர் டிஸ்மிஸ்: கேரள ஐகோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் யுஜிசி விதிமுறைகளை மீறி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறி 13 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனடியாக பதவி விலக கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து துணைவேந்தர்கள் கேரள பல்கலைக்கழகத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம், கவர்னரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் கொச்சியிலுள்ள கேரள மீன்வளம் மற்றும் கடல் சார் ஆய்வு பல்கலைக்கழக துணைவேந்தர் ரிஜி ஜான், யுஜிசி நிபந்தனைகளை மீறி நியமிக்கப்பட்டுள்ளதால் அவரை … Read more

'ஐ.நா இந்த விஷயத்தில் தோல்வி அடைந்துவிட்டது'- ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

“இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜி20 மாநாடு நடைபெறும் போது, உலகிற்கு அமைதிக்கான வலுவான செய்தியை தெரிவிக்க நாம் அனைவரும் உடன்படுவோம்” என்று தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. ஜி-20 உச்சி மாநாடு இந்தோனேஷியாவில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு இந்தோனேஷியாவின் பாலி நகருக்கு சென்றார். இந்நிலையில் ஜி-20 உச்சி மாநாட்டில் இன்று உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, ”சவாலான உலகளாவிய சூழலில் ஜி-20க்கு பயனுள்ள தலைமையை வழங்கியதற்காக அதிபர் ஜோகோ … Read more

நிர்வாண நிலையில் பெண் உடல்.. பாலியல் பலாத்காரமா..?: போலீஸ் விசாரணை..!

வாய்க்காலில் நிர்வாண நிலையில் பெண் மர்மமாக இறந்து கிடந்தது குறித்து காரைக்கால் போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அகில இந்திய வானொலி நிலையம் அருகே, தியாகி திருநாவுக்கரசு நகர் வாய்க்காலை ஒட்டிய வயல்வெளியில் சிறுவர்கள் சிலர் நத்தை பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க பெண் நிர்வாணமாக இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த சிறுவர்கள் ஊருக்குள் சென்று அங்கிருந்தவர்களிடம் இதுபற்றி தெரிவித்தனர். அதன்படி அங்கிருந்தவர்கள் தெரிவித்த … Read more