ஆம் ஆத்மி எம்பி சஸ்பெண்ட் – இதுவரை 24 எம்பிக்கள் மீது நடவடிக்கை!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர், அடுத்த மாதம் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் இரண்டு … Read more

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாமல் காங்கிரஸ் முதல்வர்கள் டெல்லியில் முகாம் – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை பராமரிக்காமல், மாநில முதல்வர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றஞ்சாட்டியுள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல என்று கூறினார். ஊழல் செய்யாதபோது பயம் எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.   Source link

ஆந்திர மாநிலத்தில் மின் ஊழியர்களின் நலனுக்காக பாடுபட்ட ஒரே முதல்வர் ஜெகன்மோகன்-ஜில்லா பரிஷத் தலைவர் பேச்சு

சித்தூர் :ஆந்திர மாநிலத்தில் மின் ஊழியர்களின் நலனுக்காக பாடுபட்ட ஒரே முதல்வர் ஜெகன்மோகன் தான் என்று ஜில்லா பரிஷத் தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.சித்தூர் அம்பேத்கர் பவனில் ஆஜாத்அம்ருத் மகோத்சவம் திட்டத்தின்கீழ் சித்தூர் ஜில்லா பரிஷத் தலைவர் வாசு தலைமையில் மின்துறை ஊழியர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, அவர் பேசியதாவது: இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஒவ்வொரு துறையை சேர்ந்த ஊழியர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. … Read more

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டம்: உறுதியாகிறது அமலாக்கத்துறையின் கைது அதிகாரம்!

“சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளது” என உள்ளிட்ட முக்கியமான சட்டபிரிவுகளை உறுதியப்படுத்தியுள்ளது உச்சநீதிமன்றம். சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையின் அதிகாரத்திற்கு எதிராக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட ஏராளமானோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் `சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்த … Read more

சீன எல்லையில் ரூ.15,500 கோடியில் புதிதாக சாலை

புதுடெல்லி: இந்திய எல்லைப் பகுதி கட்டமைப்பு தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் மாநிலங்களவையில் கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா – சீனா எல்லையில் 2,088 கிமீ நீளத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன மொத்த செலவு ரூ.15,447 கோடி ஆகும். பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் ஆகிய இந்திய எல்லைப் பகுதிகளையும் உள்ளடக்கி கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக 3,595 கிமீ நீளத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன செலவு ரூ.20,767 … Read more

PMLA: அமலாக்க துறைக்கு கைது செய்ய அதிகாரம் உண்டு – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அமலாக்கத் துறையினர், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சில விதிகளை எதிர்த்து, மெகபூபா முப்தி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கைது செய்யப்படுவதற்கான ஆதாரங்கள் மற்றும் ஆதாரங்களை காட்டாமல், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்கு தடையற்ற அதிகாரம் அமலாக்கத் துறைக்கு வழங்கப்பட்டது … Read more

நாடு முழுவதும் 26 தரமற்ற மருந்துகள் விற்பனை.!

நாடு முழுவதும் 26 தரமற்ற மருந்துகள் விற்பனை செய்வது தெரியவந்துள்ளதாக இந்திய மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஆயிரத்து 96 மருந்துகளை ஆய்வு செய்ததில் காய்ச்சல், இதய பாதிப்பு, வயிற்றுப்போக்கு, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக கூறியுள்ள மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அதன் விவரங்களை தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது. Source link

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ச்சியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

₹3,419 கோடிக்கு கரண்ட் பில்: ஷாக்கான நபருக்கு சிகிச்சை; மின்வாரியம் சொன்னது என்ன தெரியுமா?

இந்திய மக்கள் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் ஒரே விவகாரமாக இருப்பது மின்சார கட்டணம்தான். மின்சாரத்தால் ஷாக் வருகிறதோ இல்லையோ மின்சார கட்டணத்தை கண்டு ஷாக் ஆகுபவர்கள்தான் ஏராளமாக இருப்பர். அப்படியான சம்பவம்தான் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியிருக்கிறது. குவாலியரைச் சேர்ந்த பிரியங்கா குப்தா என்பவரின் மாமனார் தனது வீட்டில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கு கட்டணமாக 3,419 கோடி ரூபாய் என வந்ததை கண்டு உடல்நலம் குன்றி போயிருக்கிறார். இது தொடர்பாக மின்சாரத் துறையை அணுகி கேட்டபோது தெரியாமல் நடந்துவிட்டதாக … Read more

கேரள மருத்துவக் கல்லூரி முறைகேடு – பிரிட்டன் செல்ல முயன்ற பேராயர் தடுத்து நிறுத்தம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் டாக்டர் சோமர்வெல் மெமோரியல் சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி காரகோணம் மருத்துவக் கல்லூரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையின்போது அதிக அளவில் பணம் பெறப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியின் நிர்வாகியாகவும், தலைவராகவும் செயல்பட்டு வரும் பேராயர் ஏ.தர்மராஜ் ரசலம் நேற்று திருவனந்தபுரம் விமானநிலையத்திலிருந்து பிரிட்டன் செல்ல புறப்பட்டார். அப்போது … Read more