குஜராத்தின் பூஜ் நகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான எண்ணற்ற வளர்ச்சி திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.!

குஜராத்: பிரதமர் மோடி குஜராத்தின் பூஜ் நகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான எண்ணற்ற வளர்ச்சி திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். பூஜ், குஜராத்தின் பூஜ் பகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரியில் நாட்டின் 52-வது குடியரசு தினத்தன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை நிலைகுலைய செய்தது. 2 நிமிடங்களே நீடித்த இந்நிலநடுக்கத்திற்கு பின் ஏற்பட்ட விளைவுகள் கற்பனை செய்து பார்க்க முடியாதவை. இதில் 20 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். 1.7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் … Read more

விண்ணைதொட்டு நின்ற நொய்டா இரட்டை கோபுரங்கள் 9 விநாடிகளில் தூள் தூளானது! வீடியோ

விதிகளைப் புறக்கணித்து நொய்டாவில் கட்டப்பட்ட பிரமாண்ட இரட்டை கோபுரங்கள் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு திட்டமிட்டபடி வெடிவைத்து தகர்க்கப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ‘சூப்பர் டெக்’ என்ற நிறுவனத்தின் சார்பில் பிரமாண்ட இரட்டைக் கோபுர குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் ‘அபெக்ஸ்’ என்ற கோபுரம், 32 மாடிகளை உடையது. இதன் உயரம் 328 அடி. மற்றொரு கோபுரமான ‘சியான்’ 31 மாடிகளை உடையது; இதன் உயரம் 318 அடி. இந்த இரட்டை கோபுரங்கள் விதிமுறையை மீறி கட்டப்பட்டதாக … Read more

பிஹார் அரசு பொறியாளர் வீட்டில் ரூ.5.25 கோடி பறிமுதல்

பாட்னா: பிஹார் மாநில அரசு பொறியாளரின் வீடுகளில் இருந்து ரூ.5.25 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிஹார் தலைநகர் பாட்னாவில் பெசன்ட் பிஹார் காலனியை சேர்ந்தவர் சஞ்சய் குமார் ராய். அந்த மாநில அரசின் ஊரக மேம்பாட்டுத் துறையில் செயல் பொறியாளராக அவர் பணியாற்றி வருகிறார். தற்போது அவர் பிஹாரின் கிஷான்கன்ஞ் மாவட்டத்தில் பணியில் உள்ளார். வருமானத்துக்கு அதிகமாக அவர் சொத்துகளை குவித்து வருவதாக மாநில லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரசு பொறியாளர் … Read more

அக்டோபர் 17-ல் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்

டெல்லி: அக்டோபர் 17-ல் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் 19-ம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

9 விநாடிகளில் தகர்ப்பு; நீர்வீழ்ச்சி போல் வழிந்தோடிய புகை!

நொய்டா: டெல்லி அருகே நொய்டாவில் விதிமுறைகளை மீறி 32 மாடிகளுடன் நவீன முறையில் கட்டப்பட்ட இரட்டை கோபுர கட்டிடம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இன்று (ஆகஸ்ட் 28) தகர்க்கப்பட்டது. 32 மற்றும் 29 தளங்கள் கொண்ட அந்த இரண்டு கட்டிடங்களும் வெறும் 9 விநாடிகளில் தகர்க்கப்பட்டது. நொய்டாவில் ஏடிஎஸ் என்ற கிராமத்தில் எமரால்டு கோர்ட் என்ற குடியிருப்பு பகுதியில், தி டவர்ஸ் அபெக்ஸ் என்ற பெயரில் 32 தளங்களில் வீடுகள் கட்டப்பட்டன. அதன் அருகே சேயன் என்ற … Read more

நொய்டாவில் விதிமுறை மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுர கட்டிடம் வெடிவைத்து தகர்ப்பு; அதிகாலை முதல் 5,000 குடும்பங்கள் வெளியேற்றம்.!

நொய்டா: நொய்டாவில் நொடிப்பொழுதில் இரட்டை கட்டடம் வெடிமருந்து மூலம் தகர்க்கப்பட்டது. நொய்டா இரட்டை கோபுர கட்டிடம் ’வாட்டர் ஃபால் இம்லோஷன்’ என்ற தொழில்நுட்பம் மூலம் தகர்க்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், தனியார் நிறுவனத்தின் சார்பில் 40 மாடிகளை கொண்ட இரட்டைக் கோபுர கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டது. பல ஆண்டுகளாக நடந்த நீதிமன்ற வழக்குகளுக்கு பின்னர் இந்த கட்டிடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று மதியம் 2.30 மணிக்கு இந்த இரட்டைக் கோபுர கட்டிடங்கள் … Read more

சிறுதானிய தின்பண்டங்களுடன் சமூக ஊடகங்களில் செல்ஃபி: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு

புதுடெல்லி: பண்டிகைகளுக்கான தின்பண்டங்களில் சிறுதானிய வகைகளைப் பயன்படுத்துவோம். சிறுதானிய தின்பண்டங்களுடன் செல்ஃபி எடுத்துப் பகிருங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி வாயிலாக மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 28) அவர் 91வது மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர், “அசாமின் போங்காயி கிராமத்திலே ஒரு சுவாரசியமான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இது … Read more

நொய்டா சூப்பர்டெக் ட்வின் டவர்ஸ்: வெடி வைத்து தகர்க்கப்பட்ட இரட்டை மாடிகள்…!

தலைநகர் டெல்லி அருகே நொய்டாவில் சூப்பர்டெக் ட்வின் டவர்ஸ் என்ற பெயரில் மிகவும் பிரம்மாண்டமாக இரட்டை மாடி கட்டடம் கட்டப்பட்டது. இதில் Apex என்ற கட்டிடம் 103 மீட்டரும் (32 மாடிகள்), Ceyane என்ற கட்டிடம் 94 மீட்டர் உயரமும் (29 மாடிகள்) கொண்டதாக இருந்தன. இவை விதிகளை மீறி கட்டப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையில் இரட்டை மாடி கட்டடத்தை தகர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான பணிகள் ஓராண்டாக … Read more

9 ஆண்டுகள் நீடித்த வழக்கு : நொய்டா இரட்டை கோபுர தகர்ப்பின் பின்னணி

நொய்டாவில் செக்டார் 93A 2 பகுதியில் சூப்பர்டெக் நிறுவனத்தால் அபெக்ஸ் மற்றும் செயேன் என்ற இரட்டை அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டன. இதில், அபெக்ஸ்-சில் 32 மாடிகளும்,  செயேனில் 29 மாடிகளும் உள்ளன. இந்த இரு கட்டடங்களும் சுமார் 100 மீட்டர் உயரம் கொண்டவை. இவை குதுப்மினாரை விட அதிக உயரமானவை.  பிரம்மாண்டமான இந்தக் கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டதால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இதற்காக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு 9 ஆண்டுகள் நடைபெற்றது. இவ்வழக்கு … Read more

இந்தியாவில் ஐசிசி ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய டிஸ்னி ஸ்டார் நிறுவனம்

மும்பை: 2024-27 வரை ஐசிசி சார்பில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமத்தை சுமார் ரூ.24,000 கோடிக்கு டிஸ்னி ஸ்டார் நிறுவனம் ஏலத்தில்  எடுத்துள்ளது. அடிப்படை கட்டணமாக ரூ.11,500 கோடியை ஐசிசி நிர்ணயித்த நிலையில் இருமடங்கு அதிக தொகை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டது.