#BREAKING:- குஜராத்தில் டிசம்பர் 1, 5-ஆம் தேதிகளில் தேர்தல் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 14-ந் தேதி அறிவித்தது. அதன்படி இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குஜராத் சட்டப் பேரவைக்கு டிசம்பர் 1,5-ஆம் தேதிகளில் தேர்தல் இரண்டு கட்டங்களாகத் தேர்ல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் … Read more

சாகித்ய விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார்..!

கேரள அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியர், கவிஞர் மற்றும் திரைக்கதை எழுத்தாளருமான டி.பி.ராஜீவன் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 63. கோழிக்கோடு பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரியான இவர், முந்தைய காங்கிரஸ் கூட்டணி (யுடிஎஃப்) அரசாங்கத்தின் போது கலாச்சார அமைச்சரின் ஆலோசகராகவும் பணியாற்றினார். கவிதைகள், பயணக் கட்டுரைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ள டி.பி. ராஜீவன், திரைக்கதை எழுத்தாளரும் கூட. அவர் எழுதிய ‘பலேரிமாணிக்கம் ஒரு பத்திரகோலப் பதாகத்திண்டே கதை’ என்ற நாவல் … Read more

குஜராத் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல்; டிச.8.ல் வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் குஜராத்தில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. முன்னதாக கடந்த மாதம் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது குஜராத் தேர்தல் தேதியும் சேர்த்தே வெளியாகும் என்று … Read more

டெல்லி செங்கோட்டை தாக்குதல்: முகமது ஆரிஃபுக்கு மரண தண்டனை உறுதி!

டெல்லி செங்கோட்டையில் கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி முகமது ஆரிஃப் என்ற அஷாஃபாக் உள்ளிட்ட 6 தீவிரவாதிகள் உள்பட 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. டெல்லி கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், முகமது ஆரிஃபுக்கு 2007ஆம் ஆண்டு … Read more

டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கு!: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃபுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்..!!

டெல்லி: லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த பயங்கரவாதி முகமது ஆரிஃபுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.  செங்கோட்டை தாக்குதல் வழக்கில் ஆரிஃபுக்கு தூக்கு தண்டனை உறுதியானது. 2000ம் ஆண்டில் தலைநகர் டெல்லியில் பழமை வாய்ந்த செங்கோட்டை மீது பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஆரிஃப். செங்கோட்டையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் முகமது ஆரிஃப் … Read more

2022 குஜராத் சட்டமன்ற தேர்தல்: தேர்தல் ஆணைய அறிவிப்பின் முழு விவரம்! #Video

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். குஜராத் சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்துள்ளது தலைமை தேர்தல் ஆணையம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலாக உள்ளன. குஜராத்தில் தற்போது பா.ஜ.க. ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. குஜராத்தில் 2017 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜ.க 99, காங்கிரஸ் 77 இடங்களில் வென்றது. தற்போது குஜராத் சட்டசபையில் பா.ஜ.க.வின் … Read more

மகாராஷ்டிரா | பொட்டு வைக்காத பெண் பத்திரிகையாளரை அவமதித்த சமூக ஆர்வலர்; மகளிர் ஆணையம் நோட்டீஸ்

புனே: நெற்றியில் பொட்டு வைக்காததால் பெண் பத்திரிகையாளருக்கு சமூக ஆர்வலர் ஒருவர் பேட்டியளிக்க மறுத்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சமூகநல செயற்பட்டாளர் சம்பாஜி பிடே. இவர் நேற்று தெற்கு மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்திக்க வந்தார். முதல்வருடனான சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த அவரிடம் பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் நின்றிருந்தனர். आज माझ्यासोबत घडलेला हा सगळा प्रकार.. आपण एखाद्याचं वय बघून त्याला मान … Read more

குஜராத் சட்டமன்றத் தேர்தல் 2022: தேதிகளை அறிவித்தது தேர்தல் ஆணையம்!

Gujarat Assembly Elections 2022: குஜராத் சட்டசபை தேர்தல் 2022 டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டே ஆகியோர் மோர்பி பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த … Read more

தெலுங்கானாவில் 57வது நாளாக ஒற்றுமை நடைபயணம்: பழங்குடி மக்களுடன் பாரம்பரிய 'திம்சா' நடனமாடி ராகுல்காந்தி உற்சாகம்..!!

சங்கராரெட்டி: தெலுங்கானாவில் ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, பழங்குடியின மக்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனமாடினார். நாடு முழுவதும் ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, சங்கராரெட்டி மாவட்டம் ருத்ராராம் என்ற இடத்தில் இருந்து இன்றைய பயணத்தை தொடங்கினார். முன்னதாக ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களின் பழங்குடியின கலைஞர்கள் பாரம்பரியமிக்க ‘திம்சா’ நடனமாடி ராகுலுக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது கலைஞர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும், உற்சாகமாக நடனமாடினார். ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற … Read more

உத்தரப் பிரதேசம் மதுரா நகர் ஹோட்டலில் தீ விபத்து: இருவர் உயிரிழப்பு

மதுரா: உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தின் விருந்தாவன் நகரத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மதுரா – விருந்தாவன் சாலையில் உள்ள விருந்தாவன் கார்டன் என்ற தங்கும் விடுதி உள்ளது. இதன் முதல் தளத்தில் உள்ள சமையலறை பொருட்கள் வைக்கும் அறையில் வியாழக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் இரண்டு ஆம்புலன்ஸ், 2 தீயணைப்பு … Read more