காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் – சசி தரூர் உட்பட 5 எம்.பி.க்கள் கடிதம்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று சசி தரூர் உட்பட 5 எம்.பி.க்கள் கட்சியின் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளனர். காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரும் 22-ம் தேதி வெளியாகிறது. 24-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 30-ம் தேதி நிறைவடைகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ம் தேதி கடைசி நாள். போட்டி ஏற்படும் நிலையில் அக்டோபர் 17-ம் தேதி டெல்லியில் வாக்குப்பதிவு … Read more

கேரளா வந்தாச்சு… ஆசையாய் ஓடிவந்த இளைஞர்கள்; ராகுலுக்கு டபுள் சர்ப்ரைஸ்!

உறங்கி கிடக்கும் காங்கிரஸ் தொண்டர்களை தட்டி எழுப்பவும், சனாதன சக்திகளை ஒடுக்கவும் வீறு கொண்டு எழுந்திருக்கிறார் ராகுல் காந்தி என காங்கிரஸ் கட்சியினர் புகழாரம் சூட்டியுள்ளனர். குமரி முதல் இமயம் வரை ”இந்திய ஒற்றுமை பயணம்” (Bharat Jodo Yatra) என்ற பெயரில்12 மாநிலங்கள் வழியாக சுமார் 3,500 கிலோமீட்டர் தூரத்தை 150 நாட்களில் கடக்கும் பாத யாத்திரையை தொடங்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். கன்னியாகுமரியில் ராகுலின் பாத யாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க … Read more

மரத்தில் இருந்த சிறுத்தை புலியை விரட்டி அடித்த தெரு நாய்கள்.. வைரலாகும் வீடியோ!

கர்நாடகாவில், மரத்தில் இருந்த சிறுத்தை புலியை தெரு நாய்கள் விரட்டி அடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. மைசூர் ரிசர்வ் பேங்க் பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் அருகே இருக்கும் மரத்தின் மீது சிறுத்தை புலி ஒன்று அமர்ந்திருந்தது. இதனை கவனித்த 2 தெரு நாய்கள் சிறுத்தை புலியை பார்த்து சத்தமாக குரைக்க ஆரம்பித்தன. இதனால் மரத்தை விட்டு கீழே இறங்கிய சிறுத்தைப்புலி  அந்த 2 நாய்களையும் தாக்க முயற்சி செய்தது. ஆனால் நாய்கள் இரண்டும் சிறுத்தை புலியிடம் … Read more

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை உருவானது

டெல்லி: வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை உருவாகியுள்ளது. மேற்குமத்திய – வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கரையோரத்தில் குறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்தது. குறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை வலுவடைந்தது.

லேசாக சாய்ந்துள்ள 89 அடி விநாயகர் சிலை – ஆந்திர மாநிலத்தில் பக்தர்கள் அதிர்ச்சி

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் வைக்கப்பட்டுள்ள 89 அடி விநாயகர் சிலை நேற்று மதியம் லேசாக ஒரு அடி வரை இடது புறம் சாய்ந்தது. இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விசாகப்பட்டினம், காஜுவாகா பகுதியில் விநாயகர் உற்சவ கமிட்டியினர் கடந்த விநாயகர் சதுர்த்தியையொட்டி, அப்பகுதியில் இந்த ஆண்டு 89 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலையை வைத்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிமுதல், தினமும் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றது.ஆந்திராவிலேயே மிக … Read more

நானே பாத்துக்குறேன்… பாஜகவ என்கிட்ட விட்ருங்க; கே.சி.ஆர் எடுத்த சபதம்- இது நேஷனல் பாலிடிக்ஸ்!

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மூன்றாவது முறை ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது. இதனை முறியடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. ஆனால் தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் புதிதாக ஒரு திட்டத்தை களமிறங்க திட்டமிட்டுள்ளார். முன்னதாக பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்ட 2018 முதல் … Read more

ஆன்லைன் லோன் ஆப் மோசடி கும்பலின் 50 வங்கி கணக்குகள் முடக்கம்!

உத்தரபிரதேசத்தில் ஆன்லைன் லோன் ஆப் மூலமாக கடன் பெற்ற வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து அதிக வட்டி கேட்டும், ஆபாசமாக புகைப்படங்களை அனுப்பி மோசடி கும்பல் ஒன்று மிரட்டி வருவதாக புகார் ஒன்று எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு, கலெக்சன் ஏஜெண்டான உத்தரபிரதேசத்தை சேர்ந்த தீபக்குமார் பாண்டே, ஹரியானாவை சேர்ந்த ஜிதேந்தர் தன்வர், டீம் லீடர் நிஷா, மேனேஜர் பிரகாஷ் சர்மா ஆகியோரை போலீஸார் … Read more

மும்பை விமான நிலையத்தில் 12 கிலோ தங்கம் பறிமுதல்

மும்பை: மும்பை விமான நிலையத்தில் ரூ. 5.38 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த 12 பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். சூடான் நாட்டினர் 6 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

‘கூட்டத்தில் இருந்து வெளியே போய் விடுங்கள்’ – பெண் காவல் அதிகாரியை விரட்டிய மகளிர் ஆணைய தலைவி

சண்டிகர்: ஹரியாணாவில் காவல் பெண் அதிகாரியை மகளிர் ஆணைய தலைவி வெளியே போக சொல்லி விரட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது ஹரியாணாவின் கைத்தால் பகுதியில் நேற்று முன்தினம் மாநில மகளிர் ஆணைய கூட்டம் நடைபெற்றது. இதில் ஆணைய தலைவி ரேணு பாட்டியா, மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கணவன், மனைவி விவாகரத்து விவகாரம் விசாரிக்கப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த காவல் பெண் அதிகாரி கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரை, ஆணைய தலைவி ரேணு … Read more

நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்நோயின் கூட்டாளிகள் 3 பேர் கைது!

டெல்லியில் நிழலுக தாதா லாரன்ஸ் பிஷ்நோய் கும்பலுடன் போலீசார் நடத்திய நீண்ட நேரத் துப்பாக்கிச் சண்டையை அடுத்து மூன்று ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ரோகிணி பகுதியில் லாரன்ஸ் பிஷ்நோயின் கூட்டாளிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறையின் சிறப்பு செல் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த ஆயுதம் ஏந்திய காவல் படையினர் மூன்று பேரையும் சரண் அடைய வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் துப்பாக்கியால் சுட்டதால் அங்கு நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்து வந்தது. இறுதியாக மூன்று பேரும் கைது … Read more