பிரசாந்த் கிஷோர் திட்டங்களை ஆய்வு செய்ய 3 பேர் குழு- சோனியா காந்தி நியமித்தார்

புதுடெல்லி: பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவுக்கு தோல்வியை தழுவி வருகிறது. இதனால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுலை விலகி இருக்கச் சொல்லி குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். காங்கிரசை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் சிந்தனை கூட்டம் ராஜஸ்தானில் … Read more

மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் பீகாரில் மது விற்பனை அமோகமாக நடக்கிறது: பாஜக கூட்டணி ஒன்றிய அமைச்சர் பகீர் புகார்

பாட்னா: பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், அங்கு மதுவிற்பனை அமோகமாக நடப்பதாக பாஜக கூட்டணியில் உள்ள ஒன்றிய அமைச்சர் பசுபதி பராஸ் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக – ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும்நிலையில், அம்மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால், விஷ சாராயம் குடித்து மக்கள் பலியாவதும், கள்ளமார்க்கெட்டில் மதுபானங்கள் சப்ளையாவதும் நாளுக்கு … Read more

2 லட்சம் சந்தாதாரர்களை இழந்த நெட்ஃபிளிக்ஸ்.. அந்த அறிவிப்புதான் காரணமா?

பத்து ஆண்டுகளில் இல்லாத அளவாக, 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது. பிரபல ஓ.டி.டி தளமான நெட்ஃபிளிக்ஸ் உலக அளவில் முன்னணியில் இருந்து வருகிறது. சந்தா கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த காலாண்டில் மட்டும் அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆறு லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் கணக்கை பலரும் பகிர்வதால், சந்தாதாரர்களை இழப்பதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு சந்தாதாரர் தங்களது கடவுச் சொல்லை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள விரும்பினால் கூடுதல் கட்டணம் … Read more

தீவிரமாகும் கொடநாடு வழக்கு.. இந்த முறை சிக்கியிருப்பது சசிகலா !!

நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட், பங்களா உள்ளது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஜெயலலிதாவு கோடநாடு சென்று ஓய்வு எடுப்பது வழக்கம். பல தீர்க்கமான முடிவுகளை அவர் அங்கிருந்துதான் எடுத்துள்ளார் என்றும் தற்போது வரை கூறப்படுகிறது. அந்த இடத்துக்கு எப்போதும் மவுசு அதிகம். ஆனால், அவர் உயிரிழந்த பிறகு அந்த எஸ்டேடும், பங்களாவும் மர்ம பகுதிகளாக இப்போது மாறியுள்ளது. அதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் டில் காவலாளி கொலை … Read more

பதவி விலகுகிறார் இலங்கை அதிபர்.. மக்கள் எழுச்சிக்கு பணிந்தார் ராஜபட்ச !!

தான் பதவி விலகத் தயார் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை எதிர்பாராத வகையில் உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இலங்கை தமிழ் மக்கள் பலரும் படகு மூலம் தமிழகம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.  இதனிடையே, இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் வீதியில் இறங்கி … Read more

மே 1 முதல் பேருந்து கட்டணம் உயர்வு: முதல்வர் அதிரடி அறிவிப்பு!

கேரள மாநிலத்தில், வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் பேருந்து, ஆட்டோ, டாக்சி ஆகியவற்றின் விலை உயர்த்தப்படுவதாக, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், அரசு – தனியார் பேருந்து உரிமையாளர்கள் அமைப்பு, பேருந்துக் கட்டணத்தை உயர்த்தும்படி, தொடர்ந்து போராட்டம் நடத்தி மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இதை … Read more

கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெற்ற 3 எம்.பிக்கள்

கொழும்பு: இலங்கை அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை விலக்குவதாக முஸ்லிம் சமூகத்தைச் 3 எம்பிக்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரகுமான் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். பிரதான எதிர்க்கட்சிக்கு எதிராக அரசியலமைப்பின் … Read more

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் நன்றி: இளையராஜா பாராட்டியதால் பிரதமர் மகிழ்ச்சி

டெல்லி: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி அவருக்கு நன்றி கூறினார். பிரதமர் மோடியையும், அம்பேத்கரையும் இசையமைப்பாளர் இளையராஜா ஒப்பிட்டு பேசியது பெரும் விவாத பொருளாக மாறி இருக்கக்கூடிய சூழலில், பிரதமர் நரேந்திர மோடியே இசையமைப்பாளர் இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை பற்றி முன்னுரை எழுதியதற்காக நன்றி தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது. புளு கிராஸ் டிஜிட்டல் பவுண்டேஷன் நிறுவனம் சார்பில், அம்பேத்கரும், … Read more

ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்புகள் திடீர் இடிப்பு – உடனடியாக நிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி ஜஹாங்கிர்புரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை டெல்லி நிர்வாகம் இன்று திடீரென இடித்து தள்ளியது. பின்னர் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது. டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரியில் கடந்த 16-ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன் பிறகு இந்து அமைப்புகள் சார்பில் அப்பகுதியில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் அங்குள்ள மசூதி அருகே ஊர்வலம் வந்த போது, அவர்கள் மீது ஒருதரப்பினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருதரப்பைச் சேர்ந்தவர்களும் பயங்கரமாக மோதிக் … Read more

இங்கிலாந்து பிரதமர் நாளை இந்தியா வருகை: குஜராத்தில் இருந்து தொடங்கும் பயணம்!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக வருகிற 21ஆம் தேதி (நாளை) இந்தியா வரவுள்ளார். பிரதமராக அவர் பதவியேற்ற பிறகு முதன்முறையாக அவர் இந்தியா வரவுள்ளார். இதற்கு முன்பு குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனவரி மாதம் இந்தியாவுக்கு அவர் வரவிருந்தார். ஆனால், கொரோனா தொற்று அதிகரித்த காரணத்தால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், நாளை இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பயணத்தை குஜராத்தில் இருந்து … Read more