யூடியூப் பார்த்து 12 வயது சிறுவன் தயாரித்த ஒயினை குடித்த நண்பன் மருத்துவமனையில் அனுமதி!

கேரளாவில் யூ டியூப் பார்த்து சிறுவன் தயாரித்த ஒயினை குடித்த மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அம்மாநில அரசு பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுவன், வீட்டிலிருந்த திராட்சைகளை கொண்டு, யூ டியூப் பார்த்து ஒயின் தயாரித்துள்ளார். பாட்டிலில் திராட்சைகளை அடைத்து ஒயின் தயாரித்து அதனை மண்ணில் புதைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அதனை எடுத்து தனது நண்பனுக்கு சிறுவன் குடிக்க கொடுத்துள்ளான். அதைக் குடித்த சிறுவனுக்கு வாந்தியும், உடல் சோர்வும் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இதுதொடர்பாக தானாக … Read more

2 அமைச்சர்கள் ராஜினாமா, தலா 3 துறையை கவனிக்கும் 5 அமைச்சர்கள்; ஒன்றிய அமைச்சரவை விரைவில் மாற்றம்?: பார்லி. கூட்டத்தொடர், துணை ஜனாதிபதி தேர்தலுக்காக காத்திருப்பு

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சரவையில் சமீபத்தில் இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில், விரைவில் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் தற்போது 29 கேபினட்  அமைச்சர்கள் உள்ளனர். மேலும் 47 இணை அமைச்சர்கள், தனிப் பொறுப்புடன் கூடிய  இரண்டு இணை அமைச்சர்கள் உள்ளனர். இந்நிலையில் ஒன்றிய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் … Read more

வாஞ்சிநாதன் குறித்து மோடி பேச்சு – என்ன பேசினார் தெரியுமா?

மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் ரேடியோவில் நரேந்திர மோடி உரையாடுவது வழக்கம். இந்த மாத மான் கி பாத் நிகழ்ச்சியில் ரேடியோ மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனை நினைவு கூர்ந்து பேசியுள்ளார். பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ரேடியோ மூலம் இன்று உரையாற்றினார். அதில் பேசிய பிரதமர் மோடி “நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்ட … Read more

வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றுவோம்.! பிரதமர் மோடி வேண்டுகோள்.!

நாட்டு விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவையொட்டி வீடுதோறும் தேசியக் கொடியேற்ற வேண்டும் என்றும், விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடைய ரயில் நிலையங்களுக்குச் சென்று பார்க்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். மனத்தின் குரல் என்னும் தலைப்பில் வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டு விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவையொட்டி ஆகஸ்டு 13, 14, 15 ஆகிய நாட்களில் வீடுதோறும் தேசியக் கொடியேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தேசியக்கொடியை வடிவமைத்த பிங்கிலி வெங்கையாவின் பிறந்த நாள் ஆகஸ்டு … Read more

சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கைது

மும்பை: மும்பையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. நில மோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வந்தனர். 9 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விசாரணை அடிப்படையில் சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

கோவிட் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டால் இலவச சோலே பட்டூரே: சண்டிகர் தெருவோர வியாபாரி தாராளம்

கோவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தனது கடையில் இலவசமாக சோலே பட்டூரே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார் சண்டிகரைச் சேர்ந்த தெருவோர வியாபாரி ஒருவர். இவர் ஏற்கெனவே கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இலவசமாக சோலே பட்டூரே வழங்கி பிரதமர் மோடியிடம் பாராட்டைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, சஞ்சய் ராணா சிங் ஜியின் கடையில் சோலே பட்டூரே சாப்பிட வேண்டுமென்றால் நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு அந்த … Read more

ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கைது

ரான்சி: ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இர்பான் அன்சார், ராஜேஸ், கொங்காரி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் நேற்று 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சென்ற காரில் கட்டுக்கட்டாக ரூ.2.5. கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியர்கள் நியமனம் முறைகேடால் அவப்பெயர் அமைச்சரவை, கட்சியில் விரைவில் அதிரடி மாற்றம்: மம்தா முடிவு

கொல்கத்தா: ஆசிரியர்கள் நியமனம் முறைகேடு வழக்கில் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான பார்தா சட்டர்ஜி கைதான நிலையில், அமைச்சரவையையும், கட்சியையும் மாற்றி அமைக்க மம்தா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்த ஆசிரியர்கள் நியமன முறைகேடு தொடர்பாக, அம்மாநில அமைச்சராக இருந்த பார்தா சட்டர்ஜி, அவருடைய உதவியாளரும், தமிழ் நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அர்பிதாவின் பல வீடுகளில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட பல சோதனைகளில் … Read more

`நடிகை பாலியல் வழக்கில் மஞ்சு வாரியர் என்னை சிக்கவைத்துள்ளார்’- நடிகர் திலீப் புது புகார்

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கவைத்ததாக, முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் மீது நடிகர் திலீப் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கில் 8-ம் பிரதியாக சேர்க்கப்பட்டுள்ள நடிகர் திலீப் மீது காவல்துறை மற்றொரு வழக்கை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை திலீப் தாக்கல் செய்துள்ளார். அதில், மலையாள சினிமாவின் சக்திவாய்ந்த ஒரு பிரிவினரின் தனிப்பட்ட பழிவாங்கல் எண்ணத்தின் காரணமாகவும், தொழில் போட்டி காரணமாகவும் வழக்கு புனையப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தனது … Read more

’சமூக ஊடக புரொஃபைல் புகைப்படமாக தேசியக் கொடி’ – நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை, நாட்டு மக்கள் அனைவரும் உங்களுடைய சமூக ஊடக சுயவிவரப் புகைப்படங்களில் (profile pictures), மூவண்ணத்தைப் பதிவிடலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி யோசனை கூறியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் மாதந்தோறும் வானொலியில் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். … Read more