லிவ் இன், தன்பாலின உறவாளர்கள் நடத்துவதும் குடும்ப அமைப்புதான்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: வின் இன், தன்பாலின உறவாளர்கள் இணைந்து நடத்துவதும் குடும்ப அமைப்புதான். அவர்களும் சட்டத்திற்கு உட்பட்ட பாதுகாப்புக்கு உரித்தானவர்கள் தான் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. குடும்பம் என்பது இந்திய சட்டப்படி, இந்திய சமூக அமைப்பின்படி தாய், தந்தை, குழந்தைகள் கொண்ட மாறாத அமைப்பு என்று கொள்ளப்படுகிறது. இதனால் பல சூழல்களில் ஒரு தனிநபரின் குடும்ப அமைப்பில் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டால் அது குடும்பமாக அங்கீகரிப்பட தவறப்படுகிறது. இந்நிலையில், குடும்ப உறவு என்பது திருமணம் செய்துகொள்ளாமல் … Read more

ஆட்டோவின் மேற்கூரையில் அமர்ந்தபடி பள்ளி செல்லும் சிறுவர்கள்.. போலீசார் விசாரணை!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்டோ ஒன்றின் மேற்கூரையில் அமர்ந்தவாறு அபாய நிலையில் பள்ளிச்சிறுவர்கள் பயணம் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. Bareilly பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்து அம்மாநில போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் மோட்டார் வாகன சட்டப்படி தங்களின் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். Source link

இந்தியாவில் ஒரே நாளில் 7,591 பேருக்கு கொரோனா… 45 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 7,591 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,15,723 ஆக உயர்ந்தது. * புதிதாக 45 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் … Read more

ஒரு பையன்; 2 பொண்ணுங்க.. நடுரோட்டில் சண்டை: எதிர்பாரத விதமாக காதலன் செய்த செயல்!

காதல் ஒருவரை எந்த பைத்தியகாரத்தனத்தையும் செய்ய வைக்கும், ஏன் செய்யாததை கூட செய்ய துணிய வைக்கும் என கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வகையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பாணியில் காதலனுக்காக இரண்டு டீனேஜ் பெண்கள் நடுரோட்டில் அடித்துக்கொண்ட சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியிருக்கிறது. ஆனால் காதலனின் செயல்தான் எதிர்பாராத விதமாக அமைந்திருக்கிறது. மகாராஷ்டிராவின் பைதான் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான இரண்டு டீனேஜ் பெண்கள் மக்கள் கூட்டம் நிறைந்த பேருந்து நிறுத்தம் முன்பு ஒரு பையனுக்காக சண்டையிட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் … Read more

குஜராத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்க சதி: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

புஜ்: குஜராத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்க சதி நடந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் புஜ் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மோடி அதன்பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது. இந்தியா மட்டுமின்றி உலக அரங்கிலும் குஜராத் மாநிலத்தின் பெருமைக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்க சதி நடைபெற்றது. மேலும், இந்த மாநிலத்துக்கு வரும் முதலீடுகளை நிறுத்தவும் பலமுறை முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அதையெல்லாம் கடந்து குஜராத் மாநிலம் வளர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்துள்ளது. 2001ம் ஆண்டு ஏற்பட்ட … Read more

மோடியின் சொல், செயல் ராகுல் காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி: குஜராத்தில் சபர்மதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான அடல் பாலத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். பின்னர், ராட்டையில் நூல் நூற்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ‘காதியின் நூல்தான் அடிமைச் சங்கிலியை உடைத்தெறிந்தது. நாட்டின் தற்சார்பு நிலையை எட்ட காதி உத்வேகம் அளிக்கும். வரவிருக்கும் பண்டிகை காலங்களில் காதி கிராம தயாரிப்புகளை பரிசளியுங்கள்,’என்று தெரிவித்தார். இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பி.யுமான ராகுல் காந்தி நேற்று … Read more

மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து விலகியதால் கடும் நெருக்கடி: அக்.17-ல் காங்கிரஸ் தலைவர் தேர்தல்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான மனு தாக்கல் செப். 24-ல் தொடங்கும் எனவும் அக்கட்சி அறிவித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. 2019 மக்களவைத் தேர்தலிலும் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியை பறிகொடுத்தது. 2019 மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி … Read more

இன்னும் 29 நாட்கள் தான்… திருப்பதியில் ஏழுமலையான் பக்தர்களுக்கு சர்ப்ரைஸ்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து ஒன்பது நாட்கள் கோலாகலமாக விழா நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. நடப்பாண்டு சிறப்பான முறையில் விழாவை நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) முடிவு செய்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக எளிமையான முறையில் பிரம்மோற்சவ விழா நடத்தப்பட்டது. நான்கு மாட வீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெறவில்லை. ஏழுமலையான் பக்தர்களுக்கும் பல்வேறு … Read more

பயணியின் தகவல் திருட்டு; சிக்கலில் ஆகாசா விமான நிறுவனம்

புதுடெல்லி: பயணிகளின் தகவல் கசிந்ததால், ஆகாசா விமான நிறுவனம் தனிநபர் தகவல் விதிமீறல் சிக்கலில் மாட்டி கொண்டு மன்னிப்பு கேட்டது. சமீபத்தில் மறைந்த `இந்தியாவின் வாரன் பபெட்’என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா `ஆகாசா’விமான நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தின் மும்பை – அகமதாபாத் முதல் விமான சேவையை விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இணை அமைச்சர் வி.கே. சிங் கடந்த 7ம் தேதி தொடங்கி வைத்தனர். இந்நிலையில், ஆகாசா விமானத்தில் பயணித்த வாடிக்கையாளர் ஒருவரின் பெயர், … Read more

காஷ்மீர் விடுதி அறைகளில் கிரிக்கெட் பார்ப்பதற்கு தடை: ஸ்ரீநகர் என்ஐடி உத்தரவு

ஸ்ரீநகர்: இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியைப் பார்க்க நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்த கிரிக்கெட் போட்டியை விடுதி அறையில் டி.வி.யில் கும்பலாக பார்க்கும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் … Read more