கேரளா பல்கலை.யில் திருநங்கைகளுக்காக விடுதி திறப்பு

கோட்டயம்: கேரள மாநிலம் கோட்​ட​யம் மாவட்​டத்​தில் மகாத்மா காந்தி பல்​கலைக்​கழகம் உள்​ளது. இதில் பயிலும் திருநங்கை மாணவர்​கள் தனி​யாக விடுதி கட்​டித் தர வேண்​டும் என நீண்​ட​கால​மாக கோரி வந்​தனர். இதையடுத்​து, அப்​பல்​கலைக்​கழக வளாகத்​தில் மாநிலத்​திலேயே முதல் முறை​யாக திருநங்கை மாணவர்​களுக்கு தனி​யாக தங்​கும் விடுதி கட்​டப்​பட்​டுள்​ளது. இதை மாநில சமூக நீதித் துறை அமைச்​சர் ஆர்​.பிந்து நேற்று முன்​தினம் திறந்து வைத்​தார். இதுகுறித்து திருநங்கை மாணவர் ஒரு​வர் கூறும்​போது, “நாங்கள் தங்குவதற்கு வாடகை வீடுகள் கிடைப்பது … Read more

இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதிப்பு: எவ்வளவு நெருக்கடி வந்தாலும் கவலையில்லை –  விவசாயிகளை காப்பேன் என பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: ​நாட்​டில் உள்ள சிறு நிறு​வனங்​கள், விவ​சா​யிகளை பாது​காக்​கும் விஷ​யத்​தில் எவ்​வளவு நெருக்​கடிகள் வந்​தா​லும் கவலை​யில்​லை’’ என்று பிரதமர் நரேந்​திர மோடி உறு​தி​யாக தெரி​வித்​தார். உலக நாடு​களுக்கு அதி​கபட்ச வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்​தி​யா​வுக்கு 25 சதவீத வரியை விதித்​தார். உக்​ரைன் மீது போர் தொடுத்​துள்ள ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால், இந்​தி​யா​வுக்கு கூடு​தலாக 25% வரியை அறி​வித்​தார். இதற்​கான உத்​தர​வில் நேற்று ட்ரம்ப் கையெழுத்​திட்​டார். இதையடுத்து அமெரிக்கா​வுக்கு இந்​தி​யா​வில் இருந்து ஏற்​றுமதி … Read more

வாரணாசியில் இன்று புதிதாக காசி தமிழ்ச் சங்கம் துவக்கம்!

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று காசி தமிழ்ச் சங்கம் துவக்கப்படுகிறது. இதற்கான விழா வாரணாசி மண்டல ஆணையர் எஸ்.ராஜலிங்கம் தலைமையில் நடைபெறுகிறது. காசி எனும் வாரணாசிக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பை வலுப்படுத்தும் வகையில் அங்கு காசி தமிழ் சங்கமங்கள் (கேடிஎஸ்) நடைபெறுகின்றன. தனது மக்களவைத் தொகுதி என்பதால் பிரதமர் நரேந்திர மோடியும் கேடிஎஸ் நிகழ்ச்சியை மத்திய, மாநில அரசுகளால் நடத்தி ஆதரவளிக்கிறார். எனினும், உ.பி.யின் இந்த புண்ணியத்தலத்தில் தமிழர்களுக்கு எனத் தனியாக ஒரு அமைப்பு … Read more

‘வாக்குரிமையை பறித்த பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்’ – பிஹாரில் ஸ்டாலின் பேச்சு!

முசாபர்பூர்: ‘பாஜக எப்படி தேர்தல்களை கேலிக்கூத்தாக்கிவிட்டது என்பதை ராகுல் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். மக்களின் வாக்குரிமையை பறித்த பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்’ என பிஹாரில் வாக்காளர் அதிகார யாத்திரை பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிஹாரில் 1,300 கிலோ மீட்டர் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். ஆகஸ்ட் 17 ஆம் தேதி சசாரமில் … Read more

‘ஹெட்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை’ – உ.பி அரசின் புதிய பிரச்சாரம்!

லக்னோ: செப்டம்பர் 1 முதல் 30ஆம் தேதி வரை ‘ஹெல்மெட் இல்லையெனில் எரிபொருள் இல்லை’ என்ற மாநில அளவிலான சாலைப் பாதுகாப்பு பிரச்சாரம் நடைபெறும் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச அரசு ‘ஹெல்மெட் இல்லையெனில் எரிபொருள் இல்லை’ என்ற புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம், பெட்ரோல் நிலையங்களில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு, எரிபொருள் நிரப்பப்படாது. மாவட்ட ஆட்சியர்கள் சாலைப் பாதுகாப்புக் குழுக்களுடன் இணைந்து, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரு … Read more

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்கிறது இந்தியா

புதுடெல்லி: 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏல விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விளையாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2030-ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடத்துதற்கான ஏல விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விளையாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் … Read more

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு இன்று முதல் அமல்: தயாராகும் இந்தியா…. இந்த துறைகள் ஆட்டம் காணும்

Trump Tariffs Latest News: இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கும் விரிவான திட்டத்தை அமெரிக்கா திங்களன்று அறிவித்தது. அது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கருப்பு பணத்தை வெள்ளையாக்க அரசியல் கட்சி: ரூ.271 கோடி பரிவர்த்தனை செய்த ராஜஸ்தான் தொழிலதிபர்

புது டெல்லி: ராஜஸ்தானில் கருப்பு பணத்தை வெள்ளையாக்க அரசியல் கட்சி துவங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.271 கோடி பரிவர்த்தனை செய்த தொழிலதிபர் வருமான வரித்துறையினரிடம் சிக்கினார். ராஜஸ்தானின் பில்வாராவில் தொழிலதிபராக இருப்பவர் கமலேஷ் ஆச்சார்யா. இவர், தனது நண்பர்களான வழக்கறிஞர்கள் விகாஸ் வியாஸ் மற்றும் தீபக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து ஒரு அரசியல் கட்சி துவக்கி உள்ளார். சுமார் மூன்று வருடங்களுக்கு முன் துவக்கப்பட்ட இக்கட்சியின் பெயர், ‘தேசிய சர்வ சமாஜ் கட்சி’. இதன் பின்னணியில் தமது கறுப்புப் … Read more

ராகுல் காந்தியுடன் விரைவில் விஜய் சந்திப்பு? உடைகிறதா திமுக கூட்டணி?

திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைத்து ஒரு புதிய அரசியல் அணிக்கு தலைமை தாங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு – டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காவிரி, முல்லைப் பெரியாறு மற்றும் மரபணு மாற்று தொழில்நுட்பம் ஆகிய விவகாரங்கள் முன்னிறுத்தப்பட்டன. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று( ஆக. 26) நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமை வகித்தார். ஆர்பாட்டத்திற்கு பின் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கு அனைவரும் ஊர்வலமாக புறப்பட்டனர். … Read more