அந்தமான் நிக்கோபர் தீவில் நிலநடுக்கம்!
அந்தமான்: அந்தமான் நிக்கோபார் தீவின் போர்ட்பிளேர் பகுதியில் அதிகாலை 2.29 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அந்தமான்: அந்தமான் நிக்கோபார் தீவின் போர்ட்பிளேர் பகுதியில் அதிகாலை 2.29 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகியுள்ளது.
புதுடெல்லி: கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, நெஞ்சில் எரிச்சல், ரத்தம் உறைதல், மாரடைப்பு போன்ற பாதிப்புகள் குறைந்தது ஓராண்டுக்கு ஏற்படுகிறது. கரோனா வைரஸில் உள்ள ஒரு குறிப்பிட்ட புரோட்டீன், இதய திசுக்கள் பாதிப்புக்கு காரணம் என்பதை அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த பாதிப்பை குணப்படுத்த இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் லேபரெட்டரி, ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்துடன் (டிஆர்டிஓ) இணைந்து ‘2டிஜி’ (2-டியாக்சி – டி-குளுக்கோஸ்) என்ற பவுடர் மருந்தை உருவாக்கினர். இதை வாய் வழியாக சாப்பிட … Read more
பெங்களூர்: மறைந்த புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படம் வெளியாகியுள்ளது. இதன் தியேட்டர் டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளது. கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் கடைசியாக நடித்து வந்த ஜேம்ஸ், கந்ததாகுடி படங்கள் ஷூட்டிங்கை முடித்திருந்தார். ஜேம்ஸ் படம் சில மாதங்களுக்கு முன் ரிலீசானது. இந்நிலையில் கந்ததாகுடி படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படத்தை புனித்தின் மனைவி அஸ்வின் புனித்ராஜ்குமார் தயாரித்துள்ளார். அமோக வர்ஷா … Read more
திருவனந்தபுரம் பாறசாலையில் அமைந்துள்ள முறியங்கரை கிராமத்தில் வசித்து வருபவர் சுதிர் (49). கேரளா அரசுப் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு சாந்திக்கும், முருகன் என்பவருக்கும் இரகசிய உறவு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால் சுதிர் வீட்டில் சாப்பிடும் போதெல்லாம் ஏதாவது உடல்நலக்கோளாறு ஏற்பட்டு வந்துள்ளது. அதிலும் தலைவலி அதிகமாக காணப்பட்டு வந்துள்ளது. இதனால் சுதிர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று … Read more
பெங்களூர்: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ராஷ்மிகா உருக்கமாக எழுதிய பதிவு: கடந்த சில நாட்கள் அல்லது வாரங்கள் அல்லது மாதங்கள் அல்லது பல ஆண்டுகளாக சில விஷயங்கள் என்னைத் தொந்தரவு செய்து வருகின்றன, நான் அதைச் சொல்ல வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். நான் எனக்காக மட்டுமே பேசுகிறேன். இது பல ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்திருக்க வேண்டிய ஒன்று.நான் என் வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து நிறைய வெறுப்பின் முடிவில் இருக்கிறேன். நிறைய ட்ரோல்களுக்கும் எதிர்மறைகளுக்கும் உண்மையில் … Read more
5ஜி வசதியால் கடைக்கோடி கிராம பள்ளிகளிலும் நகரங்களுக்கு இணையான கல்வி கிடைக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசத்தின் சுஜன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய அவர், 2014ஆம் ஆண்டு வரை நாட்டின் காவல் பணிகளில் சுமார் ஒரு லட்சம் பெண்கள் இருந்த நிலையில், 8 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரமாக அதிகரித்ததாக கூறினார். தற்போது ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளதாகவும், அந்த இரு மாநிலங்களும் வளர்ச்சி … Read more
ஐதராபாத்: ‘டிஆர்எஸ் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதில் தொடர்பா?’ என்பது குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை பரபரப்பு பேட்டியளித்து உள்ளார். மேலும், ‘தனது போன் ஒட்டு கேட்கப்படுகிறதா?’ என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளார். தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜ்பவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாநிலத்தில் எந்த பிரச்னை வந்தாலும் ராஜ்பவனுக்கு சென்று போராட்டம் நடத்த வேண்டும் என்கிறார்கள். மக்கள் இங்கு வருவதை யாரும் தடுக்கவில்லை. எம்எல்ஏக்கள் (டிஆர்எஸ்) பேரம் பேசப்பட்ட பண்ணை வீடு வழக்கிலும், ராஜ்பவனை … Read more
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நேற்று பதவியேற்றுக் கொண்டார். உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த யு.யு.லலித் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதையடுத்து, அவருக்கு அடுத்தபடியாக மூத்த நீதிபதியாக உள்ள தனஞ்செய் யஷ்வந்த் (டி.ஒய்.) சந்திரசூட் 50-வது தலைமை நீதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் … Read more
புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சிபிஐ.யின் நடவடிக்கையால் அவர் அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வரும் முயற்சியில் சிபிஐ ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான முதல் வழக்கில், நீரவை இந்தியாவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் நீரவ் மோடி மேல்முறையீடு செய்தார். அதில், … Read more
திருவனந்தபுரம்: கேரள கவர்னர் ஆரிப் முகமதுகானை பல்கலைக் கழக வேந்தர் பதவியில் இருந்து நீக்க அவசர சட்டம் கொண்டு வர முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கேரள அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமதுகானுக்கும் இடையே சமீபகாலமாக கடும் பனிப்போர் நிலவி வருகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் பதவிகளில் அரசு நியமிப்பவர்களுக்கு கவர்னர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுதான் இதற்கு காரணம். இதையடுத்து, துணைவேந்தர் நியமனங்களில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா, இரு மாதங்களுக்கு … Read more