3700 கிலோ வெடி மருந்து: தகர்க்கப்படும் நொய்டா இரட்டை கோபுர கட்டடம்; மக்களுக்கு எச்சரிக்கை

நொய்டாவில் அமைந்துள்ள 40 மாடிகளை கொண்ட இரட்டை கோபுர குடியிருப்பு கட்டடம் நாளை மறுநாள் வெடிவைத்து தகர்க்கப்பட உள்ள நிலையில் இந்த பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் தனியார் நிறுவனத்தின் 40 மாடிகளை கொண்ட இரட்டை கோபுர கட்டடம் கடுமையான விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது தெரியவந்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி நாளை மறுநாள் ஆகஸ்ட் 28-ஆம் தேதி சுமார் 3700 கிலோ வெடி மருந்துகளை பயன்படுத்தி வெறும் ஒன்பது நொடிகளில் … Read more

செப்.7ல் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தேசிய தேர்வுகள் முகமை தகவல்

புதுடெல்லி: மருத்துவ இளநிலை படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நம் நாட்டில் எம்பிபிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17ல் நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், … Read more

6ஜி சேவை எப்போது? பிரதமர் மோடி முக்கிய அப்டேட்!

5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் 6ஜி அலைக்கற்றை சேவை குறித்த முக்கிய அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது. இதில் 20 ஆண்டுகளுக்கு10 பேண்ட்களில் 72,098 மெகாஹெர்ட்ஸ் (72 ஜிகாஹெர்ட்ஸ்) அலைக்கற்றையை ஏலம் விட தொலைத் தொடர்பு துறை முடிவு செய்தது. அதன் அடிப்படை மதிப்பு ரூ.4.3 லட்சம் கோடி. ஆகஸ்ட் 1ஆம் தேதி ஏலம் நிறைவடைந்தது. இதில், 72,098 மெகாஹெர்ட்ஸில் 51,236 மெகாஹெர்ட்ஸ் (71%) … Read more

கட்சியின் தோல்விக்கு ராகுல் காந்தியே காரணம் -காங்கிரஸிலிருந்து விலகினார் குலாம் நபி ஆசாத்

Congress Vs Ghulam Nabi Azad: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் செல்வாக்குடன் இருந்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து திடீர் என விலகுவதாக அறிவித்து சோனியா காந்திக்கு 5 பக்க கடிதத்தை எழுதியுள்ளர. அந்த கடிதத்தில், குறிப்பாக ராகுல் காந்தியின் செயல்பாடுகளை ஆசாத் … Read more

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாப் நபி ஆசாத்..!!

டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாப் நபி ஆசாத், காங்கிரசில் இருந்து விலகினார். காங்கிரஸ் பிரசார குழு தலைவர் பதவியை ஏற்கனவே நிராகரித்த நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி அறிவித்துள்ளார். அண்மைக்காலமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். ஏற்கனவே கட்சியில் இருந்து மூத்த தலைவராக இருந்த கபில் சிபில் உள்ளிட்டோர் அடுத்தடுத்து விலகியிருக்கக்கூடிய … Read more

பாரத் ஜோதோ யாத்திரையால் தள்ளிப்போகும் காங்கிரஸ் தலைவர் தேர்தல்

புதுடெல்லி: செப்டம்பர் 20ல் நடைபெறவிருந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பாரத் ஜோதோ யாத்திரை காரணமாக தள்ளிப்போகலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் வரும் சனிக்கிழமை காங்கிரஸ் காரிய கமிட்டி ஆன்லைன் சந்திப்பை நடத்துகிறது. அதில் தேர்தல் நடைமுறைகள் குறித்து இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்துகிறது. கடந்த அக்டோபர் மாதம் காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20க்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அறிவித்தது. … Read more

குலாம் நபி ஆசாத்: காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமா குட்பை சொன்னதால் பரபரப்பு!

மாநில அளவிலான பொறுப்புகளை ஓரங்கட்டி விட்டு தேசிய அரசியலில் கவனம், பாஜகவில் ஐக்கியம் என பல்வேறு சர்ச்சைகள் சுற்றி வந்த நிலையில், இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒட்டுமொத்த வெளியேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் விவகாரங்கள் குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். இவர் கட்சி தலைமை மீது … Read more

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது

டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது. பேரவை தொடங்கிய உடனே பாஜக உறுப்பினர்கள் அமளியால் கூட்டம் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.

திருக்குறளின் ஆன்மாவை சிதைத்தவர் ஜியு போப். ஆளுநர் ரவி

புதுடெல்லி: திருக்குறளில் இருந்து பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே சிதைக்கப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். தலைநகர் டெல்லியில் லோதி எஸ்டேட் பகுதியில் டெல்லி தமிழ் கல்வி கூட்டமைப்பின் (Delhi Tamil Education Association – DTEA) சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். விழாவில் ஆர்.என்.ரவி பேசியதாவது: பிரிட்டிஷாரின் கிழக்கு இந்திய கம்பெனியும், ஜி.யு.போப் போன்ற மிஷனரிக்களும் திருக்குறளின் பக்தி என்ற ஆன்மாவை வேண்டுமென்றே மறைத்துள்ளனர் திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி … Read more

இலவசங்கள் தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை தேவை என்பதால் வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி என்.வி.ரமணா உத்தரவு

டெல்லி: இலவசங்கள் தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை தேவை என்பதால் வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் அரசியல்கட்சிகள் இலவச வாக்குறுதிகள் அறிவிப்பதை எதிர்க்கும் பிரச்சனையை ஆராய நிபுணர் குழு அமைக்கலாம் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.