ரா தலைவராக பராக் ஜெயின் நியமனம்

இந்திய உளவுத் துறையான ரா அமைப்பின் தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா, சீனா இடையே போர் நடைபெற்றது. இதன்பிறகு 1965-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. இந்த இரு போர்களின்போது கிடைத்த அனுபவங்கள் காரணமாக கடந்த 1968-ம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு தொடங்கப்பட்டது. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமைப்பு இந்தியாவின் உயர் உளவு பிரிவு ஆகும். ரா அமைப்பின் முதல் தலைவராக … Read more

சொந்த ஊருக்கு ரயிலில் செல்வோர் கவனத்திற்கு! உடனடியாக அமலுக்கு வரும் புதிய விதிகள்!

இந்திய ரயில்வே அவ்வப்போது சில விதிகளை மாற்றி அமைத்து இருக்கிறது. அந்த வகையில் இனி எட்டு மணி நேரத்துக்கு முன்பே முன்பதிவு அட்டவணை வெளியிடப்பட உள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு: 9 தொழிலாளர்களின் நிலை என்ன?

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட மேக வெடிப்பில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சுமார் 9 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதை காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர். கனமழை மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட மேக வெடிப்பினால் யமுனோத்திரி கோயிலுக்கு செல்லும் வழியில் சாலை கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 9 பேர் காணவில்லை என்பதை அங்குள்ள … Read more

புரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: 3 பேர் பலி; காயம் 50 – முதல்வர் மாஞ்சி மன்னிப்பு

புவனேஸ்வர்: புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர். சுமார் 50 பேர் காயமடைந்தனர். ஸ்ரீ குந்திச்சா கோயில் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒடிசாவின் கடற்கரை நகரான புரியில் உலகப் புகழ் பெற்ற ஜெகநாதர் கோயில் அமைந்துள்ளது. புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு நாள்தோறும் 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். அதுவும் புரி ஜெகநாதர் கோயில் ரத … Read more

இந்தியாவை கண் நோயான ‘டிராக்கோமா’ இல்லாத நாடாக WHO அறிவித்துள்ளது: பிரதமர் பேச்சு

புதுடெல்லி: உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை கண் நோயான டிராக்கோமா இல்லாத நாடாக அறிவித்துள்ளது என்று ‘மன் கி பாத்’ உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார். மாதம்தோறும் பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் மக்களுடன் வானொலி வழியாக உரையாடி வருகிறார். இன்று இந்த நிகழ்ச்சியின் 123-வது அத்தியாயத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை கண் நோயான டிராக்கோமா இல்லாத நாடாக அறிவித்துள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் … Read more

சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையின்படி அரசின் நல திட்டங்களால் 95 கோடி பேர் பயன்: பிரதமர் மோடி பகிர்வு

புதுடெல்லி: அரசின் நலத் ​திட்டங்களால் நாடு முழுவதிலும் 95 கோடிக்கும் மேற்பட்டோர் பயன் அடைகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்​களிடம் பிரதமர் மோடி உரை​யாற்றி வரு​கிறார். அதன்​படி 123-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. இதில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: நீண்ட காலத்​துக்​கு பிறகு, கைலாஷ் மானசரோவர் புனித யாத்​திரை மீண்​டும் தொடங்​கியுள்ளது. ஜூலை … Read more

பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட மாணவியை சந்திக்க கொல்கத்தா மகளிர் ஆணைய உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு

கொல்கத்தா: கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார், குற்றம் நடந்த கல்லூரிக்கு வருகை தந்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார் இன்று தெற்கு கொல்கத்தா சட்டக்கல்லூரிக்குச் சென்றார். அங்கு வழக்கின் விசாரணை விவரங்கள் குறித்து ​​பொறுப்பதிகாரியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ச்சனா மஜும்தார், “காவல்துறையினர் பாதிக்கப்பட்டவரை சந்திக்கவோ, குற்றம் நடந்த இடத்தைப் பார்க்கவோ, அந்தப் பகுதிகளில் … Read more

ஜார்க்கண்ட்: ஜாம்ஷெட்பூரில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளியில் இருந்து 162 குழந்தைகள் மீட்பு

ஜாம்ஷெட்பூர்: கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள கோவாலி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட லவ் குஷ் குடியிருப்புப் பள்ளியில் சிக்கித் தவித்த 162 குழந்தைகளை காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். இதுகுறித்து ஜாம்ஷெட்பூர் காவல்துறை வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோவாலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லவ் குஷ் குடியிருப்புப் பள்ளியில் சிக்கித் தவித்த 162 குழந்தைகளை ஜாம்ஷெட்பூர் காவல்துறையினர் வெற்றிகரமாக மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் … Read more

புரி கோயில் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: மாவட்ட எஸ்.பி, ஆட்சியர் பணியிட மாற்றம்

புரி: புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியானதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நிகழ்வில் இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர். சுமார் 50 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வினித் அகர்வால் மற்றும் … Read more

மார்ச் 2026-க்குள் மாவோயிஸம் நாட்டிலிருந்து ஒழிக்கப்படும்: அமித்ஷா சூளுறை

நிஜாமாபாத்: “2026-ம் ஆண்டு மார்ச் 31-க்குள் மாவோயிசம் மற்றும் நக்சல் சித்தாந்தத்திலிருந்து நாட்டை விடுவிப்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளுரைத்தார். மேலும், துப்பாக்கிகளை கைவிட்டு சரணடையுமாறு மாவோயிஸ்டுகளுக்கு அவர் அறிவுறுத்தினார். தெலங்கானாவின் நிஜாமாபாத்தில் இன்று (ஜூன் 29) நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “சரணடைய விரும்புவோர், வடகிழக்கில் ஆயிரக்கணக்கான நக்சல்கள் செய்தது போல் சரணடைந்து பிரதான நீரோட்டத்தில் இணையலாம். ஆனால் துப்பாக்கிகளை எடுப்பவர்கள் தப்பிக்க மாட்டார்கள். … Read more