சிறுவனை உயிரோடு விழுங்கிய முதலை… குளிக்க சென்றபோது நிகழ்ந்த அதிர்ச்சி

மத்திய பிரதேச மாநிலம், ஷியோபோர் எனும் இடத்தில் ஓடும் சாம்பல் ஆற்றில் குளிக்க சென்றுள்ளான் 10 வயது சிறுவன். திடீரென சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர். அப்போது ஆற்றில் இருந்த முதலை அந்த சிறுவனை உயிரோடு அப்படியே விழுங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், முதலையிடமிருந்து சிறுவனை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அதற்குள் சிறுவனை முதலை மொத்தமாய் விழுங்கியுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் முதலையை கயிறு வீசி பிடித்து கரைக்கு இழுத்து … Read more

வனப்பகுதியில் அனுமதியின்றி நுழைந்து வீடியோ எடுத்த பெண் யுடியூபர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் யுடியூபர் அமலா அனு வனப்பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்தது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் புனலூர் வனப்பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததுமன்றி ஹெலிகேம் மூலம் வனப்பகுதி மற்றும் வன விலங்குகளை யுடியூபர் அமலா அனு வீடியோ எடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்மீது அம்பானூர் வனத்துறையினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   Source link

இலங்கைக்கு 44,000 டன் யூரியா அனுப்புகிறது இந்தியா

கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஒன்றிய அரசு 44,000 டன் யூரியா அனுப்ப உள்ளது. ஏற்கெனவே எரிபொருள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பப்பட்ட நிலையில் யூரியா வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.  

அசோகச் சின்னத்தில் செய்யப்பட்ட மாற்றம்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! முழு பின்னணி இதோ!

புதுடெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அமைக்கப்பட்ட தேசிய சின்னமான அசோகச் சின்னத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். 6.5 மீட்டர் உயரமுள்ள இந்த சின்னம் வெண்கலத்தால் ஆனது மற்றும் 9,500 கிலோ எடை கொண்டது. இது கட்டிடத்தின் மைய முகப்பின் உச்சியில் வார்க்கப்பட்டுள்ளது. மேலும் அதை தாங்கும் வகையில் சுமார் 6,500 கிலோ எடையுள்ள எஃகு தூண் அமைப்பு கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட அசோகச் சின்னம் எதிர்க்கட்சிகளிடையே பல எதிர்வினைகளை … Read more

“முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட தேநீர் சூடாக இல்லை”… விளக்கம் கோரி பொறுப்பு அதிகாரிக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ்!

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பருகுவதற்காக வழங்கப்பட்ட தேநீர் சூடாக இல்லை என, அதற்கான பொறுப்பு அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அன்று உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற சிவராஜ் சிங் சவுஹானிற்கு கஜுராஹோ விமான நிலையத்தில் தேநீர் மற்றும் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. அது குறித்த பணி ராகேஷ் என்ற அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்பாடு செய்த தேநீர் குளிர்ச்சியாகவும் தரம் குறைந்ததாகவும் இருந்துள்ளது. இதனையடுத்து, ராகேஷிடம் விளக்கம் கோரி … Read more

தற்போது குறுக்குவழி அரசியல் மிகப்பெரிய சவாலாக உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

ஜார்க்கண்ட்: தற்போது குறுக்குவழி அரசியல் மிகப்பெரிய சவாலாக உள்ளது என ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். குறுக்குவழி அரசியலில் இருந்து நாம் விலகியிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினர். 

ஜார்க்கண்ட் முதல்வரின் கனவை நிறைவேற்றிய பிரதமர் மோடி..! அப்படி என்ன செய்தார்?

ஜார்க்கண்ட் மாநிலத்தின் இரண்டாவது விமான நிலையமான தியோகர் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி; தனது கனவை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி இருப்பதாக முதல்வர் ஹேமந்த் சோரன் பெருமிதம் தெரிவித்துள்ளார். தியோகர் விமான நிலையம் உள்ளிட்ட 16,800 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் ஜார்க்கண்ட் மாநிலம் சென்றடைந்தார். ஜார்க்கண்ட் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை … Read more

அண்டை நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் இலங்கை மக்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும் – அமைச்சர் ஜெய்சங்கர்!

இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் உணர்வுபூர்வமானது மட்டுமல்லாமல் சிக்கலானதும் கூட என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்டை நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் இலங்கை மக்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று கூறினார். இலங்கை மக்கள் தங்களது வாழ்க்கையின் கடுமையான காலக்கட்டத்தை கடக்க இந்தியா உதவ நினைக்கிறது என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். Source link

மும்பை ஆரே கார் ஷெட் விவகாரம் ஆதித்யா மீது வழக்கு பதிய குழந்தைகள் ஆணையம் உத்தரவு: 3 நாளில் பதிலை சமர்ப்பிக்க போலீசுக்கு நோட்டீஸ்

மும்பை: மும்பை ஆரே கார் ஷெட்டுக்கு எதிரான போராட்டத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆதித்யா தாக்கரே மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மும்பை காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் சமீபத்தில் ஆட்சிக்கு வந்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு, ஆரே நிலத்தில் கார் ஷெட் அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு எதிராக சுற்றுசூழல் அமைப்பினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் முதல்வர் … Read more

மேல்நோக்கி பாய்ந்த அருவி.. என்ன காரணம் தெரியுமா? IFS அதிகாரியின் அடடே விளக்கம்!

இந்தியாவின் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது என்பதை அண்மை நாட்களாக பெய்து வரும் மழையே உணர்த்திவிடும். அதுவும், மும்பை, கோவா, குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தொடர் மழையால் சாலையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் வீடியோக்கள் பலவும் சமூக வலைதளங்கள் வாயிலாக காண முடிகிறது. அந்த வகையில், மகாராஷ்டிராவின் மும்பை, புனே போன்ற இடங்களில் கொட்டித் தீர்த்து வரும் மழையால் ஒரு புறம் மக்கள் தத்தளித்து வந்தாலும், மறுபுறம் அதனை கொண்டாடித் தீர்க்கவும் செய்கிறார்கள். #WATCH | Gujarat: … Read more