ஆசிரியர்கள் கண்டித்ததால் விபரீதம்!: பெங்களூருவில் 14வது மாடியில் இருந்து குதித்து 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை..!!

பெங்களூரு: பெங்களூருவில் ஆசிரியர்கள் கண்டித்ததால் 14வது மாடியில் இருந்து குதித்து 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு நகரில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோஹின், பள்ளியில் நடந்த தேர்வு ஒன்றில் காபி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மோஹினுக்கு கடுமையான தண்டனை தந்ததாக தெரிகிறது. மனமுடைந்த மாணவன் மோஹின், பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது நாகவாலா என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏறி 14வது மாடியில் இருந்து குதித்தார். … Read more

மும்பை | கணவர் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் பெண் மரணம்

மும்பை: எதிர்பாராத அசம்பாவிதமாக தனது கணவர் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் பெண் மரணம் அடைந்துள்ளார். இந்த துயரம் கடந்த திங்கட்கிழமை அன்று மும்பை நகரின் விக்ரோளி பகுதியில் நடைபெற்றுள்ளது. அந்த பெண்ணின் கணவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த 45 வயதான அவரது கணவர் பினு கோஷி, தனக்கு நெஞ்சு வலிப்பதாக சொல்லியுள்ளார். தொடர்ந்து அவரை அவரது குடும்பத்தினர் அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் உயிரிழந்துள்ளார். … Read more

காங்கிரஸின் துரோகத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது இமாச்சல மக்கள்; பிரதமர் மோடி பேச்சு.!

மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இமாச்சலப் பிரதேச தேர்தலையொட்டி காங்கிரஸ் , பாஜக ஆகிய கட்சிகள் தங்களது வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அம்மாநிலத்தில் ஏற்கனவே பாஜக ஆட்சி நடைபெற்று வரும் … Read more

புதிய தலைமை நீதிபதி சந்திரசூட் பதவியேற்பு விழாவில் பங்கேற்காத பிரதமர் மோடி!

டெல்லி: இன்று புதிய தலைமை நீதிபதி சந்திரசூட் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்பது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் பதவியேற்பு விழாவில் இருந்து, பதவியேற்பு விழாவை பிரதமர் மோடி தவறவிட்டதில்லை. இந்நிலையில் புதிய தலைமை நீதிபதி சந்திரசூட் பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்காதது ஏன் என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

பண மோசடி வழக்கு: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மீண்டும் சம்மன்!

பண மோசடி வழக்கில், வரும் 17 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மாநிலத்தில் சட்ட விரோதமாக சுரங்கங்களை ஒதுக்கி பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து … Read more

ஹர்திக் படேல், ரவீந்திர ஜடேஜா மனைவிக்கு சீட்: குஜராத் பாஜக வேட்பாளர்கள் வெளியீடு? டெல்லியில் மோடி, நட்டா, அமித் ஷா ஆலோசனை

புதுடெல்லி: குஜராத் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாக உள்ள நிலையில் ஹர்திக் படேல், ரவீந்திர ஜடேஜா மனைவி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குஜராத் சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில்  இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுடன்  குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகளும் வரும் டிசம்பர் 8ம் தேதி  அறிவிக்கப்படும். இமாச்சல் பிரதேசத்தில் வரும் 12ம் தேதி தேர்தல் நடப்பதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் … Read more

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் விடுதலை; 100 நாள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது.!

மும்பையின் கோரேகானில் உள்ள பத்ரா சால் குடியிருப்பு, சுமார் 47 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 672 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பினை கடந்த 2008ம் ஆண்டு மறுவடிவமைப்பு செய்ததில் சுமார் ரூ.1,034 கோடி நிதி முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து, சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவையின் உறுப்பினருமான சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அவரை கைது செய்தனர் ஆர்தர் ரோடு சிறையில் … Read more

குஜராத் தேர்தல்: புதியவர்களுக்கு வாய்ப்பு; களத்தில் இருந்து விலகிய முக்கிய தலைவர்கள்

குஜராத் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அம்மாநில முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான விஜய் ரூபானி அறிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் புதிய கட்சி தொண்டர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். “அனைவருடைய ஒத்துழைப்போடு 5 ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றினேன். இந்த தேர்தலில் புதிய தொண்டர்களுக்கு பொறுப்பு வழங்க வேண்டும். தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மூத்தவர்களுக்கு கடிதம் அனுப்பி டெல்லிக்கு தெரிவித்தேன். தேர்ந்தெடுக்கப்பட்ட … Read more

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: வானிலை மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து வட திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகம், புதுச்சேரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானாவில் கோயில்கள் மூடல்

திருப்பதி: சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று ஆந்திரா, தெலங்கானாவில் அனைத்து முக்கிய கோயில்களின் நடை சாத்தப்பட்டது. குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை 12 மணி நேரம் அடைக்கப்பட்டது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று காலை 8 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை ஆந்திராவில் திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அனைத்து கோயில்களும், காணிப்பாக்கம் விநாயகர் கோயில், விஜயவாடா கனக துர்கையம்மன் கோயில், அன்னவரம் சத்தியநாராயணர் கோயில், ஸ்ரீ சைலம் … Read more