”அப்பாவா புரோமோஷன் கிடைச்சிருக்கு..” – மகளுக்காக Vice President வேலையை உதறிய தந்தை!

குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இணையாக தந்தைகளுக்கு உரிய மகப்பேறு விடுப்பு எதிர்காலத்திலாவது கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மூத்த துணைத் தலைவராக இருந்த தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு செல்ல மகளை பார்த்துக் கொள்கிறார் ஐ.ஐ.டி. கரக்பூர் பட்டதாரி. ஐ.ஐ.டி. கரக்பூரில் படித்துவிட்டு முன்னணி நிறுவனத்தில் சீனியர் துணைத் தலைவராக இருந்தவர் அன்கிட் ஜோஷி. பேட்டர்னிட்டி விடுமுறை காலம் போதாத காரணத்தால் அதிக சம்பளம் பெறும் தன்னுடைய வேலையையே ராஜினாமா செய்திருக்கிறார். இது தொடர்பான தகவல் தற்போது … Read more

குஜராத் தேர்தலில் போட்டியிடும் தொழிலாளி டெபாசிட் தொகையை நாணயமாக வழங்கினார்

காந்திநகர்: குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள சேரி காலனி, கடந்த 2010-ம் ஆண்டு இடித்து தள்ளப்பட்டு அங்கு மகாத்மா காந்திக்கு தண்டி குதிர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இங்கு வசித்த குடிசைப் பகுதி மக்கள் அருகில் உள்ள பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். கடந்த 2019-ல் அங்கு ஓட்டல் கட்டுவதற்காக 521 குடிசை வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. இதனால் இங்கு வசித்தவர்கள் மீண்டும் அருகில் உள்ள பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். இங்கு மின்சார வசதி, குடிநீர் வசதி ஏதும் செய்து கொடுக்கப்படவில்லை. … Read more

மெயின்புரியில் சமாஜ்வாடி, பாஜ நேரடி போட்டி

மெயின்புரி: உ.பி.யில் உள்ள மெயின்புரி மக்களவை தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் சமாஜ்வாடி, பாஜ இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மெயின்புரி மக்களவை தொகுதி எம்பி.யாக இருந்த சமாஜ்வாடி கட்சியினர் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், சமாஜ்வாடி சார்பாக இக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜ சார்பில் ரகுராஜ் சிங் … Read more

பாரதியார் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக அறிவிக்கிறது மத்திய அரசு: வாரணாசியில் பாரதி நினைவிட பணியையும் மேற்கொள்ள திட்டம்

புதுடெல்லி: மகாகவி பாரதியார் பிறந்த நாளான டிசம்பர் 11-ம் தேதியை தேசிய மொழிகள் தினமாக மத்திய அரசு அறிவிக்க உள்ளது. வாரணாசியில் பாரதியார் தங்கியிருந்த வீட்டின் ஒரு பகுதியை நினைவகமாக மாற்றவும் மத்திய அரசு திட்டமிடுகிறது. வாரணாசியில் தமிழர்களான பிராமணர்கள் வாழும் அக்ரஹாரப் பகுதி அனுமன் படித்துறை. இங்கு பாரதியின் அத்தைக்கு சொந்தமான ‘சிவமடம்’ என்ற பழமையான வீடு உள்ளது. இங்கு பாரதி தனது இளமைக் காலத்தில் சில ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். இதனால், அந்த வீடு, உ.பி.யில் … Read more

நாட்டின் வளர்ச்சிக்காக நாள் முழுவதும் உழைக்கிறேன்: அருணாச்சலத்தில் மோடி உருக்கம்

இடாநகர்: அருணாசலப் பிரதேசத்தில் முதல் முதலாக புதிதாக கட்டப்பட்ட டோன்யி போலோ பசுமை விமான நிலையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அருணாச்சல பிரதேசத்தில் விமான நிலையம் இல்லாத நிலையில், ஒன்றிய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் ரூ.645 கோடி செலவில், பசுமை விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விமான நிலையத்துக்கு, ‘டோன்யி போலோ’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாநில தலைநகர் இடாநகரில் இருந்து … Read more

அதிக தண்ணீர் குடித்ததால் சிறுநீரகம் மந்தம் மூளை வீக்கத்தால் இறந்தார் புருஸ் லீ: 50 ஆண்களுக்குப் பிறகு புதிய தகவல்

புதுடெல்லி: பிரபல ஹாலிவுட் நடிகர் புருஸ் லீ. ஹாங்காங் – அமெரிக்கரான இவர் நடித்த பல படங்கள், உலகளவில் பெரும் சாதனைகள் படைத்தன. உலகளவில் பல கோடி ரசிகர்களை பெற்றவர். ஆனால், கடந்த 1973ம் ஆணடு, ஜூலை 20ம் தேதி தனது 32வது வயதில் இவர் திடீரென இறந்தார். இவருடைய  மரணம் பற்றி பல்வேறு கதைகள் கூறப்பட்டு வருகின்றன. அதில், அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக கூறப்படும் தகவலும் ஒன்று. இந்நிலையில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய … Read more

விடிய விடிய நகரை சுற்றிய கார்…! 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடந்த கொடூரம் …!

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், கொச்சியில் தங்கி மாடல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் கொச்சி ரவிபுரத்தில் உள்ள ஒரு பாருக்கு, ராஜஸ்தானை சேர்ந்த மாடல் அழகி டிம்பிள் லாவா என்பருடன் மது அருந்துவதற்காக சென்றார். அங்கு அளவுக்கு அதிகமாக குடித்த மாடல் அழகி பாரில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அந்த பாரில் மது அருந்தி கொண்டிருந்த 3 வாலிபர்கள் அவரை வீட்டில் … Read more

தமிழை காக்க வேண்டியது இந்தியர் கடமை – வாரணாசி காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்துப் பேசும்போது, “தமிழ் மொழியைக் காக்க வேண்டியது இந்தியர்கள் அனைவரின் கடமை” என்றார். தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக ஒரு மாதத்துக்கு நடைபெற உள்ளன. மத்திய அரசின் கல்வித் துறை சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து 2,500-க்கும் மேற்பட்டோர் வாரணாசி சென்றனர். தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்ற பிரதமர், நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் … Read more

வீட்டு சிறைக்காக சிறையில் இருந்து நவ்லகா வந்தார்

மும்பை: எல்கர் பரிஷத் – மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதானவர் சமூக ஆர்வலர் கவுதம் நவ்லகா. 70 வயதாகும் இவர், பல்வேறு உடல் நல பாதிப்பால் அவதிப்படுவதால், வீட்டு சிறையில் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, 2 ஆண்டுக்குப் பிறகு நவி மும்பையின் தலோஜா சிறையில் இருந்து நவ்லகா நேற்று மாலை 6 மணிக்கு வெளியே வந்தார். பலத்த பாதுகாப்புடன் போலீசார் அவரை நவி மும்பையின் பெலாபூர்-அக்ரோலி பகுதியில் உள்ள … Read more

பிரேக் செயலிழப்பால் ஏற்பட்ட பெரிய விபத்து! 8 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்!!

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து 44 பக்தர்களுடன் தனியார் பேருந்து ஒன்று சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்ய உற்சாகமாக பஜனை பாடியபடி சென்று கொண்டிருந்தனர். பத்தனம்திட்ட மாவட்டம் , லாஹ அருகே விளக்கு வஞ்சி அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 வயது சிறுவன் மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் … Read more