வங்கி லாக்கரில் சிபிஐ சோதனை: மனைவியுடன் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வருகை

புதுடெல்லி: தனது வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவரும் நிலையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, மனைவியுடன் வங்கிக் கிளையில் ஆஜரானார். டெல்லியில் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 19-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு … Read more

குலாம் நபி ஆசாத்திற்கு ஆதரவு: காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா!

குலாம் நபி ஆசாத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ் மூத்தத் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், கடந்த 26 ஆம் தேதி, அக்கட்சியில் இருந்து விலகினார். பல ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்த குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகியது, பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தோல்விக்கு, ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கைகளே காரணம் என்றும் குலாம் … Read more

கர்நாடக பாடப் புத்தகத்தில் சாவார்க்கர் – பறவையில் பறந்ததாக தகவல் – விளக்கமும், சர்ச்சையும்!

கடந்த 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உள்ள முகப்பை தேசியக் கொடியாக மாற்றுங்கள் என்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் முன்வைத்த ஓர் கேள்வி என்னவெனில், ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவார்களா என்பதுதான்.?! ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றுவார்களா என்ற கேள்விக்கும், சாவார்க்கருக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ? தேசியத்தை வலியத் திணிக்கும் பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் ஆகியவை இந்திய … Read more

பிரபல பொருளாதார நிபுணரும், முன்னாள் திட்டக்குழு உறுப்பினருமான அபிஜித் சென் காலமானார்

டெல்லி: பிரபல பொருளாதார நிபுணரும், முன்னாள் திட்டக்குழு உறுப்பினருமான அபிஜித் சென் (72) காலமானார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது 2004 முதல் 2014 வரை திட்டக்குழு உறுப்பினராக அபிஜித் சென் பதவி வகித்தார். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 40 ஆண்டுகளாக பொருளாதார பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

உலக பணக்காரர்கள் வரிசையில் 3-ம் இடம் பிடித்தார் அதானி.!

உலக பணக்காரர்கள் வரிசையில், 10.95 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மூன்றாமிடத்தை பிடித்துள்ளார். ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் தரவரிசையில் பிரான்சின் பெர்னார்ட் அர்னால்டை பின்னுக்கு தள்ளி முதல் மூன்று இடங்களுக்குள் வந்த ஆசியாவை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை அதானி பெற்றுள்ளார். உலக பணக்காரர்கள் வரிசையில் எலான் மஸ்க் முதலிடத்திலும், ஜெப் பெசோஸ் இரண்டாமிடத்திலும் உள்ளனர். Source link

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். புதிய மதுக்கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவிற்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனை நடைபெற்றது.

உ.பி. மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் தம்பி உடலை கைகளில் தூக்கி சென்ற சிறுவன்

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி மறுக்கப்பட்டதால், இறந்த 2 வயது தம்பியின் உடலை 10 வயது சிறுவன் கைகளில் சுமந்து சென்ற அவலம் நடந்துள்ளது. உ.பி.யின் முசாபர்நகர் அருகில் உள்ள மாவட்டம் பாக்பத். இந்த மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இரண்டாவது மனைவியுடன் வாழ்கிறார் பிரவீண் குமார். கூலி தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் 2 வயது குழந்தை கலா குமாரை வளர்க்கும் பொறுப்பு பிரவீணின் இரண்டாவது மனைவிக்கு வந்துள்ளது. … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: அசோக் கெலாட்டை எதிர்த்து சசி தரூர் போட்டி?

காங்கிரஸ் தலைவர் தேர்தலில், சசி தரூர் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என, அக்கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து செப்டம்பர் 22 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகிறது. 24 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது. 30 … Read more

NEET UG 2022: நீட் விடைக்குறிப்பு இன்று வெளியீடு

நீட் யுஜி 2022 விடைக்குறிப்பு: தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இன்று தாவது ஆகஸ்ட் 30 செவ்வாய்க்கிழமை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (நீட் யுஜி 2022) விடைக்குறிப்பு வெளியிடப்படுகிறது. நீட் யுஜி 2022 விடைக்குறிப்பு விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in இல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். முன்னதாக தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு பட்டதாரி (நீட் யுஜி 2022) தேர்வு ஜூலை 17 அன்று … Read more

ஆம்புலன்ஸ் வாகனத்தின் கதவை திறக்க முடியாததால் பறிபோன உயிர்.!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரிக்கு அழைத்து வரப்பட்ட நோயாளி, ஆம்புலன்ஸ் வாகனத்தின் கதவை திறக்கமுடியாததால் ஏற்பட்ட தாமதத்தால் உயிரிழந்தார். கோழிக்கோடு அருகே விபத்தில் சிக்கி காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது, ஆம்புலன்ஸ் வாகனத்தின் கதவை திறக்கமுடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 30 நிமிடம் போராடி கதவை உடைத்த பொதுமக்கள், நோயாளியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Source link