காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் உடல் நலக்குறைவால் காலமானார்..!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாலோ மைனோ காலமானார். இத்தாலியில் வசித்து வந்த பாலோ மைனோ அண்மையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். 90 வயதை தாண்டிய தனது தாயாரை காண கடந்த வாரமே சோனியா காந்தி இத்தாலி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், கடந்த 27-ந் தேதி சனிக்கிழமை பாலோ மைனோ காலமானார். ஞாயிற்றுகிழமை அவரது சொந்த ஊரில் நடைபெற்ற இறுதி சடங்கில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். சோனியாகாந்தியின் தாயார் மறைவுக்கு பிரதமர் … Read more

வீட்டில் வேலை செய்த பழங்குடியின பெண்ணை அடித்து சித்ரவதை.. பாஜக மகளிரணி நிர்வாகி கைது..!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தனது வீட்டில் வேலை செய்த பழங்குடியின பெண்ணை அடித்து சித்ரவதை செய்த புகாரில் பாஜக மகளிரணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியான சீமா பத்ரா, தனது வீட்டில் 10 ஆண்டுகளாக வேலை செய்த சுனிதா என்ற பெண்ணை கொடுமையாக துன்புறுத்தியது தெரியவந்தது. இதையடுத்து கடந்த வாரம் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்ட அந்தப் பணிப் பெண், மருத்துவமனையில் சிசிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில் சீமாவை கைது செய்த … Read more

பாஜகவுடனான ஐக்கிய ஜனதா தளம் உறவு பீகாரை போல் மணிப்பூரிலும் முறிவு? செப். 3ல் நடக்கும் தேசிய செயற்குழுவில் முடிவு

கவுகாத்தி: மணிப்பூரில் பாஜக தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வாபஸ் பெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம்  கட்சி விலகியது. அதனால் பீகாரில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி  முறிந்தது. ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி  அமைத்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில் நிதிஷ் குமாரின் கட்சி … Read more

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 13.5% உயர்வு!

2022-23 நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் இடையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) தெரிவித்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2022-23 நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் இடையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 32.46 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 36.85 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-22 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் இடையிலான முதல் காலாண்டில் … Read more

பேக்கரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 கோடி ‘ஐஸ்’ போதை பொருள் பறிமுதல்

இம்பால்: பேக்கரி மற்றும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிரந்த ரூ.50 கோடி மதிப்பிலான  ‘ஐஸ்’ போதை பொருளை மணிப்பூர் போலீசார் அதிரடியாக மீட்டு, சம்பந்தப்பட்டவரை கைது செய்தனர். மியான்மர் எல்லையில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மணிப்பூர் ரைபிள்ஸ் (எம்ஆர்) படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து மியான்மர் எல்லையில் உள்ள மோரே நகரில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து மணிப்பூர் ரைபிள்ஸ் படையினர் சோதனை நடத்தினர். அப்போது இம்பாலை சேர்ந்த பிஷ்னு பானிக் (32) என்பவனிடம் இருந்து ரூ.50 கோடி மதிப்பிலான … Read more

’என்னை திருமணம் செய்துகொள்’.. மறுத்த காதலிக்கு கத்திக்குத்து.. இளைஞரும் விபரீத முடிவு!

மத்திய பிரதேசத்தில் திருமண புரோபசலை நிராகரித்த பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தியதில் அவர் கவலைக்கிடமாக உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்திலுள்ள இந்திரா சாகர் டேம் கிராமத்தைச் சேர்ந்த பப்லு என்ற இளைஞர் பக்கத்து கிராமத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் தனது கிராமத்திலுள்ள 20 வயது பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அணுகியுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பப்லு திங்கட்கிழமை அந்த … Read more

குடும்ப கட்டுப்பாடு செய்த நான்கு பெண்கள் மரணம் ..! – தெலுங்கானாவில் பரபரப்பு..!

குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்களில் 4 பேர் மரணமடைந்தது தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் நடந்த கருத்தடை முகாமில் கலந்து கொண்ட பெண்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். குடும்ப கட்டுப்பாடு செய்தவர்களில் நான்கு பெண்கள் மரணம் அடைந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கருத்தடை முகாமில் கலந்து கொண்டு குடும்ப கட்டுப்பாடு … Read more

RIP: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாய் இத்தாலியில் காலமானார்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ ஆகஸ்ட் 27 அன்று இறந்தார், அவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சோனியா காந்தி கடந்த வாரம் தனது தாயாரை சந்திக்க இத்தாலிக்கு சென்றிருந்தார். மருத்துவப் பரிசோதனைக்காக சென்றிருந்த சோனியா காந்தியுடன், அவரது மகன் ராகுல் காந்தியும் , மகள் பிரியங்கா காந்தியும் அவருடன் சென்றிருந்தனர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், சோனியா காந்தியின் தாயார் இறந்த செய்தியை … Read more

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கான தடுப்பூசி நாளை அறிமுகம்!

இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கான தடுப்பூசி நாளை அறிமுகப்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் , கர்ப்பப்பை வாய் புற்று நோயை தடுக்க வெளிநாடுகளில் இருந்தே தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு வந்தன. ஆனால், முதன்முறையாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் உள்நாட்டிலேயே இந்த தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதியின் பேரில் பலகட்ட சோதனைகளுக்கு பிறகு இந்த தடுப்பூசி நாளை பயன்பாட்டிற்கு வருகிறது. இந்த தடுப்பூசிக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை … Read more

நாளை நடைபெற இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி: நாளை நடைபெற இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2022 முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது.