குஜராத் பேரவை தேர்தலில் அண்ணியை தோற்கடிக்க களமிறங்கிய நாத்தனார்: கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் குடும்பத்தில் சண்டை

ஜாம்நகர்: குஜராத் பேரவை தேர்தலில் அண்ணியை தோற்கடிக்க அவரது நாத்தனார் தேர்தல் களத்தில் பிரசாரம் செய்து வருவதால் கிரிக்கெட் வீரரின் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் ஜாம்நகர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதியில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜடேஜாவின் சகோதரியும், காங்கிரஸ் தலைவருமான நைனா ஜடேஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், … Read more

‘கல்லை எடுக்கச்சொன்னா கிட்னியையே எடுத்துட்டாங்க’ -தனியார் மருத்துவமனைமீது அதிர்ச்சி புகார்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சிறுநீரகத்தில் இருந்த கல்லை எடுப்பதற்காக தனியார் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்துகொண்ட நபரிடம் இருந்து சிறுநீரகம் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டம் நாக்லா தால் கிராமத்தைச் சேர்ந்தவர் 53 வயதான சுரேஷ் சந்திரா. இவர் அங்கு வீட்டுக் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு நீண்டகாலமாக அடிவயிற்றில் வலி இருந்ததை அடுத்து கஸ்கஞ்ச்சில் உள்ள தனியார் மருத்துவப் … Read more

தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம்!!

டெல்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத்தில் 54 நொடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தில் இன்று இரவு 7. 57 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கமானது 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டது. டெல்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத்தில் 54 நொடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டதாக … Read more

இமாச்சல பிரதேச தேர்தல்: மாலை 5 மணி வரை 66% வாக்குகள் பதிவு

ஷிம்லா: இமாச்சல பிரேதச சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 66% வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், இது 74% வரை செல்ல வாய்ப்புள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக இன்று (நவ.12) நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மொத்தம் 412 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்காக 7 ஆயிரத்து 881 வாக்குச் சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்திருந்தது. இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. … Read more

இமாச்சல் தேர்தலில் 66% வாக்குப்பதிவு; வெற்றி வாய்ப்பு யாருக்கு.?

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாநில சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 12ஆம் தேதி (இன்று) ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மொத்தம் உள்ள 68 தொகுதிகளில், இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்தவகையில் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே கடும் குளிரையும், பனிப்பொழிவையும் … Read more

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவு

டெல்லி: டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.4ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து உருண்டு ஓடின. இதனால் சத்தம் கேட்டு அலறி அடித்து வீடுகளில் இருந்து வெளியேறினர். கதவுகள், ஜன்னல்கள் ஆடியது தொடர்பான வீடியோக்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். டெல்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத்தில் 54 நொடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 1 நிமிடத்திற்கு நீடித்ததாக … Read more

பறிபோகும் வேந்தர் பதவி… ஒப்புதலுக்கு ஆளுநருக்கே அனுப்பிய அரசு!

கேரள மாநிலத்தில், பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்படி, அவசர சட்டத்தை, ஆளுநருக்கே மாநில அரசு அனுப்பி உள்ளது. கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசுக்கும், மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே தொடக்கம் முதலே முட்டல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே, கேரள மாநிலத்தில் உள்ள ஒன்பது பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பதவியில் … Read more

வியட்நாம் பிரதமர் ஃபாம் மின் சின்ஹ் உடன் குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் பேச்சுவார்த்தை

கம்போடியா சென்றுள்ள குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கர், வியட்நாம் பிரதமர் ஃபாம் மின் சின்ஹ் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். புனோம் பென் நகரில் நடைபெறும் ஆசியான்-இந்தியா மற்றும் 17-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிற்கிடையே இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு பேச்சுவார்த்தையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் உடனிருந்தார். பின்னர் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுடன், ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், அணு ஆயுத கவலைகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். Source … Read more

மகளின் திருமணத்திற்காக சேர்த்த ரூ50 ஆயிரம் பறிபோன பரிதாபம்: ஏழை பெண் தொழிலாளியின் பணத்தை மீட்டு ஒப்படைத்த கேரள போலீஸ்

திருவனந்தபுரம்: தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் பகுதியை சேர்ந்தவர் கொடுங்குசாமி. இவரது மனைவி முத்தாபரணம் (60). கடந்த சில வருடங்களாக இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தங்கியிருந்து பழைய பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் அங்குள்ள பெருமன்புரா என்ற இடத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். முத்தாபரணத்திற்கு புஷ்பராஜ் என்ற மகனும், திருமண வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக சிறுகச் சிறுக ₹50 ஆயிரம் பணத்தை சேமித்து … Read more

இமாச்சல பிரதேச தேர்தல்.. 105 வயது மூதாட்டி நேரில் வந்து வாக்களிப்பு

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் 105 வயது மூதாட்டி ஒருவர் தனது வாக்கை பதிவு செய்தார். 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் இல்லத்தில் இருந்தே வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளை செய்திருந்த நிலையில், சம்பா மாவட்டத்தை சேர்ந்த நரோ தேவி என்ற 105 வயது மூதாட்டி நேரில் வந்து எந்திரத்தில் வாக்களிக்க விரும்புவதாகக் கூறி வாக்குப்பதிவு மையத்திற்கு வந்து வாக்களித்தார். உலகில் மிக உயரத்தில் உள்ள வாக்குப்பதிவு மையமான தாஷிகாங்கில்லும் வாக்குப்பதிவு நடைபெற்றது. … Read more