அந்தப் பேரரசரின் மகன் தேசியக் கொடியை ஏந்த மாட்டாரோ? ஜெய் ஷாவை வறுத்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் வெற்றிக் கொண்ட்டாட்டத்தில் கையில் தேசியக் கொடியை ஏந்த பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா மறுத்த வீடியோ எதிர்க்கட்சியினரால் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டியில் பலப்பரீட்சை செய்தன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. … Read more

12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் டெல்லி-டேராடூன் இடையிலான 210 கி.மீ விரைவுச்சாலை!

டெல்லி-டேராடூன் இடையிலான 210 கிலோ மீட்டர் தொலைவை இரண்டரை மணி நேரத்தில் கடக்கும் வகையில் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் விரைவுச்சாலை ஆசியாவின் மிக நீளமான வனவிலங்குகள் வசிக்கக்கூடிய நெடுஞ்சாலையாக அமைய உள்ளது. இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை குறைக்கும் வகையிலும், வனவிலங்குகளைப் பாதுகாக்கும் வகையிலும் நான்கு கட்டங்களாக கட்டப்பட்டு வரும் விரைவுச் சாலை, ராஜாஜி தேசிய பூங்கா வனப்பகுதிகளில் 12 கிலோ மீட்டர் நீளத்திற்கு, மேம்பால வடிவில் சாலைகள் அமைக்கப்பட்டு … Read more

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சுப்பிரமணியன்சுவாமி தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விடுத்த நிலையில் அறநிலையத்துறை கோயில்களில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்த வழக்குகளுடன் சேர்ந்து மனு விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

கர்நாடகா: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை – மடாதிபதி மீது பாய்ந்த போக்சோ

பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கர்நாடகாவில் மடாதிபதி உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சித்ர துர்காவில் இருக்கும் முருக மடத்தின் சார்பாக தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மடாதிபதியாக இருக்கும் சிவமூர்த்தி முருக சரணரு, மாணவிகள் இருவரை ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துவந்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவிகள் சமூக அமைப்பு ஒன்றை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்த நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் மாணவிகளை மீட்டனர். புகார் குறித்து விசாரணை நடத்திய சித்ர துர்கா போலீசார், மடாதிபதி சிவமூர்த்தி முருக … Read more

மோசடி பணத்தில் கலைப்பொருட்கள் வாங்கும் தொழிலதிபர்கள்

புதுடெல்லி: வங்கிகளில் பல ஆயிரம் கோடிகடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்யும்தொழில் அதிபர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு என்னவெல்லாம் செய்வார்கள்? நிலம் வாங்குவார்கள், வெளிநாட்டில் முதலீடு செய்வார்கள், சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள்… இல்லை, இவை மட்டுமில்லை. அவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு கலைப்பொருள்களையும் வாங்கிக் குவிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது சமீபத்திய சிபிஐ சோதனைகள். கடந்த ஜூலை மாதத்தில் சிபிஐ திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் பண மோசடி வழக்குத் தொடர்பாக, மும்பையில் சில இடங்களில் … Read more

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடும் மழையால் மண்சரிவு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குடையாத்தூரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். தொடுபுழா அருகே உள்ள குடையாத்தூரில் நேற்றிரவு பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டது. அப்பகுதியில் வசித்து வந்த கூலித்தொழிலாளியான சோமன் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் மண்சரிவில் சிக்கினர். இதில் சோமனின் மனைவி சீமா,தாயார் தங்கம்மா மற்றும் பேரன் ஆதிதேவ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மீதமுள்ள மூன்று பேரை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள … Read more

தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சிறப்பு நீதிமன்றம்

மும்பை: தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பங்குச்சந்தை ஊழல் தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ கைது செய்தது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரம்: டாடா புராஜக்ட்ஸ் சி.இ.ஓ. தகவல்

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் முதன்மை கட்டமைப்பு பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக டாடா புராஜக்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) மற்றும் நிர்வாக இயக்குநர் வினயக் பய் நேற்று தெரிவித்தா். இதுகுறித்து அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் மேலும் கூறியதாவது. இந்திய ஜனநாயகத்தின் மாண்பையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் விதத்தில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பெரியஅரசியலமைப்பு மண்டபத்தை டாடா உருவாக்கி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வறை, நூலகம், ஆலோசனைஅறை, உணவகம், பரந்த வாகனநிறுத்துமிடம் உள்ளிட்ட பல … Read more

இடுக்கி மண்சரிவு… மண்ணில் புதைந்த குடும்பம்- பதறிப் போன கேரளா!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட தொடுபுழா அருகே அமைந்துள்ளது குடையாத்தூர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீர் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சோமன் என்பவரது குடும்பம் மண்ணில் புதைந்து சிக்கிக் கொண்டதாக தெரியவந்துள்ளது. கூலி தொழிலாளியான சோமன், தனது தாயார் தங்கம்மா, மனைவி சிஜி, மகள் சீமா, மகன் ஆதிதேவ் ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அதிகாலையில் நன்கு … Read more

பீகார் மாநிலத்தில் சிபிஐ விசாரணையை ரத்து செய்தது நிதிஷ்குமார் அரசு

பாட்னா: பீகார் மாநிலத்தில் விசாரணை நடத்த சிபிஐக்கு தரப்பட்டிருந்த பொது அனுமதியை நிதிஷ்குமார் அரசு ரத்து செய்தது. லாலு பிரசாத் குடும்பத்தினர் தொடர்புடைய வேலைவாய்ப்பு மோசடி குறித்து சிபிஐ விசாரித்து வரும் நிலையில் பீகார் அரசு அதிரடி உத்தரவு வழங்கியது.