கேரளா வரதட்சணை வழக்கு- கணவர்தான் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கொல்லம்: கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா விவகாரத்தில் அவரின் கணவர்தான் குற்றவாளி என கொல்லம் கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பின் முழு விவரங்கள், நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா, கிரண் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு வரதட்சனையாக 1 ஏக்கர் மதிப்பிலான ரப்பர் தோட்ட நிலம், 100 பவுன் நகை, ரொக்கம் என … Read more

கனமழையால் மோசமான வானிலை!: சென்னை – டெல்லி இடையே 4 விமானங்கள் இன்று ரத்து..பயணிகள் தவிப்பு..!!

டெல்லி: மோசமான வானிலை காரணமாக டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் டெல்லியில் கனமழை பெய்ததால் 19 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. டெல்லிக்கு வந்த விமானங்கள் ஜெய்ப்பூர், லக்னோ, இந்தூர், மும்பை, அமிர்தசரஸுக்கு திருப்பி விடப்பட்டன. சூறாவளி காற்றால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே, டெல்லியில் பலத்த மழையால் சென்னை – டெல்லி இடையே 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 விமானங்கள் பல மணி நேரம் … Read more

உ.பி: பாஜக ஆட்சிக்கு பின் சாலைகளில் தொழுகை நடத்துவது இல்லை: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ரமலான் பண்டிகையையொட்டி சாலையில் தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், ” உத்தரப் பிரதேசத்தில் ராம நவமி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. எங்கும் வன்முறை இல்லை. உத்தரப் பிரதேசத்தில் ரமலான் மற்றும் அல்விதா ஜும்ஆ (ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை) அன்று சாலையில் நமாஸ் நடத்தப்படவில்லை. கடந்த ஆட்சியில் முசாபர்நகர், மீரட், மொராதாபாத் … Read more

உ.பி.யில் 42 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நினைவு தினம் அனுசரிப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் மீரட் அருகே உள்ள ஹாஷிம்புராவில் கடந்த 1987-ம் ஆண்டில் 42 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கடந்த 1986-ம் ஆண்டு பிப்ரவரியில் உத்தர பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு நடத்த மாவட்ட நீதிபதி அனுமதி வழங்கினார். அப்போது மத்தியில் பிரதமராக ராஜீவ் காந்தியும், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ்முதல்வராக வீர் பகதூர் சிங்கும் பதவி வகித்தனர். மாவட்ட நீதிபதியின் உத்தரவின்படி அயோத்தி ராமர் கோயில் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. … Read more

அரசியலில் களம் இறங்கப் போகிறேனா? கபில் தேவ் விளக்கம்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ். ஆல் ரவுண்டரான இவர் இந்திய அணிக்கு முதன்முதலாக உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர். அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பின் வீடு திரும்பியுள்ள கிரிக்கெட் ஜாம்பவனான கபில் தேவ் , ஆம் ஆத்மி கட்சியில் சேரப் போவதாக கடந்த சில தினங்களாக தகவல் ஒன்று பரவி வருகிறது. ஹரியானாவில் வருகிற 26ஆம் தேதி தன்னை ஆம் ஆத்மி கட்சியில் கபில் தேவ் இணைத்துக் கொள்வார் என்ற தகவலும், … Read more

டெல்லியில் நிலவும் மோசமான வானிலை.. இரு விமானங்கள் ரத்து.. 40 விமானங்கள் தாமதம்.!

டெல்லியில் மோசமான வானிலை நிலவும் சூழலில், சுமார் 40 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 18 விமானங்கள் தரையிறங்க முடியவில்லை. இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு விமானங்கள் ஜெய்ப்பூர் மற்றும் இதர அருகாமை மாநிலங்களின் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. Source link

தலித் தலைவர் வாயில் இருந்து உணவை எடுத்து சாப்பிட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ

பெங்களூர்: கர்நாடகாவின் பெங்களூர், சாம்ராஜ்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக ஜமீர் அஹமது கான் உள்ளார். இவர் அம்பேத்கர்  ஜெயந்தி மற்றும் ஈத் மிலன் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார்.  அப்போது, ஜமீர் அஹமது கான், தலித் அமைப்பின் தலைவர் ஒருவருக்கு இனிப்பை ஊட்டி விட்டார். பதிலுக்கு தலித் தலைவர் இனிப்பை ஊட்டி விட முற்பட்ட போது, அவரது வாயில் உள்ள இனிப்பை எடுத்து ஊட்டி விட சொல்லி ஜமீர் அஹமது கான் சாப்பிட்டார்.  இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகியுள்ளது. … Read more

மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முன்வர வேண்டும்: தமிழிசை

ஐதராபாத்: பெட்ரோல் டீசல் விலையை ஒன்றிய அரசு குறைத்தது போல் மாநில அரசும் குறைக்க முன்வர வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மாநில அரசும் வரியை குறைத்தால்தான் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறினார்.

போர்ச்சுகீசியர்களால் இடிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்டுவோம்: கோவா முதல்வர்

கோவா மாநிலத்தில் போர்ச்சுகீசியர்களால் சேதப்படுத்தப்பட்ட கோயில்களை புனரமைக்க வேண்டும் என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கியான்வாபி மசூதி சர்ச்சை எழுந்துள்ள நிலையில் கோவா முதல்வர் ‘தங்கள் மாநிலத்தில் போர்த்துகீசியர்களால் இடிக்கப்பட்ட கோயில்களை புனரமைக்க வேண்டும்’ என அழைப்பு விடுத்துள்ளார். மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து பேசிய கோவா முதல்வர், “போர்த்துகீசியர்களால் சேதப்படுத்தப்பட்ட கோயில்கள் புனரமைக்கப்பட வேண்டும். இன்றுவரை, கோவாவுக்கு சுற்றுலாப் பயணிகள் கடற்கரைகளுக்காக மட்டுமே ஈர்க்கப்படுகின்றனர், ஆனால் இப்போது அவற்றை கோயில்களுக்கு கொண்டு … Read more

கேரளத்தை உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி – நீதிமன்றம் தீர்ப்பு

கேரளத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் வரதட்சணை கொடுமை குறித்த பெரும் விவாதத்தை உருவாக்கிய சம்பவம், கொல்லம் விஸ்மயா வழக்கு. கொல்லம் மாவட்டம் சாஸ்தான்கோட்டையில் தன் கணவரின் வீட்டில் குளியலறையில் தொங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. தற்கொலை செய்துகொண்டதாக கணவர் தரப்பில் சொல்லப்பட்டாலும், அது மர்மமான மரணமாக அது பார்க்கப்பட்டது. வாட்ஸ்-அப் செய்திகள், அழைப்புப் பதிவுகள் அடிப்படையில் விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் கைதுசெய்யப்பட்டார். கேரள அரசும் அவரை முதலில் அவரைப் பணி இடைநீக்கமும் பின்னர் பணி நீக்கமும் … Read more