இந்தியாவில் கடந்த 2021-ல் நிகழ்ந்த 4.22 லட்சம் விபத்தில் சிக்கி 1.73 லட்சம் பேர் உயிரிழப்பு – தேசிய குற்ற ஆவணக் காப்பகம்

இந்தியாவில், கடந்த 2020-ம் ஆண்டைக் காட்டிலும் 2021-ம் ஆண்டு சாலை விபத்துகள் 16 புள்ளி 8 சதவீதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள தேசிய குற்ற ஆவணக் காப்பகம், அதிகபட்சமாக தமிழ்நாட்டில் ஐம்பத்து ஏழாயிரத்து 90 விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் நிகழ்ந்த நான்கு லட்சத்து 22 ஆயிரம் விபத்துகளில் சிக்கி, ஒரு லட்சத்து 73 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் விபத்தில் சிக்கி இருபத்தி நான்காயிரத்து 711 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டாவதாக தமிழகத்தில் … Read more

`கவிதை நயத்தோடு பாருங்க’- சாவர்க்கர் பறவையில் பயணித்ததாக இருந்த பாடத்துக்கு புது விளக்கம்!

கர்நாடகாவில் 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சாவர்க்கர் பற்றி இடம்பெற்றுள்ள கருத்து அரசியலில் சர்ச்சை எழுந்துள்ளது. கர்நாடக பாடப் புத்தகத்தில் `காலத்தை வென்றவர்கள்’ எனப் பெயரிடப்பட்ட புதிய பாடப்பகுதியில், சாவர்க்கர் யார் என்பதை மாணவர்களுக்கு விளக்கும் வகையில் “1911-1924 ஆண்டு வரை சாவர்க்கர் சிறையில் இருந்தபோது அவருடைய வாழ்வு எவ்வாறு இருந்தது என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதில், `சிறையில் இருந்த சாவர்க்கர் ஒரு பறவையின் மீது ஏறி சிறையிலிருந்து தனது தாய்நாட்டுக்கு (இந்தியா) வந்து செல்வார். தாய்நாட்டை தரிசிப்பதற்காக அவர் … Read more

ரயில் பயணிகள் இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி அறிமுகம்

ரயில் பயணிகள் வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதியை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்திய ரயில்வே தனது கேட்டரிங் சேவை மற்றும் விருந்தோம்பலை இந்தியா முழுவதும் மேம்படுத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை கவர்ந்திழுக்க பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் இ- கேட்டரிங் சேவையும் ஒன்று. இதற்காக ஐஆர்சிடிசியின் Zoop உணவு டெலிவரி சேவையானது Jio Hapik நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இனி பயணிகள் தங்கள் PNR எண்ணை வைத்து வாட்ஸ்அப் மூலம் தங்கள் … Read more

பீகாரில் சிபிஐ விசாரணைக்கு செக் – முதல்வர் நிதிஷ் குமார் அதிரடி!

பீகார் மாநிலத்தில் விசாரணை நடத்த சிபிஐக்கு தரப்பட்டிருந்த பொது அனுமதியை முதலமைச்சர் நிதிஷ் குமார் அரசு ரத்து செய்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிறுவனரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், பழையக் கூட்டணி கட்சியான, லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் மீண்டும் இணைந்து, ஆட்சி அமைத்துள்ளார். பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக, எட்டாவது முறையாக, நிதிஷ் … Read more

விவசாய முன்னேற்றத்திற்கு ‘ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டம்’

ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தை, மின்னணு சந்தைக்கான திறந்த கட்டமைப்புடன் இணைக்க வேண்டும் என்றும் ஒரே தளத்தில் வாங்குவோரையும், விற்பவரையும் கொண்டு வருவதால் இத்திட்டம் மேலும் விரிவடையும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் ஏற்றுமதி மையமாக மாற்றும் வகையில் மத்திய அரசு ஒரு மாவட்டம் ஒரு பொருள் என்ற திட்டத்தை கொண்டுவந்தது. உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் சர்வதேச சந்தையை அடையும் நோக்கில் அத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற … Read more

மின்கம்பத்தின் உச்சியில் சிக்கி தவித்த மலைப்பாம்பு.. லாவகமாக மீட்ட வனத்துறை ஊழியர்-வீடியோ

கேரளா மாநிலம் கொச்சி தோப்பன்பட்டியின் மின் கம்பத்தின் உச்சியில் சிக்கி கொண்ட மலைப்பாம்பை வனத்துறை ஊழியர் லாவகமாக மீட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் கொச்சி தோப்பன்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை சாலையோரம் உள்ள மின் கம்பத்தின் உச்சியில் மலைப்பாம்பு ஒன்று சிக்கிக்கொண்டது. மின் கம்பத்தில் ஏறிய அந்த மலைப்பாம்பு மின்கம்பத்தின் உச்சிக்கு சென்றபோது அதில் செல்லும் மின் கம்பி மற்றும் கேபிள் ஒயர்களில் சிக்கி நகர முடியாமல் தவித்தது. இதைக் கண்ட பொதுமக்கள் … Read more

பயங்கர நிலச்சரிவு: மண்ணில் புதைந்த வீடு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

கேரள மாநிலத்தில், பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், கடந்த சில நாட்களாக, பல்வேறு மாவட்டங்களில், மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில், இடுக்கி மாவட்டம், தொடு புழாவை அடுத்த காஞ்ஞாரில், திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு காரணமாக, சிற்றடிச்சால் என்ற இடத்தை சேர்ந்த சோமன் என்பவரது வீடு, மண்ணுக்கு அடியில் புதைந்து சிதையுண்டது. … Read more

அடுத்தாண்டு ஜனவரியோடு பதவிகாலம் முடிவதால் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மாற்றம்? மக்களவை, 11 மாநில பேரவை தேர்தல் சவாலால் பரபரப்பு

புதுடெல்லி: அடுத்தாண்டு ஜனவரியுடன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிகாலம் முடிவதால், புதிய தலைவர் ேதர்வு செய்யப்படுவது குறித்து பேசப்பட்டு வருகிறது. 2024 மக்களவை தேர்தல் மற்றும் அதற்கு முன் நடக்கும் 11 மாநில பேரவை தேர்தலால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய போது  அக்கட்சியின் தேசிய தலைவராக ராஜ்நாத் சிங் இருந்தார். பிரதமர் மோடி  தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவியேற்றதால், அமித் ஷா தேசிய  தலைவரானார். … Read more

இடுக்கி – தொடுபுழா நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

போடி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். கேரள மாநிலம் இடுக்கி உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில் இடுக்கி மாவட்டத்திற்கு கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் குடையத்தூர் எனும் இடத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சோமன் (56) என்பவர் வீடு முழுவதும் சேதமடைந்தது. அருகில் உள்ளவர்கள் தொடுபுழா … Read more

17,582 அடி உயரத்தில் உலக மகா சாதனை… அல்ட்ரா மாரத்தானில் கலக்கும் 66 வயது புஷ்பா பாட்!

சாதிக்க வயது ஒரு தடையா என்று கேட்டால், இல்லை என்பது தான் யதார்த்தமாக இருக்கிறது. அப்படித் தான் புஷ்பா பாட்டின் வாழ்க்கையும் அமைந்துள்ளது. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த புஷ்பா பாட், 17 வயது முதலே வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டார். இவரது வாழ்க்கையில் இல்லை என்ற சொல்லுக்கே இடமில்லை. கார்ப்பரேட் உலகில் வெற்றிகரமான பெண்மணியாக உருவெடுத்தார். தனியொரு ஆளாக மகளை வளர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போதும் கலங்கவில்லை. விடா முயற்சியுடன் புதுமைகளையும் கூடவே அரங்கேற்ற துடித்தார். … Read more