விடுமுறை நாளான நாளை ஓய்வுபெறவுள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் அலுவல் பணி இன்றுடன் நிறைவு: நாளை மறுநாள் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு
புதுடெல்லி: விடுமுறை நாளான நாளை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லலித் ஓய்வுபெற உள்ள நிலையில், அவரது அலுவல் பணி இன்றுடன் நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பொறுப்பேற்க உள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித்தின் பதவிக்காலம் நாளையுடன் (நவ. 8) நிறைவடைகிறது. நாளை குருநானக் ஜெயந்தி என்பதால், உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை நாளாகும். அதனால் இன்றுடன் யு.யு.லலித்தின் அலுவல் ரீதியான பணி நிறைவு பெறுகிறது. நாளை அவர் முறைப்படி ஓய்வு பெறுகிறார். … Read more