குடியரசுத் தலைவருக்கு எதிராக விமர்சனம் – முன்னாள் எம்.பி.க்கு பாஜக கண்டனம்

புதுடெல்லி: அண்மையில் குஜராத் சென்றிருந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “நாட்டின் உப்பு உற்பத்தியில் 76 சதவீதத்தை குஜராத் பூர்த்தி செய்கிறது. குஜராத் உற்பத்தி செய்யும் உப்பை அனைத்து இந்தியர்களும் உட்கொள்கின்றனர்” என்றார். இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெல்லி முன்னாள் எம்.பி. உதித் ராஜ் நேற்று முன்தினம் சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். இதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உதித் ராஜுக்கு நோட்டீஸ் … Read more

ஏட்டிக்கு போட்டி பேரணி தாக்கரே 1 லட்சம் ஷிண்டே 2 லட்சம்: போலீஸ் புள்ளி விவரம்

மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ்  தாக்கரே நடத்திய ஏட்டிக்கு போட்டி  தசரா பேரணிகளில், ஷிண்டேவுக்கு 2 லட்சம் பேரும், தாக்கரேவுக்கு ஒரு லட்சம் பேரும் திரண்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மகாராஷ்டிராவில் சிவசேனாைவ உடைத்து, பாஜ ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எல்லா வகையிலும் குடைச்சல் கொடுத்து வருகிறார். உண்மையான சிவசேனா தாங்கள் தான் என்பதை நிரூபிக்க, இருவரும் தங்களின் தொண்டர்கள் பலத்தை ஒவ்வொரு கூட்டத்திலும் … Read more

மேற்கு வங்க ஆற்றில் திடீர் வெள்ளம் – 8 பேர் உயிரிழப்பு; பலர் காணவில்லை

கொல்கத்தா: வட மாநிலங்களில் நவராத்திரி பண்டிகையின்போது வழிபட்ட துர்கா தேவி சிலைகளை ஆற்றில் கரைப்பது வழக்கம். அதன்படி மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டம் மால் பஜார் என்ற இடத்தில் துர்கா சிலைகளை மால் ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்றன. இதில் 40 பேர் மீட்கப்பட்டனர். 8 வயது சிறுவன், 13 வயது சிறுமி உட்பட … Read more

திருப்பதி புஷ்ப யாகம் ஆன்லைனில் டிக்கெட்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் புஷ்ப யாகத்தில் பங்கேற்க வரும் 10ம்  தேதி ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கில் வரும் கார்த்திகை மாதம் ஸ்ரவணம் (திருவோணம்) நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான புஷ்ப யாகம் வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது. கோயிலுக்குள் நடைபெறும் புஷ்ப யாகத்தில் பக்தர்கள் பங்கேற்பதற்காக வரும் 10ம் தேதி காலை … Read more

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியது!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் காந்திநகர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றுள்ளது. அந்த ரயில், வத்வா ரயில் நிலையத்தில் இருந்து மணிநகர் ரயில் நிலையம் இடையே சென்று கொண்டிருந்தபோது, காட்டெருமை கூட்டம் ஒன்று அந்த வழியே சென்றுள்ளது. இதில், விரைவாக வந்த ரயில் அவற்றின் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ரயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்து … Read more

கேரளாவில் 2 பேருந்துகள் மோதிய விபத்தில் 5 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு

பாலக்காடு: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், கொட்டாரக்காரா நகரிலிருந்து தமிழ்நாட்டின் கோயம்புத்தூருக்கு கேரள அரசுப் பேருந்து நேற்று முன்தினம் புறப்பட்டது. இரவு 11.30 மணியளவில் பாலக்காடு மாவட்டம் வடக்கன்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த பேருந்து மீது பின்னால் சென்ற தனியார் பள்ளியின் சுற்றுலா பேருந்து மோதியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி ராஜு கூறும்போது, “அரசுப் பேருந்து மீது மோதியது எர்ணாகுளத்தைச் சேர்ந்த தனியார் பள்ளியின் … Read more

புதிய தேசிய கட்சி துவக்க விழா சந்திரசேகர ராவ் மகள் கவிதா புறக்கணிப்பா? தெலங்கானா அரசியலில் பரபரப்பு

புதுடெல்லி: தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் புதிய தேசிய கட்சி தொடக்க விழாவில், அவருடைய மகள் கவிதா கலந்து கொள்ளாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலங்கானாவில் ஆட்சி செய்து வரும் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்), நேற்று முன்தினம் தேசிய கட்சியாக மாற்றப்பட்டது. அதற்கு, ‘பாரத் ராஷ்டிரிய சமிதி’ (பிஆர்எஸ்) என்றும் பெயர் சூட்டப்பட்டது.  2024 மக்களவை தேர்தலில் பாஜ.வை வீழத்துவதற்காக, தேசிய அரசியலில் முக்கிய பங்காற்ற  சந்திரசேகர ராவ் விரும்புகிறார். … Read more

உலக அரங்கில் இந்தியா வளர்ந்த நாடாக மாறி வருகிறது – மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதம்

சென்னை: உலக அரங்கில் இந்தியா வளர்ந்தநாடாக மாறி வருகிறது என்று சிஏ பட்டமளிப்பு விழாவில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதத்துடன் கூறினார். இந்திய கணக்கு தணிக்கையாளர் கல்வி நிறுவனம் சிஏ எனப்படும் கணக்கு தணிக்கையாளர் தேர்வை ஆண்டுதோறும் நடத்திவருகிறது. சிஏ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கும் பட்டமளிப்பு விழா டெல்லியில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் சென்னை உட்பட13 மையங்களில் இருந்து மாணவர்கள் இணைய வழியில் கலந்துகொண்டனர். சென்னையில் கலைவாணர் அரங்கில் … Read more

துபாயிலிருந்து புதுடெல்லிக்கு கடத்தி வரப்பட்ட 27 கோடி ரூபாய் மதிப்பிலான வைர வாட்ச் பறிமுதல்

துபாயிலிருந்து புதுடெல்லிக்கு கடத்தி வரப்பட்ட 27 கோடி ரூபாய் மதிப்பிலான வைர வாட்சை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து வந்த விமானப்பயணியை சோதனையிட்டபோது 7 கைக்கடிகாரங்கள், ஒரு வைர பிரேஸ்லெட் மற்றும் ஒரு 14 ப்ரோ மாடல் ஐ-போன் சிக்கியது. அவற்றுள், ஜாகப் அண்ட் கோ நிறுவனத்தால் 18 காரட் தங்கத்தில், 76 வெள்ளை வைரக்கற்கள் பதித்து தயாரிக்கப்பட்ட வாட்ச் இருந்துள்ளது. பெருங்கோடீஸ்வரர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இந்த வாட்சின் மதிப்பு 27 கோடி ரூபாய் எனக்கூறப்படுகிறது. … Read more

எருமை மீது மோதல்: ‘வந்தே பாரத்’ காயம்

புதுடெல்லி: குஜராத்தில் திடீரென ரயில்வே தண்டவாளத்தில் புகுந்த எருமைகள் மீது மோதியதில் வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி சேதம் அடைந்தது. மும்பை சென்ட்ரல் – குஜராத் காந்தி நகர் வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 30ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயிலை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில், குஜராத்தில் நேற்று காலை 11.20 மணியளவில் வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்த போது திடீரென எருமைகள் தண்டவாளத்தில் கூட்டமாக … Read more