₹3,419 கோடிக்கு கரண்ட் பில்: ஷாக்கான நபருக்கு சிகிச்சை; மின்வாரியம் சொன்னது என்ன தெரியுமா?

இந்திய மக்கள் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் ஒரே விவகாரமாக இருப்பது மின்சார கட்டணம்தான். மின்சாரத்தால் ஷாக் வருகிறதோ இல்லையோ மின்சார கட்டணத்தை கண்டு ஷாக் ஆகுபவர்கள்தான் ஏராளமாக இருப்பர். அப்படியான சம்பவம்தான் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியிருக்கிறது. குவாலியரைச் சேர்ந்த பிரியங்கா குப்தா என்பவரின் மாமனார் தனது வீட்டில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கு கட்டணமாக 3,419 கோடி ரூபாய் என வந்ததை கண்டு உடல்நலம் குன்றி போயிருக்கிறார். இது தொடர்பாக மின்சாரத் துறையை அணுகி கேட்டபோது தெரியாமல் நடந்துவிட்டதாக … Read more

கேரள மருத்துவக் கல்லூரி முறைகேடு – பிரிட்டன் செல்ல முயன்ற பேராயர் தடுத்து நிறுத்தம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் டாக்டர் சோமர்வெல் மெமோரியல் சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி காரகோணம் மருத்துவக் கல்லூரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையின்போது அதிக அளவில் பணம் பெறப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியின் நிர்வாகியாகவும், தலைவராகவும் செயல்பட்டு வரும் பேராயர் ஏ.தர்மராஜ் ரசலம் நேற்று திருவனந்தபுரம் விமானநிலையத்திலிருந்து பிரிட்டன் செல்ல புறப்பட்டார். அப்போது … Read more

Praveen Nettaru: பாஜக இளைஞரணி நிர்வாகி படுகொலை – கர்நாடகாவில் பதற்றம்!

கர்நாடக மாநிலத்தில், பாஜக இளைஞரணி நிர்வாகி வெட்டி படு கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில், பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளராக இருந்தவர் பிரவீன் நெட்டாரு. இவர் நேற்று இரவு தனது கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிளில் வந்து, கோடாரி, அரிவாளால் அவரை சரமாரியாகத் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரவீன் … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தியிடம் 3-வது நாளாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவிடம் 3ம் நாளாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. ஏற்கனவே 2 நாட்கள் டெல்லியில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகியிருந்த நிலையில், 3வது நாளான இன்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ஆஜரானார். ஜூலை 22ம் தேதியன்று முதன்முதலாக ஆஜரான நிலையில், அவரிடம் அமலாக்கத்துறையினர் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன்பின் நேற்றைய தினமும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதையடுத்து மீண்டும் சோனியா காந்தி ஆஜரானார். நேற்று சுமார் … Read more

'நாட்டின் அடையாளமான பிரதமர் மோடியின் படம் இனி எல்லா இடங்களிலும் வேண்டும்’- தமிழிசை

“செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் இடங்களில், நாட்டின் அடையாளமான மோடியின் படம் இல்லை என்பது வருத்தமாக உள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் கவனிக்க வேண்டும்” என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் புதுச்சேரி கடற்கரையில் தியாகச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் ஆயிரம் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த தியாகச்சுவர் அமைக்கும் … Read more

'ஆன்லைனில்' திருத்தம் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிகிறது..!!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 26-ம் தேதி வரை வழங்கப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-க்கு 2,30,878 பேரும், தாள் 2-க்கு 4,01,886 என மொத்தம் 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கைகள் தொடர்ந்து அலுவலகத்திற்கு பெறப்பட்டு வந்தது. விண்ணப்பத்தாரர்களின் … Read more

'ஆன்லைனில்' திருத்தம் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிகிறது..!!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 26-ம் தேதி வரை வழங்கப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-க்கு 2,30,878 பேரும், தாள் 2-க்கு 4,01,886 என மொத்தம் 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கைகள் தொடர்ந்து அலுவலகத்திற்கு பெறப்பட்டு வந்தது. விண்ணப்பத்தாரர்களின் … Read more

காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதி முறைகேடு: பரூக் அப்துல்லா மீது குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் நிதி முறைகேடாக எடுக்கப்பட்டு நிர்வாகிகளின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா (84) தவறாக பயன்படுத்தி சில நியமனங்களை செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியது. இது தொடர்பாக பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை பல முறை விசாரணை நடத்தியுள்ளது. கடைசியாக கடந்த மே … Read more

ஹைதராபாத் அருகே பாலத்தை கடக்க முயன்ற இளைஞர் வெள்ளத்தில் சிக்கினார்: நீண்ட நேர போராட்டத்திற்கு பின் இளைஞர் உயிருடன் மீட்பு…

தெலுங்கானா: ஹைதராபாத் அருகே பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை பைக்குடன் காவல் துறையினர் மீட்டனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. நேற்று கனமழையின் காரணமாக ஹிமயட்சகர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகமாக இருந்ததன் காரணமாக அதில் இருந்த 4 மதகுகள் 2 அடி உயர்த்தப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக டி.எஸ்.பியா முதல் ராஜேந்திரா நகர் வரை … Read more

பாஜக இளைஞரணி நிர்வாகி கொலை – கர்நாடகாவில் பெரும் பதற்றம் – பழிக்கு பழியா?

கர்நாடகாவில் பாஜக இளைஞரணி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் தக்ஷின் கன்னடா மாவட்டத்தில் உள்ள பெல்லாரே கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் நெட்டாரு (26). இவர் பாஜக இளைஞரணி நிர்வாகியாக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை தனது வீட்டுக்கு அருகே இருந்த கடையில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பிரவீன் நெட்டாருவை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினர். … Read more