இடுக்கி – தொடுபுழா நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

போடி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். கேரள மாநிலம் இடுக்கி உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில் இடுக்கி மாவட்டத்திற்கு கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் குடையத்தூர் எனும் இடத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சோமன் (56) என்பவர் வீடு முழுவதும் சேதமடைந்தது. அருகில் உள்ளவர்கள் தொடுபுழா … Read more

17,582 அடி உயரத்தில் உலக மகா சாதனை… அல்ட்ரா மாரத்தானில் கலக்கும் 66 வயது புஷ்பா பாட்!

சாதிக்க வயது ஒரு தடையா என்று கேட்டால், இல்லை என்பது தான் யதார்த்தமாக இருக்கிறது. அப்படித் தான் புஷ்பா பாட்டின் வாழ்க்கையும் அமைந்துள்ளது. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த புஷ்பா பாட், 17 வயது முதலே வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டார். இவரது வாழ்க்கையில் இல்லை என்ற சொல்லுக்கே இடமில்லை. கார்ப்பரேட் உலகில் வெற்றிகரமான பெண்மணியாக உருவெடுத்தார். தனியொரு ஆளாக மகளை வளர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போதும் கலங்கவில்லை. விடா முயற்சியுடன் புதுமைகளையும் கூடவே அரங்கேற்ற துடித்தார். … Read more

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் மாடதிபதி போக்சோ சட்டத்தில் கைது

கர்நாடக மாநிலத்தில், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் மாடதிபதியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சித்ரதுர்காவில் உள்ள பிரபல முருகமடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு செயல்பட்டு வருகிறார். அந்த மடத்தின் சார்பில் நடத்தப்படும் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளியில் படித்த 2 சிறுமிகள், மடாதிபதியால் 3 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் வன்கொடுமை அனுபவித்ததாக தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு-வை … Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் வழக்கு; தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடெல்லி: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ெதாடரப்பட்ட வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் நியமிப்பது தொடர்பாக 2020ம் ஆண்டு இந்துசமய அறநிலையத் துறை புதிய விதிகளை வெளியிட்டது. அதன்படி ஆகமப் பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி பெற்ற, பதினெட்டு வயது முதல் முப்பதைந்து வயதுக்கு உட்பட்ட நபரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து … Read more

உ.பி: ரயில் நிலையத்தில் காணாமல் போன குழந்தை – பாஜக பிரமுகர் வீட்டிலிருந்தது கண்டுபிடிப்பு

கடந்த வாரம் உத்தரபிரதேச ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த 7 மாத குழந்தையை ஒருநபர் தூக்கிச் சென்றார். தற்போது அந்த குழந்தை பாஜக கார்ப்பரேட்டரின் வீட்டிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா ரயில் நிலைய மேடையில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தையை, அந்த வழியாக பேண்ட் – சட்டை அணிந்து ‘டிப்டாப்’பாக வந்த நபர் ஒருவர் அக்கம்பக்கம் நோட்டமிட்டு, அங்கிருந்து தூக்கிக்கொண்டு வேகமாக சென்றார். சிறிதுநேரத்தில் அந்த தாய் எழுந்து பார்த்தபோது பக்கத்தில் படுத்திருந்த … Read more

ராகுலை வெற்றிகரமான தலைவராக உருவாக்க முயற்சித்தோம்.. ஆனால்… குலாம் நபி ஆசாத் பளீச்!

ராகுல் காந்தியை வெற்றிகரமான தலைவராக உருவாக்க முயற்சித்தோம். ஆனால் அவர் விருப்பம் காட்டவில்லை என, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் மூத்தத் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், கடந்த 26 ஆம் தேதி, அக்கட்சியில் இருந்து விலகினார். பல ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்த குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகியது, பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் … Read more

உலோகப் பொருட்களின் மீதத்தை பயன்படுத்தி அயர்ன் மேன் சூட் தயாரித்த இளைஞர் மகேந்திரா குழுமத்தில் தனது பொறியியல் கல்வியை துவங்கினார்

அயர்ன் மேன் ஹாலிவுட் திரைப்படத்தில் வருவது போன்ற ஆடையை, உலோகம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் மீதத்தை பயன்படுத்தி உருவாக்கி பிரபலமான மணிப்பூர் இளைஞர், மகேந்திரா குழுமத்தில் தனது பொறியியல் கல்வியை துவங்கியுள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஆனந்த் மகேந்திரா, ஹைதரபாத்தில் உள்ள மகேந்திரா பல்கலைக்கழகத்தில் பிரேம் பொறியியல் கல்வியை துவங்கியுள்ளதாகவும், மேம்பட்ட கார் கதவு திறக்கும் வழிமுறைகள் குறித்து அவர் பயிற்சி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.       Source link

CUET PG தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியீடு

டெல்லி: CUET PG தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் ஹால் டிக்கெட்டை இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வுமுகாமாய் தெரிவித்துள்ளது. ஹால் டிக்கெட்டை http://cuet.nta.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புல சேர CUET PG நுழைவு தேர்வு செப்.1,2,3 தேதிகளில் நடைபெறுகிறது.

”80% நீதிபதிகள், 95% பத்திரிகையாளர்கள் மது அருந்துகின்றனர்” – பப்பு யாதவ் குற்றச்சாட்டு

பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர்தான் அதிகளவில் மது அருந்துகின்றனர் என ஜன் அதிகார் கட்சியின் தலைவர் ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ் தெரிவித்துள்ளார். பீகாரில் அமலில் உள்ள பூரணமதுவிலக்கு குறித்து அவர் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பப்பு யாதவ் தன்னுடைய பேட்டியில்,”‘வறண்ட மாநிலமான’ குஜராத்தில் மக்கள் இறக்கின்றனர். அதேசமயம் மதுவிற்பனை மூலம் டெல்லி அரசு தன்னுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 80% நீதிபதிகள், 90% அதிகாரவர்க்கத்தினர் மற்றும் 95% பத்திரிகையாளர்கள் மது அருந்துகின்றனர்” … Read more

ராகுல் காந்தி அரசியலுக்கு வேஸ்ட்: குலாம் நபி அடுக்கும் காரணங்கள்

புதுடெல்லி: “ராகுல் காந்தி ஒரு நல்ல மனிதர். ஆனால் அவரிடம் அரசியல் சூட்சுமமும், கடின உழைப்பும் இல்லை” என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்தையும் துறந்து கட்சியிலிருந்து விலகி அதிர்ச்சி கொடுத்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டியளித்தார். அதில், “ராகுல் காந்தி ஒரு நல்ல மனிதர்; ஆனால் அவரிடம் அரசியல் சூட்சுமமும், கடின உழைப்பும் இல்லை” என்று கூறியுள்ளார். … Read more