அவதூறு பதிவுகளை போட்டு மன அமைதியை கெடுக்கின்றனர்! கன்னட நடிகை போலீசில் புகார்

மைசூரு: சமூக வலைதளங்களில் எனக்கு எதிராக அவதூறு பதிவுகளை போட்டு, என்னுடைய மன அமைதியை சிலர் கெடுக்கின்றனர் என்று கன்னட நடிகை பவித்ரா லோகேஷ் போலீசில் புகார் அளித்துள்ளார்.  மூத்த கன்னட நடிகரும், மறைந்த மைசூர் லோகேஷின் மகளுமான பவித்ரா லோகேஷ்,  கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திர நடிகையாக  சின்னத்திரையிலும், பெரிய திரைகளிலும் நடித்துள்ள இவரது கணவர் சுசேந்திர  பிரசாத் மற்றும் சகோதரர் ஆதி லோகேஷ் ஆகியோரும் நடிகர்களாக உள்ளனர். இந்நிலையில் நடிகை பவித்ரா … Read more

’It's Dhoom 4.. மறுபடியும் வருவோம்’ : ஒடிசா போலீசுக்கு சவால் விட்ட திருட்டு கும்பல்!

சினிமாக்களில் வருவது போன்று திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோர் வசமாக சிக்கும் நிகழ்வு தொடர்ந்து அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. இப்படி இருக்கையில் ஹ்ரிதிக் ரோஷன் அமிர்கான் நடிப்பில் வெளியான தூம் படத்தில் வருவது போன்று ஒடிசாவில் உள்ள பள்ளியில் கணினி மற்றும் ஜெராக்ஸ் மெஷின்களை திருட்டு கும்பல் ஒன்று திருடிச் சென்ற சம்பவம் நடந்திருக்கிறது. நபரங்புர் மாவட்டத்தின் கதிகுடா என்ற பகுதியில் உள்ள இந்திராவதி மேல்நிலை பள்ளியில் நேற்று (ஜூலை 3) உள்ள கணினி உள்ளிட்ட பொருட்களை திருடிக் … Read more

சித்து மூஸ் வாலா படுகொலை: தேடப்பட்ட முக்கிய நபர் கைது; துப்பாக்கிகள் பறிமுதல்

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டுவந்த முக்கிய நபரான அங்கித் சிர்ஸாவை டெல்லி போலீஸார் கைது செய்தனர். கூலிக்கு கொலை செய்யும் அங்கித் குறிவைத்து சுடுவதில் தேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அங்கித் சிர்ஸா மீது ஏற்கெனவே இரண்டு கொலை வழக்குகள் ராஜஸ்தானில் பதிவு செய்யப்பட்டுள்ளது. யார் இந்து சித்து? சித்து மூஸ் வாலா பஞ்சாபில் மிகவும் பிரபலமான பாடகர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு இவர் காங்கிரஸில் … Read more

ஆந்திர முதல்வர் பிரதமரை வரவேற்கும் போது, சந்திரசேகர் ராவ் புறக்கணிப்பது ஏன்? மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி..!

நாட்டு மக்களால் இரண்டு முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதை புறக்கணித்ததன் மூலம் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசியலமைப்பை அவமதித்து விட்டார் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமரை வரவேற்கும் நிலையில், பிரதமரை வரவேற்காமல் சந்திரசேகர் ராவ் புறக்கணிப்பது துரதிருஷ்டவசமானது என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். Source link

அந்தமான் அருகே அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம்: சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருத்து

அந்தமான்:அந்தமான் அருகே அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காலையில் அந்தமான் அருகே நடுக்கடலில் ஏற்பட்ட நிலையில் பிற்பகலில் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நடுகடலில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். காலை 11 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 பதிவாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரைத் தொடர்ந்து அந்தமானில் 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம்

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைத் தெடர்ந்து அந்தமான் அருகே அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவானது. நண்பகல் 12.12 மணியளவில் பதிவான நிலநடுக்கமானது 5 கி.மீட்டர் ஆழத்தில் மையாக கொண்டு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. இந்நிலையில் அந்தமான் அருகே தென்கிழக்கு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 4.6 என்ற … Read more

ஆதித்ய தாக்கரே எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து?- கட்சி மாறி வாக்களித்ததாக புகார்: பதவி நீக்கம் செய்ய சபாநாயகர் ஆலோசனை

மும்பை: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே உள்ளிட்ட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கட்சியின் கொறாடா உத்தரவை எதிர்த்து வாக்களித்ததால் அவர் பதவியிழக்கும் சூழல் உள்ளது. மகாராஷ்டிராவில் பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 29-ம் தேதி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக, சிவசேனா அதிருப்தி அணி இணைந்து கடந்த 30-ம் தேதி மாநிலத்தில் புதிய அரசை அமைத்தன. சட்டப்பேரவை பேரவைத் தலைவர் தேர்வு நடந்தது. இதில் பாஜக … Read more

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த லாலு – மருத்துவமனையில் அனுமதி!

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 74 வயதான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார். கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ், கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான டோராண்டா கருவூல மோசடி … Read more

சுதந்திர போராட்ட வீரர் பசலா கிருஷ்ண மூர்த்திக்கு பிரதமர் மோடி மரியாதை.. அவரின் 90 வயது மகளின் பாதங்களை தொட்டு வணங்கினார்..!

ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் உரையாற்றிய பிறகு பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர போராட்ட வீரர் பசலா கிருஷ்ண மூர்த்தியின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து பேசினார். பசலா கிருஷ்ண மூர்த்தியின் மகளான 90 வயதாகும் பசலா கிருஷ்ண பாரதியின் பாதங்களை தொட்டு வணங்கி பிரதமர் ஆசிப்பெற்றார். அவரின் சகோதரி மற்றும் உறவினர்களையும் பிரதமர் சந்தித்து பேசினார்.  Source link

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நாட்களில் நாடு முழுவதும் ‘வாக்குறுதிகள்’ எதிர்ப்பு கூட்டம்; மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்த விவசாயிகள்

காஜியாபாத்: நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நாட்களில் நாடு முழுவதும் வாக்குறுதிகள் எதிர்ப்பு கூட்டம் நடத்த உள்ளதாக காஜியாபாத்தில் நடந்த விவசாய பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் அனைத்து விவசாய அமைப்பு பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கடந்தாண்டு டிசம்பர் 9ம் தேதி புதிய வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு வாபஸ் பெற்ற போது அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. ஒன்றி அரசு தனது … Read more