தயாரிப்பாளர் ஆனார் ரம்யா

பெங்களூரு: தமிழில் பல படங்களில் நடித்துள்ள ரம்யா இங்கு ‘குத்து ரம்யா’ என்று அழைக்கப்படுகிறார். கன்னடத்தில் ‘திவ்யா ஸ்பந்தனா’ என்ற பெயரில் நடித்தார். ஒருகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்பி ஆனார். அரசியலுக்கு சென்ற பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். கடைசியாக கோடி ராமகிருஷ்ணா இயக்கிய ‘நாகராஹவு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் திரைத்துறைக்கு வருகிறார். இம்முறை அவர் தயாரிப்பாளராக வருகிறார். நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது … Read more

பிஹார் | பதவியேற்ற 15 நாளில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கார்த்திகேய சிங்

பாட்னா: பிஹாரில் பதவியேற்ற 15 நாளில் பதவியை ராஜினாமா செய்துள்ளார் சட்டத்துறை அமைச்சர் கார்த்திகேய சிங். பிஹாரில் பாஜக.,வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுடன் சேர்ந்து புதிய ஆட்சியை அமைத்தார். நிதிஷ் குமார் முதல்வராகவும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் கடந்த மாதம் 10-ம் தேதி பொறுப்பேற்றனர். இதன்பின் கடந்தமாதம் 16ம் தேதி பிஹார் அமைச்சரவை விரிவாக்கப்பட்டு 31 … Read more

பணம் மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு நீதிமன்றம் சம்மன்..!

பணமோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வரும் செப்டம்பர் 26ம் தேதி நேரில் ஆஜராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. தொழிலதிபரின் மனைவியை ஏமாற்றி கோடிக் கணக்கில் பணம் பறித்த வழக்கில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகர், அந்த பணத்தில் இருந்து ஜாக்குலினுக்கு 5 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வழங்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. அதோடு ஜாக்குலினின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் சுகேஷ் சந்திரசேகர் பணம் கொடுத்ததாக தெரிவித்திருந்தது. கடந்த வாரம் இந்த … Read more

3 நாட்கள்.. 240 கி.மீ.. எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்து காருக்குள்ளே டேரா போட்ட ராஜநாகம்!

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஆர்ப்பூக்கரையைச் சேர்ந்த சுஜித் என்பவரது காருக்குள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி ராஜ நாகம் ஒன்று ஊர்ந்து சென்றதாக நம்பப்படுகிறது. அவர் மலப்புரம் சென்றிருந்த வேளையில் அங்குள்ள வழிக்கடவு சோதனைச் சாவடிக்கு அருகே கார் நிறுத்தப்பட்டிருந்தபோது காருக்குள் பாம்பு ஏறியதைக் கண்டதாக சுஜித் தெரிவித்தார். ஆனால் காருக்குள் எவ்வளவு தேடியும் சுஜித்தால் பாம்பை கண்டுபிடிக்க இயலவில்லை. பாம்பை வெளியே எடுக்க வனத்துறை அதிகாரிகளை அழைத்தார். அது என்ஜின் பேக்குள் நுழைந்து மற்றும் கார் … Read more

ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும்..! – பாஜக கடும் தாக்கு..!

பாஜக ரூ.20 கோடி பேரம் பேசியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். டெல்லி கல்வி அமைச்சர் சிசோடியா விவகாரம் முதல் டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். பாஜக தங்களிடம் ரூ.20 கோடி பேரம் பேசியதாக ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சிலர் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் பேரம் பேசியதாக சொல்லப்படும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று … Read more

தேர்வில் குறைவான மதிப்பெண் அளித்த ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து அடித்த மாணவர்கள்.!

ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக அளித்த ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அங்குள்ள தும்கா என்ற கிராமத்தில் இது நிகழ்ந்துள்ளது. செய்முறை தேர்வில் தங்களுக்கு குறைவான மதிப்பெண்களே அளிக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்ததாகவும், இது குறித்து ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அம்மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link

அன்று கல்லூரி நண்பர்கள் தொடங்கிய ஆன்லைன் பேக்கரி.. இன்று கோடிகளில் புரளும் பிசினஸ்!

2016இல் Bakingo என்ற பெயரில் க்ளவுடு கிச்சன் மாடலில் தொடங்கப்பட்டது ஒரு ஆன்லைன் பேக்கரி. இன்று அது பல கோடி லாபம் தரும் பெரிய தொழிலாக 11 நகரங்களில் பரந்து விரிந்துள்ளது. டெல்லி நேதாஜி சுபாஷ் பல்கலைக்கழகத்தில் படித்த நண்பர்களான ஹிமான்ஷு சாவ்லா, ஸ்ரே சேகல் மற்றும் சுமன் பாத்ரா ஆகியோரால் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். Bakingo விற்கு அடித்தளமாக இருந்தது Flower Aura. 2006 மற்றும் 2007இல் கல்லூரி படிப்பை முடித்தபிறகு சில ஆண்டுகள் கார்பரேட் … Read more

பிரதமர் மோடியின் சாப்பாட்டு செலவு விபரம் ..! – தகவல் அறியும் உரிமை சட்டம் அளித்த பகீர் தகவல்..!

பிரதமர் மோடியின் சாப்பாட்டு செலவு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கோரப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்த பிரதமர் அலுவலகச் செயலாளர் பினோத் பிஹாரி சிங்,” பிரதமரின் உணவுக்காக அரசு பட்ஜெட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட செலவிடப்படவில்லை. பிரதமரின் இல்லம் இந்திய மத்திய பொதுப்பணித் துறையால் பாதுகாக்கப்படுகிறது. அதே சமயம் வாகனங்களின் பொறுப்பு எஸ்பிஜி பொறுப்பில் உள்ளது என்றும் கூறினார். மேலும் , நாடாளுமன்றத்தில் இயங்கும் கேன்டீன் தொடர்பாக தற்போதைய அரசு பல சீர்திருத்தங்களை செய்துள்ளது. … Read more

ஆம்புலன்ஸ் வராததால் பிரசவ வலியால் துடித்த மனைவியை தள்ளுவண்டியில் படுக்க வைத்து மருத்துவமனையில் அனுமதித்த கணவன்!

மத்தியப்பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் பிரசவ வலியால் துடித்த தனது மனைவியை ஒருவர் தள்ளுவண்டியில் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் அவர் ஆன்புலன்சை அழைத்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால், வேறு வழியின்றி அவர் தனது மனைவியை தள்ளு வண்டியில் படுக்க வைத்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால் அதிகாரிகள் உடனடியாக அந்த பெண்ணுக்கு மருத்துவ உதவிகள் கிடைக்க … Read more

பழங்குடியின பெண்ணை நாக்கால் கழிவறையை சுத்தம் செய்யவைத்த கொடூரம் – பாஜக பெண் நிர்வாகி கைது

தனது வீட்டில் வேலைசெய்த பழங்குடியின பெண்ணை கழிவறையை நாக்கால் சுத்தம் செய்யவைத்து சித்ரவதை செய்த பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார். கட்சியிலிருந்தும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மகேஸ்வர் பாத்ராவின் மனைவி சீமா பாத்ரா. இவர் பாஜக பெண் அணியின் முக்கியப்பொறுப்பில் இருந்துவருகிறார். மேலும் மத்திய அரசின் ‘’பெண் குழந்தைகளை பாதுகாப்போம்’’ திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார். இவர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்பவர் சுனிதா. பழங்குடியின பெண்ணான இவரை சீமா தொடர்ந்து அடித்தும், … Read more