4 முறை அழைத்தும் பேச மறுத்த பிரதமர் மோடி: ட்ரம்ப் கடும் பதற்றமாகி இருப்பதாக தகவல்

புதுடெல்லி: வர்த்தக வரி தொடர்​பாக பேச அமெரிக்க அதிபர் 4 முறை தொலைபேசி​யில் அழைத்​தும் பிரதமர் மோடி பேச மறுத்​த​தாக ஜெர்​மனி, ஜப்​பான் பத்​திரி​கைகள் செய்தி வெளி​யிட்​டுஉள்​ளன. உலக நாடு​களுக்கு அதிக வரி விதித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்​தி​யா​வுக்கு 25 சதவீத வரியை விதித்​தார். அத்​துடன், உக்​ரைன் மீது தாக்​குதல் நடத்தி வரும் ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால், கூடு​தலாக 25 சதவீத வரியை ட்ரம்ப் அறி​வித்​தார். அதன்​படி, இந்​தி​யா​வில் இருந்து … Read more

ஜப்பானில் பிரதமர் மோடி… AI முதல் Semi-Conductor வரை – இந்த சுற்றுப்பயணம் ஏன் முக்கியம்?

PM Modi Japan Visit: பிரதமர் மோடி தற்போது ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த பயணம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இதில் காணலாம்.

பாலியல் புகாரில் சிக்கிய பாலக்காடு காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மீது போலீஸார் வழக்குப் பதிவு

பாலக்காடு: பாலியல் புகாரில் சிக்கிய கேரளாவின் பாலக்கோடு எம்எல்ஏ ராகுல் மாம்கூட்டத்தில் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவின் பாலக்காடு சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் ராகுல் மாம்கூட்டத்தில். இவர் சமூக ஊடகம் மூலமாக பாலியல் தொந்தரவு செய்ததாக எழுத்தாளர் ஹனி பாஸ்கரன், மாடல் ரினி ஆன் ஜார்ஜ் ஆகியோர் கேரள டிஜிபிக்கு புகார் அளித்தனர். இதையடுத்து அவர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை … Read more

இந்தியா அளித்த எச்சரிக்கையால் உயிர் தப்பிய 1.5 லட்சம் பாகிஸ்தானியர் 

புதுடெல்லி: இந்​தி​யா​வின் முன்​கூட்​டியே அளித்த வெள்ள எச்​சரிக்​கை​யால் 1.5 லட்​சம் பாகிஸ்​தானியர்​கள் உயிர் தப்பி உள்​ளனர். காஷ்மீரிலிருந்து பாகிஸ்​தானை நோக்கி பாயும் ராவி, சட்​லெஜ், செனாப் ஆகிய ஆறுகளில் கடும் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. மேலும் ஜம்மு காஷ்மீரில் உள்ள அணை​கள் முழு கொள்​ளளவை எட்​டிய​தால் திறக்​கப்​பட்​டுள்​ளன. இதனால் கடும் வெள்​ளப்​பெருக்கு ஏற்​படும் என கடந்த திங்​கள்​கிழமை, செவ்​வாய்க்​கிழமை, புதன்​கிழமை என தொடர்ந்து பாகிஸ்​தான் அரசுக்கு இந்​திய அரசு வெள்ள அபாய எச்​சரிக்கை விடுத்​தது. இதன் அடிப்​படை​யில், ஆற்​றங் … Read more

17-வது குழந்தையைப் பெற்ற ராஜஸ்தானின் 55 வயது பெண்

ஜெய்ப்​பூர்: ராஜஸ்​தான் மாநிலம் உதய்ப்​பூர் மாவட்​டம் லிலா​வாஸ் கிராமத்​தைச் சேர்ந்​தவர் கவாரா ராம் கால்​பெலி​யா, இவரது மனைவி ரேகா (55). இவருக்கு ஜடோல் பிளாக்​கில் உள்ள சுகா​தார மையத்​தில் 17-வது குழந்தை பிறந்​தது. பிரசவம் பார்த்த டாக்​டர் ரோஷன் தராங்கி கூறும்​போது, “ரேகா​வுக்கு இது 4-வது குழந்தை என்​றார். ஆனால், 17-வது குழந்தை என்​பது ஆச்​சரிய​மாக இருக்​கிறது” என்​றார். ரேகா​வுக்கு குழந்தை பிறந்​ததற்கு அவரது மகன்​கள், மகள்​கள், பேரக் குழந்​தைகள், கிராமத்​தினர் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். ரேகா​வுக்கு இது … Read more

தவறாக வழிகாட்டிய கூகுள் மேப் செயலி: காரில் சென்ற 3 பேர் உயிரிழப்பு

பில்வாரா: ​ராஜஸ்​தானில் கூகுள் மேப் உதவி​யுடன் சென்ற கார், சேதமடைந்த ஒரு பாலத்தை கடக்க முயன்​ற​தில் 3 பேர் வெள்​ளத்​தில் மூழ்கி உயி​ரிழந்​தனர். ராஜஸ்தானின் சித்​தோர்​கர் மாவட்​டம் கனகேடா கிராமத்​தைச் சேர்ந்த உறவினர்​கள் 9 பேர் அண்டை மாவட்​ட​மான பில்​வா​ரா​வில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்​றனர். இவர்​கள் வழி​பாட்டை முடித்​துக் கொண்டு நேற்று முன்​தினம் அதி​காலை​யில் காரில் சொந்த ஊருக்கு புறப்​பட்​டனர். ஆனால் கனமழை காரண​மாக போலீ​ஸார் சாலை தடுப்​பு​களை ஏற்​படுத்​தி​யிருந்​தனர். இதனால் அவர்​கள் கூகுள் மேப் … Read more

மக்களின் வாக்குகளை பறிக்க விடமாட்டேன்: மம்தா பானர்ஜி கருத்து

கொல்கத்தா: திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் மாணவர் அணி கூட்​டம் கொல்​கத்​தா​வில் நேற்று நடை​பெற்​றது. இதில் கட்​சி​யின் தலை​வரும் மேற்கு வங்க முதல்​வரு​மான மம்தா பானர்ஜி பேசி​ய​தாவது: நாடு முழு​வ​தி​லுமிருந்து 500-க்​கும் மேற்​பட்ட குழுக்​களை மேற்கு வங்​கத்​தில் பாஜக பணி​யில் அமர்த்​தி​யுள்​ளது. வாக்​காளர் பட்​டியலில் இருந்து பெயர்​களை நீக்​கு​வதை நோக்​க​மாக கொண்டு கணக்​கெடுப்​பு​களை நடத்​துகிறது. உங்​கள் பெயர் வாக்​காளர் பட்​டியலில் உள்​ளதா என்​பதை சரி​பார்க்க வேண்​டும். உங்​களிடம் ஆதார் அட்டை கட்​டா​யம் இருக்க வேண்​டும். நான் உயிருடன் இருக்​கும் … Read more

டெல்லி முன்னாள் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

புதுடெல்லி: அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் சுகாதார அமைச்சர், குடிநீர் வாரிய தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை சவுரப் பரத்வாஜ் வகித்துள்ளார். தற்போது ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி பிரிவுக்கான தலைவராக உள்ளார். இந்நிலையில் ஆம் ஆத்மி ஆட்சியில் மருத்துவ கட்டுமான திட்டங்களில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளதாக பாஜக அளித்த புகாரின் பேரில் டெல்லி லஞ்ச ஒழிப்புத் துறை (ஏசிபி) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதுகுறித்து ஏசிபி அதிகாரிகள் கூறுகையில், “கடந்த … Read more

திருப்பதி தேவஸ்தானத்தில் 4 வேற்றுமத ஊழியர் சஸ்பெண்ட்

திருப்பதி: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் அறங்​காவலர் குழு தலை​வ​ராக பி.ஆர். நாயுடு நியமனம் செய்​யப்​பட்​ட​தில் இருந்து, வேற்று மத ஊழியர்​கள் மீது நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இந்​துக்​கள் என கூறி, போலி சான்​றிதழ் கொடுத்து வேற்று மதத்தை தழு​வி, அந்த மதத்தை பின்​பற்றி வரும் தேவஸ்​தான ஊழியர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்டு வருகின்றனர். முதலில் 22 வேற்று மத ஊழியர்​கள் இடைக்​கால பணி நீக்​கம் செய்​யப்​பட்​டனர். இதனை தொடர்ந்து மேலும் 6 ஊழியர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்ட நிலை​யில், தற்​போது … Read more

பருவமழையால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்: ஜம்மு காஷ்மீரில் உயிரிழப்பு எண்ணிக்கை 41 ஆக உயர்வு

புதுடெல்லி: வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சாபில் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இதில், வைஷ்ணவி தேவி கோயில் நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மட்டும் 34 ஆகும். டெல்லியில் இயல்பை விட 60% அதிக மழை: டெல்லியில் ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை பெய்த மழையின் அளவு … Read more