பேரறிவாளனைப் போல தங்களையும் விடுவிக்கக் கோரி நளினி, ரவிச்சந்திரன் மனு தாக்கல்: விசாரணை நாளை மறுநாள் நடைபெறுவதால் பெரும் எதிர்பார்ப்பு

டெல்லி : ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனைப் போல தங்களையும் விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியவர்கள் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது. 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் கோரிக்கை. 31 … Read more

இந்தியாவில் அக்டோபர் 1 முதல் 5ஜி சேவை: மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: இந்தியாவில் 5ஜி அலைவரிசை ஏலம் கடந்த ஆகஸ்டு மாதம் நிறைவடைந்த நிலையில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் 5ஜிக்கான ஏலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கேபினட் குழு கடந்த மாதங்களுக்கு முன்பாக ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், கடந்த ஜூலை 26-ம் தேதி 5ஜி அலைவரிசைக்கான ஏலம் தொடங்கியது. பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் – … Read more

எங்கே செல்கிறது மாணவர் சமுதாயம்? – ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 10ஆம் வகுப்பு மாணவர்

10ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் தனது ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் பள்ளி மாணவர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு தனது ஆசிரியரைச் சுட்டுள்ளார். பள்ளியில் அந்த மாணவருக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த அந்த மாணவர் இந்த விபரீத சம்பவத்தில் இறங்கி உள்ளார். அந்த மாணவன் ஆசிரியரை நோக்கி மூன்று முறை சுட்டுவிட்டு துப்பாக்கியுடன் அங்கிருந்து ஓடிவிட்டான். … Read more

சுப்ரீம்கோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி ஓய்வு: பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 3 ஆக குறைவு

புதுடெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி நேற்றுடன் ஓய்வு பெற்றதால், உச்சநீதிமன்றத்தின் பெண் நீதிபதிகளின் எண்ணிக்ைக மூன்றாக குறைந்தது. உச்ச நீதிமன்றத்தின் மூத்த பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி, கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நேற்றுடன் அவர் பணி ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் பேசுகையில்: ‘சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திரா பானர்ஜி நீதித்துறைக்கு … Read more

பிரதமரைக் கொல்ல ’பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ சதி – அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல்

பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல பாப்புலர் பிரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சதி செய்வதாக அமலாக்கத் துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் பயங்கரவாத செயல்களுக்காக 120 கோடி ரூபாய் வரை நிதி திரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டுதல், ஆள் சேர்த்தல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக நாடு முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அதேபோல் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் சோதனை மேற்கொண்டது. இதில் பாப்புலர் ஃபிரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் … Read more

ஆசிரியரை 3 முறை துப்பாக்கியால் சுட்ட மாணவர் – சண்டைப்போட்டதற்கு கண்டித்ததால் வெறிச்செயல்

தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன் மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கிய சம்பவங்கள் நடந்தேறின. மேலும், ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது, தகாத வார்த்தையில் பேசுவது போன்ற ஒழுக்கக்கேடான செயல்களும் நடந்தன. அந்த வகையில், தற்போது உத்தரப் பிரதேசத்திலும் அதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் மாநிலம் சீதாபூரில் 10ஆம் வகுப்பு மாணவன், மற்றொரு மாணவனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவர்களின் ஆசிரியர் இருவரையும் கண்டித்துள்ளார். ஆசிரியர் கண்டித்ததால், 10ஆம் வகுப்பு மாணவர் மிகவும் மனமுடைந்ததாக கூறப்படுகிறது. நீண்ட … Read more

மற்ற நாணயங்களை ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்ற, இறக்கத்தில் சிக்கவில்லை: நிர்மலா சீதாராமன்

டெல்லி: மற்ற நாணயங்களை ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்ற, இறக்கத்தில் சிக்கவில்லை என அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். மேலும் இதனை ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகம் நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

பிள்ளையார் சுழி போட்ட சசி தரூர் – அனல் பறக்கும் காங். தலைவர் தேர்தல்!

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை, முதல் ஆளாக, சசி தரூர் வாங்கி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி உள்ளார். இவரது மகனும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, கடந்த 2019 மக்களவைத் தேர்தல் தோல்வி காரணமாக, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சித் தலைவராக பதவியேற்கும்படி மூத்தத் தலைவர்கள் பல முறை வலியுறுத்தியும் அவர் அதை ஏற்கவில்லை. காங்கிரஸ் … Read more

'என்னை விபச்சாரியாக்க முயல்கிறார்கள்' – கொலை செய்யப்பட்ட உத்தரகாண்ட் பெண்ணின் மெசேஞ் சிக்கியது…

உத்தரகாண்டின் பவுரி மாவட்டத்தில் உள்ள ரிஷிகேஷ் நகரில், பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா என்பவரின் புல்கித் ஆர்யா சொகுசு விடுதி ஒன்றை நடத்திவந்தார்.  அதில், 19 வயதான பெண் ஒருவர் வரவேற்பாளராக பணியாற்றியுள்ளார். அந்த பெண், அங்கிருந்த கால்வாய் ஒன்றிலிருந்து நேற்று காலை பிணமாக மீட்கப்பட்டார். முன்னதாக, சொகுசு விடுதிக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு ‘சிறப்பு சேவை’ செய்யக் கோரி விடுதி உரிமையாளரான புல்கித் வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை அவர் கொலை செய்ததாகவும் … Read more

8 சிறுத்தைகளை வனத்தில் விடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வருகைக்காக 300 மரங்கள் வெட்டப்பட்டதா?… மத்திய பிரதேச வனத்துறை விளக்கம்

போபால்: மத்திய பிரதேச வனப்பகுதியில் 8 சிறுத்தைகள் விடப்பட்ட நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி வருகைக்காக 300 மரங்கள் வெட்டப்பட்டதாக வெளியான செய்தியை அம்மாநில வனத்துறை மறுத்துள்ளது. பிரதமர் மோடி தனது பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதியன்று மத்திய பிரதேச மாநிலம் குனோ வனவிலங்குகள் சரணாலயத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர்,  நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட எட்டு சிறுத்தைகளை, அந்த சரணாலயத்தில் விடுவித்தார். முன்னதாக பிரதமர் மோடி மற்றும் சுமார் 300 சிறப்பு விருந்தினர்களின் … Read more