மருத்துவமனையின் அலட்சியப்போக்கு – தாயின் மார்பிலேயே 5 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்
மருத்துவமனையின் அலட்சியத்தால் தாயின் மார்பிலேயே 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உடல்நலம் குன்றிய தங்களுடைய 5 வயது மகன் ரிஷியை சஞ்சய் பாந்த்ரே மற்றும் அவரது குடும்பத்தார் ஜபால்பூரிலுள்ள அரசு சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மணிக்கணக்கில் காத்திருந்தும் ஒரு மருத்துவர் அல்லது சுகாதார ஊழியர்கள்கூட சிறுவனுக்கு என்ன பிரச்னை என்று ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதனால் மருத்துவமனை வளாகத்தில் வைத்தே பெற்றோர்கள் கண்முன் தாயின் மார்பில் சாய்ந்தபடி உயிரிழந்தார் சிறுவன் ரிஷி. … Read more