இந்திய வல்லமையை பறைசாற்றும் 4 வகை போர் விமானங்கள் | இந்திய விமானப்படை தினம் பகிர்வு

இந்தியாவின் வான் வெளியை பாதுகாக்கும் இந்திய விமானப்படை 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் பிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய விமானப்படை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. உலகிலேயே மிகப்பெரிய விமானப்படைகளில் இந்திய விமானப்படை 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய விமானப்படையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள் பணிபுரிகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை … Read more

நாசிக் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் : பிரதமர் மோடி

டெல்லி : மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் இன்று அதிகாலை பேருந்து மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் பேருந்து தீப்பிடித்தது. அதிலிருந்த பயணிகள் பரிதாபமாக  11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன் இழப்பீடும் அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி … Read more

கியான்வாபி மசூதி 'கார்பன் டேட்டிங்' விவகாரம்; நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

கியான்வாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தை, ‘கார்பன் டேட்டிங்’ செய்வது குறித்த விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு வாரணாசி நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலின் பக்கத்தில் கியான்வாபி மசூதி உள்ளது. இந்நிலையில் முகலாய மன்னர்கள் காலத்தில் காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு தான் கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அதனை தொடர்ந்து கியான்வாபி மசூதியின் சுவர் இருக்கும் பக்கத்தில் அமைந்துள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட … Read more

பிராந்திய மொழிகள் தாக்குதலுக்கு உள்ளாவதாக ஆசிரியர்கள் வேதனை – ராகுல் காந்தி தகவல்

பெங்களூரு: கன்னட மொழியும், கர்நாடகா கலாச்சாரமும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது ஏன் என்று கன்னட ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முக்கியத் தலைவரான ராகுல் காந்தியின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவில் நடைபெறுகிறது. இந்த யாத்திரையின் போது ராகுல் காந்தி பல்வேறு மக்களைச் சந்தித்து வருகிறார். அந்த வகையில், வெள்ளிக்கிழமை ராகுல் காந்தி கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்களுடன் உரையாடினார். அப்போது, தங்களின் … Read more

பஞ்சாபில் இன்று அமர்க்களம் 80 போர் விமானம், ஹெலிகாப்டர்கள் சாகசம்

சண்டிகர்: பஞ்சாப்பில் இன்று 90வது விமானப்படை தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்திய விமானப்படை உருவாக்கப்பட்ட அக்டோபர் 8ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் விமானப்படை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விமான படையின் பலத்தை பறைசாற்றும் வகையில் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும், அணிவகுப்புகளும் நடத்தப்படும். இந்நிலையில், 90வது விமானப்படை தினம் பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் உள்ள சுக்னா ஏரி தளத்தில் இன்று கொண்டாடப்படுகிறது. இதில், 80 ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பங்கேற்கின்றன. இவை, திகைப்பூட்டும் பல சாகசங்களை செய்து … Read more

ரயில்வே பணிநியமன ஊழல் புகார்: லாலு பிரசாத் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான அரசில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் மீதான பணி மோசடி வழக்கில், மத்திய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததுள்ளது. 2004ல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்காலத்தில், 2009-ம் ஆண்டு வரை பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக பணியாற்றினார். அப்போது, ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதற்காக லாலுவும் அவரது குடும்பத்தினரும் நிலங்களை … Read more

வருங்கால மாப்பிள்ளைக்கு 125 உணவு வகைகளுடன் விருந்து – ஆந்திராவில் பரிமாறி அசத்திய மாமியார்

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம் எஸ்.கோட்டா பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா-சுப்புலட்சுமி தம்பதியின் ஒரே மகன் சைதன்யா. இவருக்கும், விசாகப்பட்டினம் ஸ்ரீநிவாச ராவ்-தனலட்சுமி மகள் நிஹாரிகாவுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 9-ல் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், தசரா பண்டிகைக்கு வருமாறு வருங்கால மாப்பிள்ளையை பெண் வீட்டார் அழைத்தனர். இதற்கு சம்மதம் தெரிவித்து, பெண் வீட்டுக்கு வந்தார் மாப்பிள்ளை சைதன்யா. அப்போது, அவருக்கு 125 வகை பலகாரங்கள், உணவு வகைகளை … Read more

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கண்டெய்னர் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 12 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கண்டெய்னர் லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டு 12 பேர் உயிரிழந்துள்ளனர். மராட்டியத்தில் நாசிக் நகரில் அவுரங்காபாத் சாலையில் பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற பஸ் ஒன்று இன்று அதிகாலை 5 மணியளவில் லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பஸ் தீப்பிடித்து கொண்டது. தீ மளமளவென பஸ் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதனால், பஸ்சுக்குள் சிக்கி கொண்ட பயணிகள் வெளியே வர … Read more

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து விபத்து: 11 பேர் பலி; 38 பேர் படுகாயம்

நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இன்று (அக்.8) அதிகாலை நடந்த விபத்தில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இதில் 11 பேர் பலியாகினர். 38 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை 5.15 மணியளவில் அவுரங்காபாத் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான பேருந்து ஸ்லீப்பர் கோச். அதிலிருந்த பயணிகள் பெரும்பாலானோர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று நாசிக் துணை கமிஷனர் அமோல் … Read more

எருமைகளை தொடர்ந்து பசு வந்தே பாரத் மீண்டும் சேதம்

புதுடெல்லி:  குஜராத்தில் எருமைகள் மீது மோதியதால் சேதமடைந்த வந்தே பாரத், நேற்று சரி செய்யப்பட்ட நிலையில் பசு மாடு மீது மோதி லேசான சேதமடைந்தது. குஜராத்தில் நேற்று முன்தினம் காலை வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென எருமைகள் தண்டவாளத்தில் கூட்டமாக புகுந்தன. இதனால், அவற்றின் மீது ரயில் மோதியது. இதில், ரயிலின் முன்பகுதி சேதம் அடைந்தது. வந்தே பாரத் ரயிலின் முகப்பு பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே, முகப்பு மட்டும் சேதமானது. உட்புற … Read more