அக்னிப் பாதை திட்டம் | டிசம்பர் மாதத்துக்குள் விமானப்படையில் 3,000 அக்னி வீரர்கள் தேர்வு – அடுத்த ஆண்டுமுதல் பெண்கள் தேர்வு

சண்டிகர்: இந்திய விமானப்படைக்கு வரும் டிசம்பர் மாதத்துக்குள் 3,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆரம்பக்கட்ட பயிற்சி அளிக்கப்படும் என்று விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி கூறினார். இந்திய விமானப்படையின் 90-வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, சண்டிகர் விமானப்படை தளத்தில் நடைபெற்ற சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியில் விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்திய விமானப்படையில், … Read more

போதை தரக்கூடிய இருமல் மருந்து பாட்டில்களை கடத்தியவர் கைது..

பெங்களூருவில், போதைப்பொருளாக பயன்படுத்தப்படும் இருமல் மருந்து கடத்திய நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 300க்கும் மேற்பட்ட இருமல் மருந்து பாட்டில்கள், இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பிட்ட இருமல் மருந்தை, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரிலேயே விற்க முடியும் என்றும், அதை மீறி மருத்துவரின் பரிந்துரையின்றி அதிகளவில் அந்த மருந்தை கடத்தியதற்காக, அமானுல்லா என்ற அந்த நபரை கைது செய்து சிறையிலடைத்துள்ளதாக, ஜெயநகர் போலீசார் தெரிவித்தனர்.  Source link

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்; மருத்துவமனை அறிக்கை

டெல்லி: உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சமாஜ்வாதி கட்சியின் நிறுவன தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலம் தொடர்ந்து மோசமடைந்ததை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 22ல் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் குழுவினர் … Read more

இந்தியாவில் நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட எங்களுக்கு இல்லை – ஓவைசி கண்டனம்

ஹைதராபாத்: இந்தியாவில் சாலையோர நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட முஸ்லிம்களுக்கு இல்லை என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசியுள்ளார். குஜராத்தில் கார்பா நிகழ்ச்சியின் போது கல் வீசியதாக போலீஸார் சிலரை தாக்கினர். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதனைச் சுட்டிக் காட்டிப் பேசிய ஓவைசி, “எப்போதெல்லாம் நாட்டில் பாஜக ஆட்சி நடக்கிறதோ அப்போதெல்லாம் முஸ்லிம்கள் ஒரு திறந்த சிறையில் தான் இருக்கிறோம். மதரஸாக்கள் கூட தரைமட்டமாக்கப்படுகின்றன. இங்கு தெரு நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட … Read more

முடியாத அரசியல் சண்டை… பயத்துக்கே பயம் காட்டும் பிரசாந்த் கிஷோர்!

பிகார் மாநில அரசியல் தேசிய அளவில் கவனம் பெறும் வகையில் மாறியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் யாத்ரா. பிகார் மாநிலத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்வது தான், தன்னுடைய இலக்கு என்றும், அதற்காக 3,500 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபயணம் செய்து மக்களை சந்தித்து புதிய வியூகம் வகுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே முதல்வர் நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ், அமித் ஷா, சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோரால் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரசாந்த் … Read more

'காண்டம் அதிகம் பயன்படுத்துவது நாங்கள்தான்'- மோகன் பகவத் கருத்துக்கு ஒவைசி பதிலடி

மத அடிப்படையிலான மக்கள்தொகை குறித்து மோகன் பகவத் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹைதராபாத் எம்.பி அசாதூதின் ஒவைசி பேசியுள்ளார். அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மத்தியில் பேசிய அதன் தலைவர் மோகன் பகவத், ”நமது நாட்டில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் அவசியம். மத அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. அதேபோல் கட்டாய மதமாற்றமும் அதிகரித்து இருக்கிறது. மக்கள்தொகை கட்டுப்பாட்டு மட்டுமின்றி, மத அடிப்படையிலான மக்கள்தொகை சமநிலையும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். இதை நாம் ஒருபோதும் புறக்கணிக்க … Read more

ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு – லாலு, மனைவி, மகள் மீது குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலங்களை லஞ்சமாக பெற்ற வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி, ரயில்வே முன்னாள் உயரதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 16 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009 வரை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது ரயில்வேயில் … Read more

இந்தியா – தைவான் இணைந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும் – தைவான் தூதர் பௌஷுவான் கெர்..!

இந்தியா – தைவான் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை, விரைவில் செயல்படுத்த வேண்டும், என தைவான் தூதர் பௌஷுவான் கெர் கூறியுள்ளார். செமிகண்டக்டர்கள், 5ஜி, தகவல் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கியமான துறைகளில், இந்தியாவுடன் தொழில் நுட்பத்தை பகிர்ந்து கொள்ள. ஆர்வமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம்  இந்தியாவின் சிறந்த நட்பு நாடாக தைவான் விளங்கும் என தைவான் தூதர் தெரிவித்தார். Source link

இஸ்திரி போட்டதற்கு பணம் வசூலிக்க சென்ற 15 வயது சிறுமி 45 வயது ஊழியரால் பலாத்காரம்; மகள் கர்ப்பமான நிலையில் தாய் கதறல்

குர்கிராம்: குர்கிராமில் இஸ்திரி போட்டதற்கு பணம் வசூலிக்க சென்ற 15 வயது சிறுமி 45 வயதுடைய தனியார் நிறுவன ஊழியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அரியானா மாநிலம் குர்கிராம் அடுத்த கந்த்சா கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் நூர் முகமது (45). இவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த பெண்ணின் இஸ்திரி கடைக்கு சென்று, தனது துணிகளுக்கு இஸ்திரி போட்டுக் கொடுக்கும்படி கேட்டார். அதன்படி அந்த பெண்ணும் நூர் முகமதுவின் துணிகளுக்கு இஸ்திரி … Read more

பாஜகவை அழிக்க கடவுள் என்னை அனுப்பியுள்ளார்.. அதிர வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்..!

“போ.., கம்சனின் வழித்தோன்றல்களையும், ஊழல் செய்பவர்களையும் அழித்துவிடு என்று, கடவுள் என்னை அனுப்பியிருக்கிறார்” என்று, வடோதராவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜகவுக்கு தாங்கள்தான் போட்டி என்று ஆம் ஆத்மி கட்சி கோதாவில் இறங்கியிருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அக்கட்சித் தலைவர்கள் அடிக்கடி குஜராத் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில், … Read more