SpiceJet மீதான தடையை நீட்டித்த DGCA… 50% விமானங்களை மட்டுமே இயக்கலாம்!

சில மாதங்களுக்கு முன் ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக சுமார் 7 முறை தரையிக்கப்பட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டிஜிசிஏ விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பிய நிலையில், சில கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் மீதான கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் அறிவித்துள்ளது. இப்போது 29 அக்டோபர் 2022 வரை விமான நிறுவனம், 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. முதலில் எட்டு வாரங்களுக்கு … Read more

கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை படத்துடன் கியூ ஆர் கோடு போஸ்டர் ஒட்டி காங்கிரஸ் கட்சியினர் நூதன பிரச்சாரம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அனைத்து பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்க பாஜக அரசு 40% கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு குற்றசாட்டியுள்ளது. முதல்வருக்கு நேரடியாக பணம் அனுப்புங்கள் எனக் கூறி கியூ ஆர் கோடு வடிவில் பேடிஎம் படத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை படத்தை சேர்த்து காங்கிரஸ் ஒட்டியுள்ளது. சாலைகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை பார்த்த பாஜக நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை போலீசார் கிழிதெறிந்தனர். சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஈஸ்வரப்பாவே தனது … Read more

மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!

“எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நாளை (22-ம் தேதி) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்” என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2022 – 2023-ம் ஆண்டுக்கான மருத்துவம் (எம்.பி.பி.எஸ்) மற்றும் பல் மருத்துவ (பி.டி.எஸ்) படிப்புக்கான விண்ணப்ப பதிவு நாளை (செப்.22-ம் தேதி) முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் … Read more

பகுஜன் சமாஜ் எம்பி வழக்கில் விடுவிப்பு எதிரொலி: வாரணாசி கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வாரணாசி: பகுஜன் சமாஜ் எம்பி ஒரு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், வாரணாசி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை உத்தரபிரதேச போலீசார் தேடி வருகின்றனர். உத்தரபிரதேச மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். எதிர்முனையில் பேசியவர், ‘வாரணாசி எம்பி – எம்எல்ஏ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்துள்ளோம். பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த கோசி தொகுதி எம்பி அதுல் ராயை, ஒவ்வொரு வழக்கிலும் இருந்தும் அவரை நீதிமன்றம் விடுவிப்பதால் … Read more

கர்நாடகா: சாமி சிலைகளை தொட்ட பட்டியலின சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.60 ஆயிரம் அபராதம்!

கர்நாடகாவில் கோயில் திருவிழாவில் சாமி சிலையை தொட்ட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்த மாற்று சமூகத்தினர். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகாவில் உள்ள உல்லேரஅள்ளி கிராமத்தில் வசிப்பவர்கள் ரமேஷ் – ஷோபா தம்பதியர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு சேத்தன் (15) என்ற மகன் உள்ளான். இந்நிலையில், இந்த கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஊர் திருவிழாவின் போது பூதம்மா தேவர் சிலை ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இதில் … Read more

பி.எம் கேர்ஸ் நிதி | பிரதமர் மோடி தலைமையிலான குழுவில் இணைந்த ரத்தன் டாடா, சுதா மூர்த்தி

புதுடெல்லி: பி.எம் கேர்ஸ் நிதியின் அறங்காவலர்களாக தொழிலதிபரும், டாடா சன்ஸ் தலைவருமான ரத்தன் டாடா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் கரிய முன்டா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2020-ல் நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவத் தொடங்கியபோது, அவசர நிவாரண உதவிகளை அளிப்பதற்காக பி.எம். கேர்ஸ் நிதி தொடங்கப்பட்டது. பி.எம். கேர்ஸ்-க்கு நிதி உதவி அளிக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு வருமான வரிவிலக்கு உண்டு. … Read more

நீரா ராடியா டேப் விவகாரம்: சிபிஐ அடித்த அந்தர் பல்டி!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான முதல் ஆட்சி காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், அரசியல் தரகர் நீரா ராடியாவின் டேப்புகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, 2008, 2009ஆம் ஆண்டுகளில் குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டும் அவரின் தொலைப்பேசி அழைப்புகளை கண்காணித்து பதிவு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, நீரா ராடியாவுடன் முக்கிய பிரமுகர்கள் பேசிய தொலைபேசி, … Read more

கவுதம் அதானியின் ஒருநாள் வருமானம் ரூ.1.612 கோடி!!!

அகமதாபாத்: கடந்த 2021-ல் கவுதம் அதானியின் ஒருநாள் வருமானம் ரூ.1.612 கோடியாகும். கவுதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பைவிட கவுதம் அதானி கடந்த ஓராண்டில் 11% அதிக சொத்து சேர்த்துள்ளார்.

சிக்கிய 22 டன் ஹெராயின்..! – டெல்லி காவல் துறை அதிர்ச்சி தகவல்..!

22 டன் ஹெராயின் பிடிபட்டுள்ளது டெல்லி சிறப்பு காவல் பிரிவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில நூதன முறைகளை பின்பற்றி இந்த ஹெராயின் கடத்தலை நடத்தியிருக்கிறது கடத்தல் கும்பல். மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள நவ சேனா துறைமுகத்தில், சுமார் 22 டன் ஹெராயின் போதைப் பொருள் கடத்தி வரப்பட்ட கன்டெய்னர் பிடிபட்டிருக்கிறது. இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ1,725 கோடி என டெல்லி போலீஸின் ஸ்பெஷல் செல் தகவல் தெரிவித்திருக்கிறது. டெல்லி காவல்துறைக்கு கிடைத்த உளவுத்துறையின் … Read more

​​சாலை டிவைடரில் தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் லாரி மோதி பலி: டெல்லியில் அதிகாலை சோகம்

புதுடெல்லி: டெல்லியில் சாலைடிவைடரில் தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் மீது லாரி மோதியதில் பலியாகினர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியின் சீமாபுரியில் உள்ள டிடிசி டிப்போ அருகில் உள்ள சிக்னல் பாயிண்டில் ​​சாலை டிவைடரில் சிலர் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 1.15 மணியளவில் அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறி விபத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே … Read more