’’மறுநாள் எழுந்தபோது நிர்வாணமாக்கப்பட்டிருந்ததை கண்டேன்’’ – பிரான்ஸ் சுற்றுலாப்பெண் கதறல்!

இன்று உலக சுற்றுலாத்தினத்தை பயண விரும்பிகள் பலரும் கொண்டாடி வருகின்றனர். பெரும்பாலான நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு சுற்றுலாத்துறை முக்கியப்பங்கு வகிக்கிறது. அதேபோலத்தான் இந்தியாவிலும். ஆனால் அதேசமயம் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. இந்தியாவிற்கு சுற்றுலாவந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 21ஆம் தேதி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் வாரணாசிக்கு சுற்றுலாப்பயணம் வந்துள்ளார். அன்று அங்கு வீதிகளில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது டூரிட்ஸ்ட் கைடு … Read more

சச்சின் பைலட்டுக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்த பாஜக? என்ன நடக்கிறது ராஜஸ்தானில்?

அசோக் கெலாட் மீது ஒழுங்க நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற கேள்விகள் எழுந்துகொண்டிருக்கும் போது மறுபக்கம் சச்சின் பைலட்டை தன் பக்கம் கொண்டுவர பாஜக மீண்டும் முயன்று வருகிறது. அதற்காக மறைமுக அழைப்பை விடுத்துள்ளது.  காங்கிரஸின் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடுவதை அடுத்து ராஜஸ்தான் முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு கொடுக்கலாம். இதன் மூலம் பெரிய நெருக்கடியாக இருந்த ராஜஸ்தான் மாநிலத்திலிருந்த உட்கட்சி பூசல் முடிவுக்கு வரும் என காங்கிரஸ் தலைமை திட்டம் வைத்திருந்த நிலையில், அசோக் … Read more

'பணம் சம்பாதிப்பதே காங். தலைவர்கள் நோக்கம்' – அமித் ஷா குற்றச்சாட்டு

மருத்துவ உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பதிலாக காங்கிரஸ் பணம் சம்பாதித்தது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டி உள்ளார். குஜராத் மாநிலத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக இங்கு பாஜக ஆட்சியில் உள்ளது. இருப்பினும் இந்த முறை குஜராத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. இந்த நிலையில் பாஜக மூத்தத் தலைவரும், … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும், வாராந்திர, வருடாந்திர உற்சவங்கள் என 450-க்கும் மேற்பட்ட உற்சவங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வருடாந்திர பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது  வருடாந்திர பிரம்மோற்சவம் பிரம்மனே முன்னின்று நடத்தியதாக ஐதீகம். இதன் காரணமாகவே இதனை பிரம்ம உற்சவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரம்மோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் மிகக் கோலாகலமாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்குள் நடத்தப்பட்டது. தற்பொழுது கொரோனா கட்டுப்பாடுகள் … Read more

`பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பை தடைசெய்யப்போகிறது மத்திய அரசு?!

பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்த அமைப்புக்கு தடை விதிக்க மத்திய அரசு ஆலோசனையை நடத்தி வருவதாக சொல்லப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்துள்ள நிலையில், தேச விரோத நடவடிக்கைகள் மற்றும் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக ஆதாரங்கள் கிட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வன்முறையான பல போராட்டங்களை நடத்தியது மற்றும் மதக் கலவரங்களை தூண்டியது … Read more

பேய் மீது வழக்கு; பாஜக ஆளும் மாநிலம்ன்னா சும்மாவா?

பேய் இருக்கா? இல்லையா? பேய் வர்றதுக்கு ஏதாவது அறிகுறி இருக்கா? என, சந்திரமுகி படத்தில் வடிவேலு கேட்ட கேள்விகள் இன்றளவும் நகைச்சுவையின் உச்சமாக பேசப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் சினிமாவில் வடிவேலு கேட்ட கேள்விக்கு பாஜக ஆளும் மாநிலத்தில் போலீசார் ‘ஆம்’ என பதில் அளித்துள்ளதோடு, பேய் மீது எப்ஃஐஆர் ஒன்று பதிவு செய்து நகைச்சுவைக்கு மேலும் வலுசேர்த்துள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் வெள்ளை உடை அணிந்த பேய் வீட்டின் கூரைகளில் நடமாடுவது போன்ற ஒரு வீடியோ … Read more

ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பதி – திருமலை இடையே 10 மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

திருமலை: ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பதி திருமலை இடையே  10 மின்சார பேருந்து சேவையை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். திருமலை – திருப்பதியை மையமாக கொண்டு முதல் முறையாக மின்சார பேருந்துகளை ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம்  100 மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈவே டிரான்ஸ் லிமிடெட் என்கிற தனியார் நிறுவனம் இதற்கான ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் மலைப்பாதையில்  சோதனை ஓட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. … Read more

பர்தா அணிய மறுத்த மனைவியை குத்திக்கொன்ற கணவன் – மும்பையில் கொடூரம்

பர்தா அணிய மறுத்ததில் ஏற்பட்ட சண்டை காரணமாக பிரிந்து வாழ்ந்த மனைவியை கணவன் கத்தியாலே குத்திக்கொன்ற சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. 36 வயதான இக்பால் ஷேக் டாக்ஸி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இவர், ரூபாலி(20) என்ற இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணை 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவரது பெயரையும் சாரா என மாற்றியுள்ளனர். இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஒரு ஆண்குழந்தையும் பிறந்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே இவர்கள் குடும்பத்தில் இருந்துவந்த பிரச்னை அதன்பின்பு … Read more

பெண்களுக்கு பாய் ஃபிரண்டுகள் சப்ளை; சர்ச்சையில் சிக்கியது..மொபைல் செயலி!

நாட்டில் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் அதீத வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதன் பலனாக, வீட்டில் இருந்தபடியே மின்சார வேகத்தில் எந்த வசதிகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. நமக்கு தேவையான உணவு, உடை என குண்டூசி முதல் காய்கறிகள் வரை அனைத்தையும் வீட்டு வாசலுக்கே வர வைக்க கூடிய அளவுக்கு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நாம் எப்போதாவது தனிமையாக உணர்ந்தால் அல்லது ஏதாவது ஒரு … Read more

இருதரப்பு உறவை மேம்படுத்த 7 மாநில முதல்வர்கள் டாக்கா பயணம்

டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஒன்றிய அரசின் வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டு துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை கடந்த 7ம் தேதி ெடல்லியில் சந்தித்து பேசினார். இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான 4,096 கிமீ நீளமுள்ள எல்லைப்பகுதியானது வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுராவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி போன்ற அமைப்புகளின் போராளிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இவர்கள் வங்கதேசத்தில் இருந்து வந்து தாக்குதல் நடத்துவதால் அவர்களை ஒடுக்குவது குறித்தும் … Read more