திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மான்ட நாயகனின் பிரம்மோற்சவம் நாளை கொடி ஏற்றத்துடன் தொடக்கம்: நாளை இரவு பெரிய சேஷ வாகனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மான்ட  நாயகனின் பிரம்மோற்சவம் நாளை கொடி ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதையடுத்து நாளை இரவு பெரிய சேஷ வாகனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கலியுக தெய்வமான சீனிவாச பெருமாளுக்கு முதலில் பிரம்ம தேவன் உற்சவத்தை  நடத்தியதால் பிரம்மோற்சவம் என அழைக்கப்படுகிறது. பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் பலவித வாகனங்களில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி  எழுந்தருளி பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். புரட்டாசி மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் … Read more

”சார் என் புத்தகப் பையில் ஏதோ நெளியுது!!”.. திறந்து பார்த்து அதிர்ந்து போன ஆசிரியர்!

மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவி ஒருவரின் பையில் நாகபாம்பு ஒன்று மறைந்திருந்த சம்பவம் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. பாஜக பிரமுகர் கரண் வசிஷ்தா என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ஷாஜாபூரிலுள்ள பதோனி பள்ளியில் இது நடந்திருக்கிறது. வசிஷ்தா தனது பகிர்வில், 10ஆம் வகுப்பு மாணவியின் புத்தக பையில் பாம்பு இருந்தது கண்டறியப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஒரு நபர் மெதுவாக புத்தகப்பையை திறந்து புத்தகங்களை வெளியேக் கொட்டுகிறார். … Read more

பழங்குடியின சிறுமியின் ஆடையை துவைத்துக் கொடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட்!!

5ஆம் வகுப்பு சிறுமியின் அழுக்கான உடையை துவைத்து கொடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் ஷாதோல் மாவட்டத்தில் பாரா காலா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க பள்ளிக்கு 5ஆம் வகுப்பு படிக்கும் பழங்குடியின மாணவி அழுக்கான சீருடையை அணிந்து வந்துள்ளார். இதனைக் கண்ட அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சிராவன் குமார் திரிபாதி என்பவர் மற்ற மாணவிகளின் முன்னிலையில் அந்த மனைவியின் அழுக்கு சீருடையை கழற்றி, அதை தானே துவைத்தும் கொடுத்துள்ளார். அந்த … Read more

தலித் மருத்துவர் பிரேத பரிசோதனை செய்ததால் நோயாளியின் இறுதிச் சடங்கை புறக்கணித்த கொடுமை: பைக்கில் கட்டி சென்று தகனம் செய்த பஞ். தலைவரின் கணவர்

பர்கர்: ஒடிசாவில் இறந்த நோயாளியின் உடலை தலித் மருத்துவர் பிரேத பரிசோதனை செய்ததால், அவரது உடலை வாங்க குடும்ப உறவுகள் மறுத்துவிட்டன. அதனால் இறந்தவரின் உடலை தனது பைக்கில் கட்டிச் சென்று பஞ்சாயத்து தலைவரின் கணவர் தகனம் செய்தார். ஒடிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தை சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளியான முச்சுனு சந்தா என்பவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் அரசு … Read more

ரெட் சிக்னலில் நிற்காமல் காரில்சென்ற நபர்-தடுத்து நிறுத்திய காவலரை காலணியால் தாக்கிய அவலம்

புனே – அகமதாபாத் சாலையில் போக்குவரத்து காவலர் ஒருவரை நிர்வாகி ஒருவர் காலணியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சனிக்கிழமை மாலை 5 மணியளவில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து உதவி ஆய்வாளர் லஹானே கூறுகையில், ‘’வாகோலி பகுதியைச் சேர்ந்தவர் பால்கிருஷ்ணா ஜெயராம் தால்கே(32). இவர் கராதி பைபாஸில் சிக்னலில் நிற்காமல் தனது காரை ஓட்டிச்சென்றபோது கான்ஸ்டபிள் ஆனந்த் ராமசந்திர கோசாவி(43) தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும் அவரிடம் லைசன்சை காட்டுமாறு … Read more

பள்ளத்தாக்கில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 10 பேர் பலி!!

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள குல்லு மாவட்டத்தின் பஞ்சார் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானது. 17 பேரை ஏற்றிச் சென்ற டெம்போ ட்ராவலர் மலைக்குன்றில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனத்தில் வந்தவர்கள் அனைவரும் சுற்றுலாவிற்காக வந்தவர்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்கள் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா, டெல்லி … Read more

காதலியை கொன்று பிணத்தை ஆம்புலன்சில் கடத்திய காதலன்!!

மகாராஷ்டிரா மாநிலம் கல்யான் பகுதியைச் சேர்ந்த சதாம் சையத் (30) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த கவிதா (22) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி அதிகாலை சுமார் 4 மணியளவில் இருவருக்குள்ளும் சண்டை வந்துள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சதாம், கவிதாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் கவிதா மூச்சுத்திணறி … Read more

இருமாநில அட்டவணை அடுத்த மாதம் வெளியீடு; தேர்தல் ஆணைய குழு குஜராத் பயணம்: இமாச்சல் பிரதேசம் செல்லவும் திட்டம்

புதுடெல்லி: குஜராத், இமாச்சல் பிரதேச தேர்தல் அட்டவணை அடுத்த மாதம் வெளியிட உள்ள நிலையில், முதன்முறையாக தேர்தல் ஆணைய குழு இன்று குஜராத் செல்கிறது. குஜராத்தில் கடந்த 1998ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. கேசுபாய் படேல் தொடங்கி, நரேந்திர மோடி (தற்போது பிரதமர்), ஆனந்திபென் படேல் (தற்போது உத்தரபிரதேச ஆளுநர்), விஜய் ரூபானி, பூபேந்திர படேல் (தற்போதைய குஜராத் முதல்வர்) ஆகியோர் முதல்வராக பதவி வகித்தனர். வரும் டிசம்பர் வாக்கில் குஜராத்தில் சட்டப் … Read more

10 யூடியூப் சேனல்களின் வீடியோக்கள் முடக்கம்!!

தவறான தகவல்களை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களில் இருந்து 45 வீடியோக்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. தேச பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிப்பதாக மத்திய அரசு யூடியூப் சேனல்களை கண்காணித்து அவ்வப்போது முடக்கி வருகிறது. கடந்த காலங்களில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை சேர்ந்த யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தவறான தகவல்களை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களில் இருந்து 45 வீடியோக்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு … Read more

வெளியானது மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள்!!

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டபடிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது. புதிய கல்வி கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு க்யூட் (CUET) எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு (Common university entrance test ) நடத்தப்பட்டு வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டபடிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்தியா முழுவதும் 50 தேர்வு மையங்களில் மத்திய … Read more