என்னா அடி… ரத்தம் சொட்ட சொட்ட குடும்பிப்பிடி சண்டைபோட்ட பெண்கள் – ஓடும் ரயிலில் களேபரம்!

மும்பை புறநகர் ரயில்களில் எப்போதும் கூட்டநெரிசலோடுதான் காணப்படும். வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் ஏற்ற வகையில் இருப்பதால், உள்ளூர் ரயில்களை அவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.  அந்த வகையில், நேற்று முன்தினம் மும்பை புறநகர் ரயில் ஒன்றில் நடந்த சம்பவம் பெரும் தலைகுனிவை உண்டாக்கியுள்ளது. மும்பையின் தானே-பன்வல் உள்ளூர் ரயிலின் மகளிர் பெட்டியில் பெண் பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டைதான் இந்த பரபரப்பிற்கான காரணம்.  சமூக வலைதளங்களில் நேற்று வைரலாகி வந்த வீடியோ … Read more

சுப்ரீம் கோர்ட் அடுத்த தலைமை நீதிபதி யார்?: பரிந்துரை பட்டியலை கேட்டது ஒன்றிய அரசு

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி குறித்த பரிந்துரை பட்டியலை அனுப்புமாறு ஒன்றிய அரசு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நீதிபதிகளே தேர்வு செய்யும் நடைமுறை (கொலிஜியம்) தற்போது அமலில் உள்ளது. இதற்காக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர் நீதிமன்ற கொலிஜியம் (நீதிபதிகள் தேர்வுக் குழு), உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஆகியன உள்ளன. கொலிஜியத்தில் … Read more

சத்தீஸ்கர் | தசரா நிகழ்வில் ராவணன் பொம்மையின் 10 தலைகள் எரியாததால் க்ளார்க் பணியிடை நீக்கம்

ராய்பூர்: சத்தீஸ்கரில் தசரா கொண்டாட்டத்தின் போது நடந்த ராவணனின் உருவபொம்மை எரிப்பு நிகழ்வில் பத்து தலைகள் மட்டும் எரியாமல் போனது தொடர்பாக ஊழியர் ஒருவரை தம்தாரி மாநகராட்சி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு 4 அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. நாடெங்கும் இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் துர்கா பூஜையின் இறுதி நிகழ்வாக “தசரா” அல்லது “விஜயதசமி” விழா கருதப்படுகிறது. இந்தநிகழ்வின் போது, தீமையை நன்மை வெற்றி கொண்டதன் அடையாளமாக ராவணனின் … Read more

தசரா கொண்டாட்டம்: கட்டைகளால் அடித்துக்கொள்ளும் திருவிழா – சிறுவன் பலி

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் தேவரகட்டா பகுதியில் மல்லேஸ்வர சாமி (சிவன்) கோயில் உள்ளது. ஆந்திரா-கர்நாடகா எல்லையில் இக்கோயில் உள்ளதால் கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களும் அதிகமாக இக்கோயிலுக்கு வருவது வழக்கம். இக்கோயிலில் ஆண்டுதோறும் தசரா விழா வெகு சிறப்பாக நடைபெறும். கிருஷ்ண தேவ ராயர் காலம் முதல் இவ்விழா நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவ்விழாவில், விஜய தசமியன்று நள்ளிரவு சுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும். அதற்கு முன்பாக அப்பகுதி மக்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து கட்டை, தீப்பந்தம் … Read more

பனங்காட்டு படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது: நெல்லை போலீஸ் அதிரடி

திருவனந்தபுரம்: பனங்காட்டு படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நெல்லை போலீசார் கைது செய்துள்ளனர். நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜா செய்யப்பட்டுள்ளதகா தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே ஆணைகுடி கிராமத்தை சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் பனங்காட்டு படை கட்சியின் நிறுவன தலைவர் ஆவார். இவருக்கு தென்மாவட்டங்களில் ஏராளமான தொண்டர்கள் உண்டு. கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி நெல்லை மாவட்டம் நாங்குநேரி … Read more

அனைவருக்கும் பொருந்தும் மக்கள்தொகை கொள்கை – ஆர்எஸ்எஸ் தலைவர் வலியுறுத்தல்

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்ற தசரா பேரணி யில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: மக்கள் தொகை பெருக வளங்கள் தேவை. வளங்களை உருவாக்காமல் மக்கள் தொகை மட்டும் அதிகரித்தால் அது நாட்டுக்கு பெரிய சுமையாகிவிடும். மக்கள் தொகையை ஒரு சொத்தாக கருதும் மற்றொரு பார்வை நம் நாட்டில் உள்ளது. இந்த 2 அம்சங்களையும் மனதில் வைத்து அனைவருக்கும் பொருத்தமான மக்கள் தொகைக் கொள்கையைக் கொண்டு வர வேண்டும். அதாவது, அனைத்து சமூகங்களுக்கும் … Read more

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் OPEC; இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்துமா..!

கொரோனா தாக்கம் மற்றும் உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள சர்வதேச பொருளாதார மந்த நிலையில், அமெரிக்கா உட்பட உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தேவை படிப்படியாகக் குறைந்து வந்ததோடு மட்டும் அல்லாமல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலரில் இருந்து 90 டாலர் வரையில் குறைந்தது. எனவே, OPEC அமைப்பு கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருமானம் பெற வேண்டும் என்ற நோக்கில், கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்தது.  இந்தியாவிற்கும் இது பாதிப்பை … Read more

உ.பி. மாநிலம் ஜான்சியில் ராணுவ டாங்கியின் பேரல் வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் ராணுவ டாங்கியின் பேரல் வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அன்றாட பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது டாங்கியில் இருந்த பேரல் வெடித்து 2 பேர் உயிரிழந்தது குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக ராணுவ வீரருடன் சரளமாக தமிழில் பேசிய அருணாச்சல் டாக்டர்

இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் டாக்டர் லாம் டோர்ஜி. திபெத் எல்லையில், ஓம்தாங் என்ற இடத்தில் இவர் மெட்ராஸ் படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரை சந்தித்தார். அவர் தமிழர் என அறிந்ததும், டாக்டர் லாம் டோர்ஜி தமிழில் பேசினார். இந்த வீடியோ வைரலானது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள அருணாச்சலப் பிரதேச முதல்வர் பேமா காண்டு, ‘‘டாக்டர் லாம் டோர்ஜி தமிழகத்தில் மருத்துவம் பயின்றார். இவர் மெட்ராஸ் படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரருடன் சரளமாக தமிழில் பேசுவது … Read more

நாடு முழுவதும் 22 மொழிகளில் இருந்த இடத்தில் இருந்தே நில ஆவணம் பார்க்கலாம்: ஒன்றிய அரசு விரைவில் அமல்

புதுடெல்லி: ஒரு மாநிலத்தை சேர்ந்தவர் மற்ற மாநிலங்களில் நிலங்களை வாங்கும்போது, அந்த மாநில மொழிகளில் உள்ள ஆவணங்களை படிப்பதில் சிரமம் இருக்கிறது. இதற்கு, மொழி பெரிய தடையாக உள்ளது. இந்த பிரச்னையை தவிர்க்க, நில உரிமை ஆவணங்களை நாடு முழுவதிலும் இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைனில் பார்ப்பதற்கும், அவற்றை படித்து புரிந்து கொள்வதற்குமான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு செய்து வருகிறது. இதன்படி, நாடு முழுவதும் 22 மொழிகளில் இந்த ஆவணங்களை மொழி பெயர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது. இது … Read more