ஒமிக்ரான் உருமாற்ற வைரசால் இந்தியாவில் புதிய கொரோனா அலை: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

புதுடெல்லி: புதிய உருமாற்ற ‘எக்ஸ்பிபி’ வைரசால், இந்தியாவில் மீண்டும்  கொரோனா அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சீனாவில் இருந்து கிளம்பிய கொரோனா வைரஸ், கடந்த 2  ஆண்டுகளாக உலகத்தை ஆட்டிப்படைத்து விட்டது. கோடிக்கணக்கான மக்கள் உயிரிழப்பு, பாதிப்பு, பொருளாதார சீரழிவு என பல நாசங்களை செய்து விட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தடுப்பூசி போன்ற நடவடிக்கைகளால் தற்போது, உலகின் பெரும்பாலான நாடுகளில் இதன் தாக்குதல் தடுக்கப்பட்டு விட்டது. ஒரு சில நாடுகளில் மட்டுமே … Read more

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்புக்கு எதிரான மனு தள்ளுபடி

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்க தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள யு.யு.லலித் ஓய்வு பெறுவதையொட்டி, அடுத்ததாக 50வது புதிய தலைமை நீதிபதி சந்திரசூட், வரும் 9ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், சந்திரசூட் தலைமை நீதிபதியாக பதவியேற்க தடை விதிக்கக்கோரி, முர்சலின் அசிஜித் ஷேக் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் … Read more

16ம் தேதி மண்டல காலம் தொடக்கம் ஆன்லைன் முன்பதிவு செய்தால் மட்டுமே சபரிமலையில் அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலையில் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை வரும் 16ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. இந்நிலையில், சபரிமலை வரும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று காணொலியில் நடைபெற்றது. கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் … Read more

பெட்டாசியம், பாஸ்பேட் உரத்துக்கு ரூ. 51,875 கோடி: மானியம் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு ரூ.51,875 கோடி மானியம் அளிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் மற்றும் சல்பர் போன்ற பயிர் ஊட்டச்சத்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என்ற உரத்துறை பரிந்துரை செய்தது. அதை ஏற்று 2022-23ம் ஆண்டுக்கு  (அக்டோபர் 1, 2022  முதல் மார்ச் 31, 2023ம் ஆண்டு வரை)  பாஸ்பேட், பொட்டாசியம்   உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையில் மானிய விலைகளை நிர்ணயிக்க பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய … Read more

ராகுல் காந்தி பாத யாத்திரையில் நடிகை பூஜா பட் பங்கேற்பு..!

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள நடைபயணம் இன்று காலை ஐதராபாத் நகரில் இருந்து  மீண்டும் தொடங்கியது. நடிகையும் திரைப்படத் தயாரிப்பாளருமான பூஜா பட், காங்கிரஸ் கட்சியின் இந்த யாத்ரைக்கு ஆதரவு தெரிவித்துடன், ராகுல் காந்தியுடன் சிறிது நேரம் நடந்து சென்றார். 5 வது நாளாக தெலுங்கானா மாநிலத்தில் ராகுல் மேற்கொண்டுள்ள நடைபயணத்தில் காங்கிரஸ் கட்சியினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.  Source link

தொங்கு பாலம் இடிந்து 135 பேர் பலி பழைய கம்பிக்கு பெயின்ட் அடித்து மோசடி: குஜராத் நிறுவனம் மீது போலீஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

மோர்பி: குஜராத் தொங்கு பாலம் இடிந்து 135 பேர் பலியான நிலையில், அந்த பாலத்தை சீரமைப்பு செய்வதாக ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனம் 7 மாதத்தில் வெறுமனே புது பெயின்ட் அடித்து, தூசு தட்டியிருப்பதாக போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தந்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தொங்கு பாலம் கடந்த 30ம் தேதி அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் பலியாகி உள்ளனர். 170க்கும் … Read more

பாஜக -டிஆர்எஸ் இடையே ஒரு அன்டர்ஸ்டாண்டிங் இருக்கு… ராகுல் ஓபன் டாக்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார். அலரது இந்த நடைப்பயணம் தற்போது தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தை அடைந்துள்ளது. காங்கிரஸ் சார்பில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் இன்று அவர் பேசியது: பிரதமர் நரேந்திர மோடியும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் நேரடியாக தொலைபேசியில் பேசி கொள்ளும் அளவுக்கு நட்பு பாராட்டி வருபவர்கள்தான். இவர்களை போன்றே, பாஜகவுக்கும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கும் இடையே மறைமுக தொடர்பு இருந்து வருகிறது. பாஜக நாடாளுமன்றத்தில் … Read more

காற்றில் பறந்த கைக்குட்டைக்காக மின்சாரத்தில் கருகிய உயிர்..! பலியானவரின் சிசிடிவி காட்சி

காற்றில் பறந்துசென்று மின்கம்பியில் விழுந்த கைகுட்டையை ஒட்டடை கம்பியால் எடுக்க முயன்ற மருத்துவமனை ஊழியர், மின்சாரம் தாக்கி பலியான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. தனது வீட்டுப்பால்கனியில் உலர வைத்த தனது கைக்குட்டை மின்கம்பியில் கிடப்பதை பார்த்து, அதனை எடுக்க, முன் எச்சரிக்கையில்லா முயற்சியில் இறங்கி, உயிர் பலியான மல்லப்பா இவர் தான்..! கர்நாடக மாநிலம் உதயஹிரி பகுதியில் வசித்த மல்லப்பா, ஹிம்ஸ் மருத்துவமனையில் கம்பவுண்டராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று, இவர் தனது வீட்டு பால்கனியில் … Read more

’’என்னையா கடிக்கிறாய்?’’ நாகபாம்பை கடித்த சிறுவன் – பாம்புக்கு நேர்ந்த பரிதாபம்!

சட்டீஸ்கரில் தன்னை கடித்த நாகபாம்பை அதைவிட கடினமாக கடித்து கொன்றுள்ளான் 8 வயது சிறுவன். கேட்பதற்கே விநோதமாக இருக்கிறதல்லவா? ஆனால் அதுதான் உண்மை. இதுபோன்ற விசித்திர நிகழ்வுகள் எப்போதாவது நடப்பதுண்டு. அது சமூக ஊடங்களில் பரவி வைரலாகி பலரின் கவனத்தையும் ஈர்ப்பது வழக்கமாகி விட்டது. சட்டீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பந்தார்பத் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் தீபக்கை நாகபாம்பு கடித்திருக்கிறது. சிறுவனின் கையை சுற்றிக்கொண்ட பாம்பு அவனை விடாமல் இறுக்கி … Read more

எத்தனால் கொள்முதல் விலை அதிகரிப்பு: அமைச்சரவை குழுவின் இந்த முடிவு ஏன்?

பெட்ரோலுடன் கலக்க பயன்படுத்தப்படும் எத்தனால் கொள்முதல் விலையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கரும்பிலிருந்து பெறப்படும் எத்தனால் கொள்முதல் விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அரசாங்கத்தின் எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின்படி பெட்ரோலுடன் 10 சதவிகிதம் எத்தனால் கலக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 2019 முதல் … Read more