லேசாக சாய்ந்துள்ள 89 அடி விநாயகர் சிலை – ஆந்திர மாநிலத்தில் பக்தர்கள் அதிர்ச்சி

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் வைக்கப்பட்டுள்ள 89 அடி விநாயகர் சிலை நேற்று மதியம் லேசாக ஒரு அடி வரை இடது புறம் சாய்ந்தது. இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விசாகப்பட்டினம், காஜுவாகா பகுதியில் விநாயகர் உற்சவ கமிட்டியினர் கடந்த விநாயகர் சதுர்த்தியையொட்டி, அப்பகுதியில் இந்த ஆண்டு 89 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலையை வைத்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிமுதல், தினமும் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றது.ஆந்திராவிலேயே மிக … Read more

நானே பாத்துக்குறேன்… பாஜகவ என்கிட்ட விட்ருங்க; கே.சி.ஆர் எடுத்த சபதம்- இது நேஷனல் பாலிடிக்ஸ்!

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மூன்றாவது முறை ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது. இதனை முறியடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. ஆனால் தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் புதிதாக ஒரு திட்டத்தை களமிறங்க திட்டமிட்டுள்ளார். முன்னதாக பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்ட 2018 முதல் … Read more

ஆன்லைன் லோன் ஆப் மோசடி கும்பலின் 50 வங்கி கணக்குகள் முடக்கம்!

உத்தரபிரதேசத்தில் ஆன்லைன் லோன் ஆப் மூலமாக கடன் பெற்ற வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து அதிக வட்டி கேட்டும், ஆபாசமாக புகைப்படங்களை அனுப்பி மோசடி கும்பல் ஒன்று மிரட்டி வருவதாக புகார் ஒன்று எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு, கலெக்சன் ஏஜெண்டான உத்தரபிரதேசத்தை சேர்ந்த தீபக்குமார் பாண்டே, ஹரியானாவை சேர்ந்த ஜிதேந்தர் தன்வர், டீம் லீடர் நிஷா, மேனேஜர் பிரகாஷ் சர்மா ஆகியோரை போலீஸார் … Read more

மும்பை விமான நிலையத்தில் 12 கிலோ தங்கம் பறிமுதல்

மும்பை: மும்பை விமான நிலையத்தில் ரூ. 5.38 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த 12 பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். சூடான் நாட்டினர் 6 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

‘கூட்டத்தில் இருந்து வெளியே போய் விடுங்கள்’ – பெண் காவல் அதிகாரியை விரட்டிய மகளிர் ஆணைய தலைவி

சண்டிகர்: ஹரியாணாவில் காவல் பெண் அதிகாரியை மகளிர் ஆணைய தலைவி வெளியே போக சொல்லி விரட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது ஹரியாணாவின் கைத்தால் பகுதியில் நேற்று முன்தினம் மாநில மகளிர் ஆணைய கூட்டம் நடைபெற்றது. இதில் ஆணைய தலைவி ரேணு பாட்டியா, மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கணவன், மனைவி விவாகரத்து விவகாரம் விசாரிக்கப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த காவல் பெண் அதிகாரி கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரை, ஆணைய தலைவி ரேணு … Read more

நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்நோயின் கூட்டாளிகள் 3 பேர் கைது!

டெல்லியில் நிழலுக தாதா லாரன்ஸ் பிஷ்நோய் கும்பலுடன் போலீசார் நடத்திய நீண்ட நேரத் துப்பாக்கிச் சண்டையை அடுத்து மூன்று ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ரோகிணி பகுதியில் லாரன்ஸ் பிஷ்நோயின் கூட்டாளிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறையின் சிறப்பு செல் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த ஆயுதம் ஏந்திய காவல் படையினர் மூன்று பேரையும் சரண் அடைய வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் துப்பாக்கியால் சுட்டதால் அங்கு நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்து வந்தது. இறுதியாக மூன்று பேரும் கைது … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 5,076 பேருக்கு கொரோனா… 11 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 5,076 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,95,359 ஆக குறைந்தது. * புதிதாக 11 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் … Read more

கேம் செயலி வழியாக பண மோசடி செய்த கொல்கத்தா தொழிலதிபரிடம் இருந்து ரூ.17 கோடி பறிமுதல் – அமலாக்கத் துறை நடவடிக்கை

கொல்கத்தா: மொபைல் கேம் செயலி வழியாக பணமோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறை நேற்று கொல்கத்தாவில் ஆறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டது. இந்தச் சோதனையின் போது ரூ.17 கோடி ரொக்கமும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ‘இ-நக்கெட்ஸ்’ என்ற மொபைல் கேம் செயலி வழியாக பணமோசடி செய்ததாக கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் அமீர் கான் மீதும் மேலும் சில நபர்கள் மீதும் பெடரல் வங்கி புகார் அளித்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமீர் … Read more

E-Nuggets செயலி மூலம் மோசடி.. ரூ.17 கோடி ரொக்கம்.. வலையில் சிக்கிய தொழிலதிபர்!

E-Nuggets (இ-நக்கெட்ஸ்) என்ற செல்போன் செயலில் மூலம் மோசடி செய்ததாக கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் அமீர் கான் உள்ளிட்ட சிலர் மீது அமலாக்கத்துறையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமீர் கானுக்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூ.17 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கவே தொழிலதிபர் அமீர் கான் இ-நக்கெட்ஸ் என்ற செயலியை … Read more

படகுப் போட்டியில் பங்கேற்பதற்காக சென்ற படகு கவிழ்ந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

கேரளாவில் படகுப்போட்டியில் பங்கேற்கச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தனர். பத்தணந்திட்டா மாவட்டம் ஆறான்முளா பகுதியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆலப்புழா அருகே சென்னித்தலா பகுதியிலிருந்து ஒரு படகு புறப்பட்டது. 15க்கும் மேற்பட்டோர் துடுப்பு போட்டபடி சென்ற நிலையில் அந்த படகு திடீரென நீரில் கவிழ்ந்தது. படகிலிருந்து தண்ணீரில் விழுந்தவர்களை மீட்க அங்கிருந்தவர்கள் முயன்றனர். 4 பேரை மீட்க முடியாததை அடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு … Read more