சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டம் – தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு

புதுடெல்லி: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டம் தொடர்பாக கடந்த மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறைக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்கள் சரியே என உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். வழக்கு … Read more

பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ்… ராகுல் கற்க வேண்டிய பாடம்!

‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’… 2014 இல் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றபோது அக்கட்சியின் தேசிய தலைவராக இருந்த அமித் ஷா உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. பாஜகவை தொண்டர்கள், மத்தியில் மட்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினால் போதாது. அனைத்து மாநிலங்களிலும் பாஜகவின் தாமரை கொடிதான் பறக்க வேண்டும் என்று கட்சியை நாடு முழுவதும் வளர்க்கும் நோக்கில் ஒரு கட்சித் தலைவராக அமித் ஷா இப்படி சொன்னதில் தவறொன்றும் இல்லைதான். ஆனால் இதற்கு பாஜக கையாண்டு … Read more

திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாய்ப்பு; கல்வித் தகுதி இதுதான் – உடனே விண்ணப்பியுங்கள்

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமாக இருக்கும் மருத்துவமனையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.  இப்போது வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் குழந்தை நல மருத்துவர் (Paediatrician), குழந்தை இருதய நிபுணர் (Paediatric Cardiac Anaesthetist) ஆகியோர் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.      பணியின் பெயர்;  Paediatric Cardiac Anaesthetist – 02Paediatrician – 01   காலியிடங்கள்; 03 காலியிடங்கள்   விண்ணப்பிக்க கடைசி தேதி; 31.08.2022   விண்ணப்பிக்கும் முறை; … Read more

மாற்று கட்சி எம்எல்ஏக்களை வாங்க ரூ.6,300 கோடியை செலவிட்டுள்ளது பாஜக: கெஜ்ரிவால் குற்றசாட்டு

டெல்லி: கடந்த சில ஆண்டுகளில் மாற்று கட்சி எம்எல்ஏக்களை வாங்க ரூ.6,300 கோடி பாஜக செலவிட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் மாற்று கட்சியைச் சேர்ந்த 277 எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை என்ற சதி திட்டத்தை தீட்டியுள்ளதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

இலவச வாக்குறுதிகள் வழங்க தடைகோரிய வழக்கு – 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

தேர்தலில் அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகளை வழங்க தடை கோரிய மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா உத்தரவிட்டுள்ளார். தேர்தலின் போது அறிவிக்கப்படும் இலவச வாக்குறுதிகளுக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கு மீதான விசாரணை தலைமை நீதிபதி என்.வி ரமணா அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கின் முக்கியத்துவம் கருதி விரிவான விவாதம் தேவைப்படுகிறது என்பதால் மூன்று நீதிபதிகள் … Read more

தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு பெறுகிறார்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு பெறுகிறார். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பொன்னாவரம் கிராமத்தில் 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி என்.வி.ரமணா பிறந்தார். தொடக்கத்தில் பத்திரிகையாளராக பணியாற்றிய அவர், 1983-ல் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கொண்டார். ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய அவர், 2000-வது ஆண்டில் அதே உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2013 செப்டம்பர் 2-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட … Read more

பேய் விரட்டுவதாக கூறி 13 வயது சிறுமி, தம்பி பலாத்காரம்: பாஸ்டருக்கு ஆயுள் முழுவதும் சிறை

திருவனந்தபுரம்: பேய் விரட்டுவதாக கூறி 13 வயது சிறுமியையும், அவரது தம்பியையும் பலமுறை பலாத்காரம் செய்த திருவனந்தபுரத்தை சேர்ந்த பாஸ்டருக்கு மஞ்சேரி நீதிமன்றம் ஆயுள்கால சிறையும், ₹ 2.75 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டு உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ் பிரகாஷ் (53). அங்குள்ள ஒரு சர்ச்சில் பாஸ்டராக உள்ளார். கடந்த 2016ம் ஆண்டு மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணாவில் நடைபெற்ற ஒரு கிறிஸ்தவ கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது … Read more

“நீங்க ரைட் விங் இல்லை, ரைட் 'திங்'கை பேசியுள்ளீர்கள்” – குஷ்புவுக்கு சசி தரூர் பாராட்டு

புதுடெல்லி: பாஜகவின் குஷ்பு சுந்தருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். முன்னாள் கட்சித் தோழி என்பதால் பாராட்டவில்லை, பில்கிஸ் பானு வழக்கில் நியாயத்தின் பக்கம் நின்றுள்ளதாகாக் கூறி பாராட்டியுள்ளார். அண்மையில் குஷ்பு ஒரு ட்வீட் பதிவு செய்திருந்தார். அதில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அந்த ட்வீட்டில் குஷ்பு, “ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மோசமாக தாக்கப்பட்டு, வாழ்நாள் முழுதும் நீங்காத ஆன்ம ரணத்தைப் பெற்றிருக்கிறார். அவருக்கு நீதி … Read more

சாப்பாடு கொடுக்கும் போது தகராறு: மனநலம் குன்றிய மனைவியை கொன்ற கணவன்

குர்கான்: அரியானாவில் மனநலம் குன்றிய மனைவிக்கு சாப்பாடு கொடுக்கும் போது ஏற்பட்ட தகராறால், அவரை கழுத்து நெரித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். அரியானா மாநிலம் குர்கான் அடுத்த சூரிய விஹார் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தீபக் கிர்பத் (59). இவரது மனைவி பூனம் அரோரா (58). இவர்களுக்கு மான்யதா வில்லியம் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மனநலம் குன்றிய தனது மனைவி பூனம் அரோராவை தீபக் கிர்பத் கவனித்து வந்தார். இந்நிலையில் … Read more

ஜம்மு காஷ்மீரின் உரியில் என்கவுன்ட்டர் 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீரில் உள்ள பாராமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எல்லை கட்டுப்பாட்டு பகுதி உள்ளது. இங்கு ராணுவத்தினரும், பாராமுல்லா போலீசாரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கமல்கோட் என்ற இடத்துக்கு அருகே 3 தீவிரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். அவர்கள் மீது ராணுவத்தினரும், பாராமுல்லா போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இங்கு கடந்த 72 மணி நேரத்தில் போதை பொருள் கடத்தல் முயற்சியும் … Read more