திருமலையில் பக்தர்கள் அறை முன்பதிவு ஆன்லைனில் இன்று வெளியீடு

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின்  பதவி பறிப்பு குறித்து முடிவெடுப்பதில்  ஆளுனர் தாமதப்படுத்துவதால் குதிரை பேரம் நடக்க வாய்ப்பு உள்ளது என்று ஐமு கூட்டணி கட்சிகள்  அச்சம் தெரிவித்துள்ளன. சுரங்க ஒதுக்கீடு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) தலைவரும், முதல்வருமான ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.  இதனால், சோரனின்  பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆளுனர் தனது முடிவை நேற்று (திங்கள்கிழமை) அறிவிப்பார் … Read more

தைரியமிருந்தால் கைது செய்யுங்கள்: மம்தா பானர்ஜி சவால்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பார்த்தா சட்டர்ஜி, அனுப்ரதா மோண்டல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொல்கத்தாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ‘‘பாஜ அனைவரையும் திருடர்கள் என்று முத்திரை குத்துகிறது. திரிணாமுலில் உள்ளவர்கள் அனைவரும் திருடர்கள் போலவும் பாஜவும் அதன் தலைவர்களும் புனிதமானவர்கள் போலவும் பிரசாரம் செய்கின்றனர். நான் மட்டும் அரசியலில் இல்லாதிருந்தால் அவர்களின் நாக்கை அறுத்திருப்பேன். இந்தியா … Read more

அலுவலகத்திற்கு சென்று கணவரை திட்டுவதும் கொடுமை செய்வது தான் விவகாரத்து தந்தது சட்டீஸ்கர் கோர்ட்

பிலாஸ்பூர்: சட்டீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தை சேர்ந்தவர் 32வயது நபர். இவர் கடந்த 2010ம் ஆண்டு விதவை பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து தனது மனைவி தன்னை மோசமாக நடத்துவதாகவும், பெற்றோரை சந்திக்கவிடாமல் தடுப்பதாகவும் கூறி ராய்ப்பூர் குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினார். தனது மனைவியிடம் இருந்து தனக்கு விவகாரத்து வேண்டும் என்று கடந்த 2019ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கணவர் தாக்கல் செய்த அறிக்கைகள்,ஆதாரங்கள் அடிப்படையில் விவகாரத்து வழங்கி நீதிமன்றம் … Read more

“எங்கள் எம்.எல்.ஏ.க்கள் நேர்மையானவர்கள்” – நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்த அரவிந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: “பாஜகவின் ஆப்ரேஷன் லோட்டஸ் திட்டம் டெல்லியில் தோல்வியுறும்” என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசின் புதிய மது விற்பனைக் கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, பாஜக – ஆம் ஆத்மி கட்சி இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. … Read more

டெல்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: ஒன்றிய அரசு மீது முதல்வர் கெஜ்ரிவால் கடும் தாக்கு

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடக்க உள்ளது. முன்னதாக சட்டப்பேரவையில் நேற்று நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்த முதல்வர் கெஜ்ரிவால், ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடந்த ஆண்டு அமல்படுத்திய புதிய கலால் கொள்கையில் பல்வேறு முறைகேடு நடந்து இருப்பதாக பாஜ குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் சிசோடியாவின் வீடு உட்பட பல இடங்களில் சோதனை நடத்தினர். அதேநேரத்தில், … Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் விவகாரம் தமிழக அரசு முடிவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக கோயில்களில் அர்ச்சர்கர்கள் மற்றும் பூசாரிகள் நியமிப்பது தொடர்பாக 2020ம் ஆண்டு இந்துசமய அறநிலையத் துறை புதிய விதிகளை வெளியிட்டது. அதன்படி ஆகமப் பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி பெற்ற, பதினெட்டு வயது முதல் முப்பதைந்து வயதுக்கு உட்பட்ட நபரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து … Read more

’’லிஃப்ட் நின்றது குத்தமா?’’-காப்பாற்றப்பட்ட பிறகும் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய நபர்

லிஃப்ட்டில் சிக்கிய நபர் காப்பாற்றப்பட்ட பிறகு வெளியே வந்ததும் தனது குடியிருப்பு பாதுகாவலரை தொடர்ந்து பலமுறை அறைந்த வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. குர்கானின் செக்டார் 50ல் உள்ள க்ளோஸ் என் சொசைட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்று காலை 7 மணியளவில் லிப்ட்டில் மாட்டியுள்ளார் வருண்நாத் என்ற நபர். அவரை லிஃப்ட் சர்வீஸ் நபர் உடனடியாக வந்து மீட்டுள்ளார். வெளியே வந்த வருண்நாத் உடனடியாக அருகே நின்றிருந்த குடியிருப்பு பாதுகாவலரை திட்டியபடி அவருடைய கன்னத்தில் … Read more

'ஹிஜாப்' மேல் முறையீடு வழக்கு: கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

‘ஹிஜாப்’ தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில், அரசு பி.யூ. கல்லூரியில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள், ‘ஹிஜாப்’ அணிந்து வகுப்புக்கு வர தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டது. இந்த தடையை நீக்கக் கோரி முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். மேலும், மாநில அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த … Read more

இந்தியாவில் கடந்த 2021-ல் நிகழ்ந்த 4.22 லட்சம் விபத்தில் சிக்கி 1.73 லட்சம் பேர் உயிரிழப்பு – தேசிய குற்ற ஆவணக் காப்பகம்

இந்தியாவில், கடந்த 2020-ம் ஆண்டைக் காட்டிலும் 2021-ம் ஆண்டு சாலை விபத்துகள் 16 புள்ளி 8 சதவீதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள தேசிய குற்ற ஆவணக் காப்பகம், அதிகபட்சமாக தமிழ்நாட்டில் ஐம்பத்து ஏழாயிரத்து 90 விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் நிகழ்ந்த நான்கு லட்சத்து 22 ஆயிரம் விபத்துகளில் சிக்கி, ஒரு லட்சத்து 73 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் விபத்தில் சிக்கி இருபத்தி நான்காயிரத்து 711 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டாவதாக தமிழகத்தில் … Read more

`கவிதை நயத்தோடு பாருங்க’- சாவர்க்கர் பறவையில் பயணித்ததாக இருந்த பாடத்துக்கு புது விளக்கம்!

கர்நாடகாவில் 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சாவர்க்கர் பற்றி இடம்பெற்றுள்ள கருத்து அரசியலில் சர்ச்சை எழுந்துள்ளது. கர்நாடக பாடப் புத்தகத்தில் `காலத்தை வென்றவர்கள்’ எனப் பெயரிடப்பட்ட புதிய பாடப்பகுதியில், சாவர்க்கர் யார் என்பதை மாணவர்களுக்கு விளக்கும் வகையில் “1911-1924 ஆண்டு வரை சாவர்க்கர் சிறையில் இருந்தபோது அவருடைய வாழ்வு எவ்வாறு இருந்தது என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதில், `சிறையில் இருந்த சாவர்க்கர் ஒரு பறவையின் மீது ஏறி சிறையிலிருந்து தனது தாய்நாட்டுக்கு (இந்தியா) வந்து செல்வார். தாய்நாட்டை தரிசிப்பதற்காக அவர் … Read more