நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா காலமானார்

டெல்லி: நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா (58) உயிரிழந்தார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு  ஆகஸ்ட் 10 ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ராஜு ஸ்ரீவஸ்தவா காலமானார்.

முஸ்லிம்கள் இந்தியா மீது நம்பிக்கை வைத்திருப்பதால்தான் மனித குண்டு சம்பவம் நடைபெறுவதில்லை – ஹிஜாப் வழக்கில் வாதம்

புதுடெல்லி: கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்தது சரி என கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான விவாதம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் தொடங்கியது. மனுதாரர் முனிஷா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தனது வாதத்தில் கூறியதாவது: ஹிஜாப் மீதான தடை, இந்தியாவில் சிறுபான்மையினர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிஜாப் … Read more

திருப்பதி கோவிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய முஸ்லீம் தம்பதி!

சென்னையை சேர்ந்த தொழிபதிபர் அப்துல் கனி தனது மனைவி சுபீனா பானு ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்த ரங்க நாயகி மண்டபத்தில் தேவஸ்தான தலைமை நிர்வாகி தர்மா ரெட்டி அவர்களிடம் கோவிலுக்கு ஒரு கோடியே 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நன்கொடையாக வழங்கினார். இதில், இஸ்லாமிய தம்பதி வழங்கிய நன்கொடையானது அன்னப்பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.15 லட்சம், பத்மாவதி ஓய்வறைக்கு ரூ.87 லட்சம் மற்றும் சமையல் … Read more

சித்தூரில் பேப்பர் பிளேட் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலி.!

ஆந்திர மாநிலம் சித்தூரில் பேப்பர் பிளேட் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். ரங்காச்சாரி தெருவில் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான பேப்பர் பிளேட் ஆலையில், நள்ளிரவில் மின்கசிவால் பற்றிய தீ ஆலை முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. இரவுப் பணி முடித்து பாஸ்கர், அவரது மகன் டெல்லிபாபு உட்பட அவரது நண்பர், குடும்பத்தினர் ஆலையின் பின்புற வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த நிலையில், மளமளவென பற்றி எரிந்த தீயால் அனைவரும் … Read more

ஆந்திர மாநிலம் சித்தூரில் பேப்பர் பிளேட் தயாரிப்பு நிறுவனத்தின் மேல்மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை- மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு

அமராவதி: ஆந்திர மாநிலம் சித்தூரில் பேப்பர் பிளேட் தயாரிப்பு நிறுவனத்தின் மேல் மாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை மகன் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான காகித தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நள்ளிரவில் 2 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் மாடியிலேயே தங்கியிருந்த பாஸ்கர், அவருடைய மகன் தில்லி பாபு, நண்பர் பாலாஜி ஆகியோர்கள் தீயில் சிக்கி உயிரிழந்தனர். தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு காலதாமதம் ஆனதால் பொதுமக்கள் … Read more

கேரள மாநிலம் பரம்பிக்குளம் அணை மதகுகளில் பிரச்சினை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பரம்பிக்குளம் அணையின் இரண்டு மதகுகளில் திடீரென பிரச்சினை ஏற்பட்டு ஷட்டர்கள் தாமாகவே திறந்ததால் தண்ணீர் வெளியேறி சாலக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷட்டர்களை சரி செய்து நீர் வெளியேறுவதைத் தடுப்பது என்பது கேரள பொதுப்பணித் துறை ஊழியர்களுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. இதற்கிடையில், பெரிங்கல்குத்து அணையின் மதகுகளும் திறக்கப்பட்டு பரம்பிக்குளம் அணைக்கான அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பரம்பிக்குளம் அணையின் மற்ற … Read more

எல்லை பிரச்னை; அசாம் – மிசோரம் முதல்வர்கள் இன்று பேச்சுவார்த்தை

அஸ்சால்: வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே பல ஆண்டுகளுக்காக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்தன. இந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு காண ஒன்றிய அரசு எடுத்து முயற்சிகளால், இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்நிலையில், நீண்ட காலமாக நிலவி வரும் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண மிசோரம் முதல்வர் ஜோரம் தங்காவும், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் இன்று மதியம் டெல்லியில் … Read more

ரயில்வே தேர்வுகளில் முறைகேடு செய்ய முயன்றோர் மீது வழக்குப்பதிவு… தேர்வாணையம் விளக்கம்

ரயில்வே பணிகளுக்கான தேர்வுகள் நேர்மையான முறையில் நடைபெறுவதாக ரயில்வே தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. ரயில் பாதை பராமரிப்பு பணியாளர், தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பதவிகளுக்கான காலியிடங்களுக்கு 2019ஆம் ஆண்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதற்காக 3 கட்ட தேர்வுகள் நடைபெற்ற நிலையில், செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 4-ம் கட்ட தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. முறைகேடுகளை தடுக்க கேள்வித்தாளை வேறு எவரும் அணுகாத வண்ணம் 256 அளவு இலக்க கணினி குறியீட்டில் சேமிக்கப்படுவதாக விளக்கமளித்துள்ள ரயில்வே தேர்வாணையம், முறைகேடுகளில் … Read more

தலைவர் பதவிக்கு போட்டியிட கட்சித் தலைமையின் அனுமதி தேவையில்லை – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தகவல்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு எந்த உறுப்பினரும் போட்டியிடலாம். இதற்கு கட்சித் தலைமையின் அனுமதி தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இடைக்கால தலைவராக பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் என … Read more

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் எவ்வளவு? அரசு முடிவு என்ன?

அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் பல முக்கிய முடிவுகள் இறுது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் தீபாவளி போனஸ், ஒன்றிய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து முடிவெடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.நாட்டின் பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் … Read more