காந்திநகர் – மும்பை மார்க்கத்தில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

குஜராத்: காந்திநகர்- மும்பை மார்க்கத்தில் செல்லும் வந்தே பாரத் விரைவு ரயிலை காந்திநகர் நிலையத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். காந்திநகரில் இருந்து கலுபூர் ரயில் நிலையம் வரை ரயிலில் இன்று பயணம் செய்கிறார். அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

`நீதிபதி எஸ்.முரளிதரை இடமாற்றம் செய்க’-ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்த உச்சநீதிமன்ற கொலிஜியம்

ஒரிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யும்படி குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பிறந்த முரளிதர் சென்னை மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் படித்து, பின்னர் சென்னை பல்கலைகழகத்தில் சட்டபடிப்பை முடித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் 1984ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்து, வழக்கறிஞர் … Read more

12 இளம் கதை சொல்லிகளை கண்டறிந்த டெய்லி ஹன்ட், ஏஎம்ஜி மீடியா!!

உள்ளூர் செய்திகள் அடங்கிய இந்தியாவின் முதல் இணையதளமான டெய்லி ஹன்ட், ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஸ்டோரி ஃபார் குளோரி #StoryForGlory என்ற பெயரில் அறிவுத்தேடல் நிகழ்ச்சியை நடத்தின. ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் லிமிடெட் அதானி குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட கதைசொல்லிகளுக்கான இறுதி தேர்வு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. அதில் வீடியோ மற்றும் அச்சு என இரண்டு பிரிவுகளில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி கடந்த … Read more

கட்சி மேலிட விருப்பம்: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இணைகிறார் மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கடைசி நிமிட வரவாக மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் மூத்த தலைவரும் காங்கிரஸ் தேர்தல் குழு தலைவருமான கே.சி.வேணுகோபால் நேற்றிரவு கார்கேவிடம் அவரே கட்சியின் விருப்பமான தெரிவாக இருப்பதாக எடுத்துரைத்து மனுத்தாக்கல் செய்யச் சொன்னதாகத் தெரிகிறது. மும்முனைப் போட்டியா? காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. காங்கிரஸ் மூத்த தலைவரும் … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்: சசிதரூர் பேட்டி

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக திருவனந்தபுரம் எம்.பி.சசிதரூர் பேட்டி அளித்தார். நாங்கள் அனைவரும் ஒரே சித்தாந்தத்தை நம்புபவர்கள், கட்சி வலிமையடைய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுவதாக சசிதரூர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அறிவுஜீவி தேவை இல்லை; ஆக்ஷன் நாயகரே தேவை – சொந்த மாநிலத்திலேயே சசி தரூருக்கு கடும் எதிர்ப்பு

திருவனந்தபுரம்: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் வேட்பு மனு பெற்றுள்ளார். ஆனால்சொந்த மாநில காங்கிரஸ் கட்சியினரே சசி தரூருக்கு எதிராக நிற்கின்றனர். ஐ.நா.வில் இருந்து அரசியல் உள்ளுரில் சுவர் பிடித்து விளம்பரம் செய்வது, கொடி கட்டி கட்சி வேலை செய்வது என்று அடிமட்ட அளவில் இருந்து படிப்படியாக அரசியலுக்கு வந்த வரலாறு சசி தரூருக்கு இல்லை. … Read more

தீவிரவாதத்துக்கு எதிரான போர் முன்னணி நாடாக இந்தியா விளங்குகிறது: ஜனாதிபதி முர்மு பேச்சு

புதுடெல்லி: தீவிரவாதத்துக்கு எதிரான போரில் முன்னணி நாடாக இந்தியா விளங்குகிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவு (ஐஎப்எஸ்) பயிற்சி அதிகாரிகள் சிலர்  ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஜனாதிபதி மாளிகையில்  நேற்று சந்தித்தனர். அப்போது, அவர்கள் மத்தியில் திரவுபதி முர்மு பேசுகையில், ‘பொருளாதார வளர்ச்சி மற்றும் பல அம்சங்களின் அடிப்படையில் உலக அரங்கில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு  பல முன்னேறிய நாடுகள் கூட  அதன் தாக்கத்தில் இருந்து இன்னும் … Read more

பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – மாயமான 15 பேரை தேடும் பணி தீவிரம்

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தின் துப்ரி நகரிலிருந்து பஷானி என்ற இடத்துக்கு பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் 30 பேர், நாட்டு படகு ஒன்றில் பிரம்மபுத்ரா ஆற்றில் பயணம் செய்தனர். அந்தப் படகில் 10 மோட்டார் சைக்கிள்களும் ஏற்றிச் செல்லப்பட்டன. துப்ரி நகரிலிருந்து 3 கி.மீ தொலைவில் அடாபாரி என்ற இடத்தில் உள்ள பாலத்தை, படகு கடக்க முயன்றபோது, அதன் தூண் மீது படகு மோதி கவிழ்ந்தது. இதனால் அந்த படகில் பயணம் செய்த அனைவரும் தண்ணீரில் மூழ்கி … Read more

முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

மும்பை: முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக இந்திய உளவுத்துறை சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், தற்போது இவருக்கு பாதுகாப்பு இசட் பிளஸ் வழங்கப்பட்டுள்ளது. இசட் பிளஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் அவருக்கு 58 கமண்டோ படையினர் பாதுகாப்பு வழங்குவார்கள். பாதுகாப்புக்காக செலவினங்களை முகேஷ் அம்பானி ஏற்பார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் முகேஷ் அம்பானி வீட்டருகே 20 … Read more

இன்று சானிட்டரி நாப்கின் கேட்பீர்கள்.. நாளை ஆணுறை கேட்பீர்கள்… ஐஏஎஸ் அதிகாரி பேச்சால் சர்ச்சை..!!

பீகார் மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ‘அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார’ என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மகளிர் மற்றும் குழந்தைகளு மேம்பாட்டு நிறுவன இயக்குநர ஹர்ஜோத் கவுர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகள் ஐஏஎஸ் அதிகாரியிடம் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் கேட்டனர். அதில் ஒரு மாணவி, “அரசு நிறைய இலவசங்களை அளித்து வருகிறது. ஆனால் எங்களுக்கு சானிட்டரி நாப்கின்களை ரூ.20 முதல் 30 ரூபாயில் ஏன் வழங்க முடியவில்லை? … Read more